வாருங்கள், Tharujan!

வாருங்கள் Tharujan, உங்களை வரவேற்கிறோம்!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Kanags \பேச்சு 11:01, 26 டிசம்பர் 2009 (UTC)

மகாவம்ச மனோநிலையில் சிங்களரும் ஈழத்தீவில் தமிழரும் - 01.

தொகு

"சிங்களத் தேசம் இன்னும் மகாவம்ச மனவுலகில், அந்தப் புராணக் கருத்துலகிற் புதைந்து போய்க் கிடக்கிறது. இலங்கைத் தீவானது தேரவாத பௌத்தத்தின் தெய்வீகக் கொடையென்றும் சிங்கள இனத்திற்கே உரித்தான சொத்துடைமை என்றும் மகாவம்சம் திரித்துவிட்ட புனைகதையிற் சிங்கள மக்கள் இன்னும் சிக்குண்டு கிடக்கிறார்கள்.அடிமனதில் ஆழமாக உறைந்து, அசைவற்றதாக இறுகிப் போன இந்தப் புராணக் கருத்து நிலையிலிருந்து சிங்களத் தேசம் விடுபடப்போவதில்லை" - தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள்.

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் மேற்போந்த கூற்று எவ்வளவு தீர்க்கதரிசனமானது என்பதை நடைமுறையில் இலங்கைத் தீவில் காணக்கூடியதாக இருக்கிறது. மாறி மாறி ஆட்சிக்கு வரும் சிங்கள பெரும்பான்மைக் கட்சிகள் தமிழினத்துக்கெதிரான ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்து, தமிழரின் பாரம்பரிய நிலங்களில் ஆக்கிரமிப்பைச் செய்து முற்று முழுதாக தமிழரை ஈழத்திலிருந்தும் ஒழிக்கும் செயற்பாடுகளிலேயே முனைப்பைக் காட்டி வருகின்றனர். இலங்கைத் தீவிற்கு, சிங்களருக்குப் பின் வந்தேறிய குடிகளே தமிழர் என தவறான பரப்புரைகளைச் செய்து முழு இலங்கையும் சிங்களருக்கே உரித்தானது எனும் தோற்றப்பாட்டையும் ஏற்படுத்தி வருகின்றனர். ஈழத்தில் தமிழர் வரலாறு பற்றிய தவறான கருத்துகள் இன்னுங்கூட பலரிடத்தில் அதிலும் தமிழர்களிடத்திலேயே காணப்படுவது வேதனைக்குரியதே.

எஞ்சி இருக்கும் குறுகிய கால இடைவெளிக்குள், ஈழத்தில் தமிழரின் வரலாற்றுத் தொன்மை பற்றிய சில விடயங்களை சுருக்கமாகப் பகிர்ந்து கொள்ள விரும்பி இப்பதிவைத் தொடர்கிறேன். இதற்கு உசாத்துணையாக மதிப்புக்குரிய பேராசான் க கணபதிப்பிள்ளை - மயில்வாகனப் புலவர் - திரு வெ.க நடராசா - பண்டிதர் கா.பொ இரத்தினம் ஆகியோரின் வரலாற்று நூல்களையும் மற்றும் மகாவம்சத்தையும் கொண்டு தொடர்கிறேன்.

பண்டைய ஈழம்

தொகு

கடல் கொண்ட பழந்தமிழ்க் கண்டமாகிய குமரிக் கண்டத்தின் ஒரு பகுதியாக பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஈழம் இலங்கியது. சேர சோழ பாண்டிய நாடுகளுடன் ஈழநாடும் சேர்ந்து மிகப்பெரிய தமிழகமாக விளங்கியது. இப்பண்டைய தமிழகத்தை ஆண்ட தமிழ் மன்னர்களுள் மனு சிறப்பு மிக்க அரசனாக விளங்கினான். நாற்பத்து நான்கு ஆண்டுகள் வரை தமிழகத்தை ஆண்ட இம்மன்னன் புராதன காலத்திலேயே மிக நுணுக்கமான சட்டங்களைக் கொண்டு மனுதர்ம சாத்திரம் எனும் நூலை யாத்தான். இம்மன்னனுக்கு சமன் என்று ஒரு மகனும் ஈழம்என்று ஒரு மகளும் இருந்தனர். மனு அரசனின் மறைவுக்குப் பின் பரந்த தமிழகத்தின் தென்னகத்தை சமனும் அதின் வடபுலத்தை ஈழமும் ஆண்டு வந்தனர். ஈழம் எனப்பட்ட மனுவின் மகளுக்கு குமரி என்றும் பெயருண்டு. இவளது ஆட்சி இருந்த பகுதி குமரிக்கண்டம் என வழங்கப்படலாயிற்று. இந்தக் குமரிக்கண்டத்திலேயே இலங்கை நாடு இருந்தமையால் அதற்கு ஈழ நாடு எனவும் பெயர் உருவானது.


கால ஓட்டத்தில் கடல்கோளினால் ஈழம், பாரத தேசத்தினின்று நீரினால் பிரிக்கப்பட்ட பின்பும் தமிழ்நாட்டுக்கொப்பாக தமிழ்ச் சங்கங்களை நிறுவி தமிழை வளம்படுத்தி வந்துள்ளது. இராமாயணம் எனும் இதிகாசம் இலங்கைத் தீவு இராவணனால் ஆளப்பட்டு வந்த நாடு எனக் குறிப்பிடுகிறது. இராவணன் அசுரர் வம்சத்தவன். இயக்கர் இனத்தைச் சேர்ந்தவன் எனவும் கருதப்படுகிறது. ஈழத்தின் மூத்த குடிகளாக இயக்கர் - நாகர் என்போரே கருதப்படுகின்றனர். அக்காலத்தில் பாரத தேசத்தில் வாழ்ந்த நாக சாதியினரையே அங்கு பின்வந்தேறிய குடிகளான ஆரியர் அசுரர் என்றும் தாசர் என்றும் அழைத்தனர் என்கின்றனர் வரலாற்றாளர்.

நாகர் எனும் சொல் குறித்த நேரடியான குறிப்புகள் எதுவும் வேதங்கள் எதிலும் வழங்கப்படாத போதும் இருக்கு வேதத்தில் அஹி (பாம்பு) எனும் சொல் மூலம் நாகர் பற்றிய விபரணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அரிவம்சம் எனும் புராண நூல் தூய வர்மன் எனும் நாக அரசனைப் பற்றிக் கூறுகிறது. தூயவர்மன் என்பவன் இரத்தினதுவீபம் ( ஈழத்தின் பண்டைய பெயர்களில் ஒன்று) எனும் நாட்டரசன் என்றும் அந்நாட்டவர் நாவாய் பல வைத்திருந்தனர் என்றும் கடல் வாணிபம் மற்றும் முத்துக் குளித்தல் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தனர் என்றும் கூறிச் செல்கிறது. திருக்கோணோச்சரம் இராவணன் வெட்டு - திருக்கோணமலை, தமிழீழம்

தவிர, நாகதீபம் - கல்யாணி எனும் இடங்களிலும் நாகர் வசித்து வந்தனர் என்பதை மகாவம்சம் கூறுகிறது. இந்நாகர்களே பழந்தமிழ்க் குடிகள். இவர்கள் தமிழ் மொழியைப் பேசி தமிழ் நாகரிகத்தில் சிறந்து விளங்கினர். முரஞ்சியூர் முடிநாகராஜர் முதற்சங்க காலப் புலவர். நன்னாகனார், மதுரை மருதனிள நாகனார் என்போர் கடைச் சங்க காலத்தவர். நாகதீபம் பற்றிய செப்பேட்டுச் சாசனம் ஒன்று யாழ் வல்லிபுரக் கோயிலிலே கண்டெடுக்கப்பட்டது. இதன்படி, வடக்கே ஈழத்தின் நாகர் தலைநகராய் இருந்தது கந்தரோடை என்றும் இப்பகுதி மிகவும் செழிப்புள்ள வணிகத்தலமாக விளங்கியது எனவும் அறியப்படுகிறது. ஆக இன்றைய தமிழகத்தில் தமிழர் எவ்வாறு தமக்கான பூர்வீக வரலாற்றைக் கொண்டிருக்கிறார்களோ அவ்வாறே ஈழத்திலும் தமிழர்கள் தமது பூர்வீகத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

விஜய வருகை - ஈழத்தில் ஆரியரின் முதற்குடியேற்றம்

தொகு

ஈழத்தில் ஆரியரின் குடியேற்றம் விஜயாவினது வருகையுடன் தொடங்கியது. லாலா நாட்டினரசன் சிஹபாபுவுக்கும் சிஹசீவாலிக்கும் பிறந்த பதினாறு இரட்டைக் குழந்தைகளில் மூத்தவரே விஜயா. விஜய பற்றிக் குறிப்பிடும் மகாவம்சம் இவ்வாறு சொல்கிறது:

விஜயா மிகவும் கொடூரமானவராக இருந்தார். அவரைச் சுற்றி கொடுமைகள் புரிந்தவர்களே நிறைய இருந்தனர். அவனுடைய கொடுமைகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் போன மக்கள் மன்னனிடம் சென்று அவன் செய்த கொடுமைகளைப் பற்றிக் கூறி அவனை அடக்கி வைக்க வேண்டுமென வேண்டினார். மன்னனும் தன் மகனிடம் பலவிதத்திலும் அவனுடைய தவறை எடுத்துக் கூறினார். பலமுறை அவனைத் திருத்த முயன்றார். ஆனாலும் அவன் திருந்தவில்லை என்பதினால் கோபமுற்ற மக்கள் மன்னனிடம் சென்று 'உங்கள் பிள்ளையைக் கொல்ல வேண்டும்' என வேண்டினர்.

ஆகவே அந்த மன்னன் விஜயாவையும் அவனுடன் அவனுடைய எழுநூறு ஆட்களையும் பிடித்து அனைவரின் தலையையும் பாதி மொட்டை அடித்து அவர்களின் குடும்பத்துடன் மூன்று கப்பலில் ஏற்றி நாடுகடத்தினார். (மகாவம்சம் 6ஆம் அத்தியாயம் - விஜயன் வருகை). .

விஜயனின் வருகை பற்றி மகாவம்சத்தில் கூறப்படவை ஈழத்தில் ஆரியரின் குடியேற்றத்தை விளக்க எழுந்த மரபுக் கதைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவையே. இவை வாய்மொழியாக பேணப்பட்டு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னாக எழுதப்பட்டிருப்பதால், இவை பற்றின உண்மைகள் எவ்வளவென்பது கூறமுடியாது. இதே வேளை, பௌத்த மதம் உருவான பின் அதைத் தழுவிய மக்களிடையே இவ்வாரியக் குடியேற்றங்கள் குறித்த மரபுக்கதைகள் வடஇந்தியாவிலும் பேசப்பட்டு வந்திருக்கின்றன என்பதைதிவ்வியவதன,வலாஹஸ்ஸ ஜாதக போன்ற நூல்களிலும் பாஹியன், ஜூவான் சாங் ஆகிய இரு சீன யாத்திரிகர்களின் நினைவுக் குறிப்புகளிலும் காணப்படினும் மகாவம்சத்தினின்றும் இவை சில மாறுபாடான கதைகளையே கூறுகின்றன.

இவற்றின் சாரமாக, கி.மு 500 ஆம் ஆண்டளவில் விஜயன் தம்பபன்னி என்னும் இடத்தில் வந்திறங்கினான். அவன் ஈழத்திற்கு வந்த போது குவேனி எனும் இயக்கர் இன தலைவியைச் சந்திக்கிறான். அவளை மணம் முடித்து அங்கு தலைவனாகின்றான். இருப்பினும் முடிசூடுவதற்கேதுவாக குவேனி அரச பரம்பரையைச் சேராதவளாயிருந்ததால் தனது தோழர்கள் மற்றும் தூதுவர்களையனுப்பி மதுரையில் பாண்டிய நாட்டு மன்னனின் மகளை மணம்செய்து கொள்ள விரும்புவதாகக் கூறி அவளை அழைப்பித்து மணமுடிக்கின்றான். அவ்வாறே அவனது தோழர்களும் பாண்டிய நாட்டு மகளிரை மணந்து கொள்கின்றனர்.இவ்வாறு தொடங்குகிறது ஈழத்தில் சிங்களரின் தோற்றம்.

விஜயனுக்கு வாரிசு ஏதும் இல்லாத காரணத்தால் தனக்குப் பின் தனது அரசைப் பொறுப்பேற்க வருமாறு அழைத்து லாலா நாட்டிலிருந்த தனது சகோதரனுக்கு செய்தி அனுப்புகிறான். இதற்கமைய விஜயனின் சகோதரனின் மகனான பண்டுவாசுதேவன் தனது முப்பத்துமூன்று மக்களுடன் இரண்டாவது ஆரியக் குழுவினராக ஈழத்தீவில் குடியேற வந்திறங்கினர். இவ்வாறு காலத்திற்குக் காலம் இடம்பெறத் தொடங்கிய ஆரியக் குடியேற்றங்கள் ஈழத்தின் பெருநிலப்பரப்பை ஆக்கிரமித்துக் கொள்கின்றன.


பன்னெடுங் காலத் தொன்மை வாய்ந்த தமிழ் மொழி வழங்கி வந்த ஈழத்தீவில் சிங்களம் எனும் மொழி, தமிழோடு கலந்த ஆரிய மொழிகளால் உருவாக்கப்பட்டு ஒரு தீவு இரு மொழிகள் எனும் நிலை உருவானது.

எம்முன்னோர் எமக்கு அருளிச் சென்ற அருஞ்செல்வமான அன்னைத்தமிழ் மொழியையும் எம் தமிழர் பண்பாட்டு விழுமியங்களையும் காத்து நின்று எம் அன்னை மண்ணின் விலங்கறப் போராட வேண்டிய கடப்பாடு எம்மனைவருக்கும் உள்ளது என்பதை உலகெங்கும் பரந்து வாழும் தமிழரனைவரும் உணர்ந்து செயற்படுவோம்.

தொடரும் விடயங்களுடன் தமிழீழ தாயகத்திலிருந்து மீண்டும் சந்திக்கும் வரை...

Heading text

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Tharujan&oldid=492263" இலிருந்து மீள்விக்கப்பட்டது