பரிசில் துறை
பரிசில் துறை என்னும் துறை வகுக்கப்பட்ட 17 பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. இவை பாடாண் திணைப் பாடல்கள்.
புறநானூறு
தொகு- வானவன் மேலைக்கடலில் நாவாய் ஓட்டியபோது பிற நாவாய்கள் செல்லாத்து போல காரி வழங்கும்போது பிறரால் வழங்க முடியவில்லையாம். [1]
- தெருவில் போய்க்கொண்டிருக்கும் பரிசிலரைக் கண்டாலே ஆய் அவர்களை அழைத்து யானைகளை வழங்குவான். [2]
- நாஞ்சில் வள்ளுவன் மூவேந்தரை நினைக்காத அளவு வழங்குவான். [3]
- நள்ளி போல் பிறர் வழங்க மாட்டார்கள். [4]
- கொண்கானங்கிழானை மன்னர் நெருங்க முடியாது. புலவர் நெருங்கி அளவளாவலாம். [5]
- குமணன் மழைபோல் வழங்குவான். [6]
- பிட்டங்கொற்றன் கொடையைப் புலவர்கள் தமிழகமெல்லாம் பரப்பினர். [7]
- விச்சிக்கோன் பாரிமகளிரை மணந்துகொள்ள வேண்டுதல் பரிசில் துறை. [8]
- இருங்கோவேள் பாரிமகளிரை மணந்துகொள்ள வேண்டுதல் பரிசில் துறை. [9]
- இன்னும் கொள்க என சேரமான் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி வழங்குவான். [10]
- பிறர் வழங்கும் கொடை கடல்நீர் போன்றது. ஓரி வழங்கும் கொடை ஊற்றுநீர் போன்றது. [11]
- மழை வழங்கும் கொண்மூ போல கடியநெடுவேட்டுவன் வழங்குவான். [12]
- அதியமான் ஔவைக்குப் பரிசில் வழங்கக் காலம் கடத்தியதும் பரிசில் துறை. [13]
- இளவெளிமான் சிறிது கொடுப்பக் கொள்ளாது பெருஞ்சித்திரனார் பாடியதும் பரிசில் துறை. [14]
- அதியமான் பெருஞ்சித்திரனாரைக் காணாது பிறர் வழியே அனுப்பிவைத்த பரிசிலைப் பெருஞ்சித்திரனார் ஏற்க மறுத்ததும் பரிசில் துறை. [15]
- ஓய்மான் வில்லியாதன் தானே சமைத்து விருந்து படைத்தான். [16]
இலக்கண நூல்கள் விளக்கம்
தொகுபரிசில் கடாநிலை, பரிசில் விடை ஆகிய துறைகளைப் பாடாண் திணையின் பகுதியாகக் குறிப்பிடும் தொல்காப்பியம் இதனைத் தனியொரு துறையாகக் குறிப்பிடவில்லை. புறப்பொருள் வெண்பாமாலை இதனைத் தனியொரு துறையாகச் சுட்டுகிறது. இந்தப் பரிசில் இன்னார் கொடுத்தது என்று கூறுவது ‘பரிசில் துறை’ என்கிறது. மண்ணகம் காவல் மன்னன் முன்னர் எண்ணிய பரிசில் இது என உரைத்தன்று. (புறப்பொருள் வெண்பாமாலை 193) வரிசை கருதாது வான்போற் றடக்கைக் குரிசினீ நல்கயாங் கொள்ளும் - பரிசில் அடுகள மார்ப்ப வமரோட்டித் தந்ந படுகளி நால்வாய்ப் பகடு.
அடிக்குறிப்பு
தொகு- ↑ மாறோக்கத்து நப்பசலையார் புறநானூறு 126,
- ↑ உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் புறநானூறு 135,
- ↑ ஒருசிறைப் பெரியனார் புறநானூறு 137,
- ↑ வன்பரணர் புறநானூறு 148,
- ↑ மோசிகீரனார் புறநானூறு 154,
- ↑ பெருஞ்சித்திரனார் புறநானூறு 161,
- ↑ கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் புறநானூறு 168,
- ↑ கபிலர் புறநானூறு 200,
- ↑ கபிலர் புறநானூறு 201, 202,
- ↑ ஊன்பொதி பசுங்குடையார் புறநானூறு 203,
- ↑ கழைதின் யானையார் புறநானூறு 204,
- ↑ பெருந்தலைச்சாத்தனார் புறநானூறு 205,
- ↑ புறநானூறு 206,
- ↑ புறநானூறு 207,
- ↑ புறநானூறு 208,
- ↑ புறத்திணை நன்னாகனார் புறநானூறு 379