பரிசுத்த வேதாகமம் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம் (நூல்)
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
பேரா. சிட்னி சுதந்திரன் எழுதிய பரிசுத்த வேதாகமம் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம் என்கிற நூல் 147 பக்கங்களில் இந்திய மதிப்பில் 90 ரூபாய் விலையில் நூலாசிரியரின் சொந்த முயற்சியில் வெளியிடப்பட்டுள்ளது.
பரிசுத்த வேதாகமம் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம் | |
---|---|
நூல் பெயர்: | பரிசுத்த வேதாகமம் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம் |
ஆசிரியர்(கள்): | பேரா. சிட்னி சுதந்திரன் |
வகை: | ஆன்மிகம் |
துறை: | கிறித்தவ வேதாகமம் |
இடம்: | 2B, ஜெபமாளிகை தெரு, பாளையங்கோட்டை, திருநெல்வேலி - 627002, தொலைபேசி: +91-462-2560593 , நகர்பேசி:+91-9952801284 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 147 |
பதிப்பகர்: | சிட்னி சுதந்திரன் |
பதிப்பு: | ஆகஸ்ட் - 2010 |
ஆக்க அனுமதி: | ஆசிரியருடையது |
நூலாசிரியர்
தொகுபேராசிரியர். எ.சிட்னி சுதந்திரன் தாவரவியலில் எம்.எஸ்.சி., எம்.ஃபில் பட்டங்களைப் பெற்று திருநெல்வேலி, பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் தாவரவியல் பேராசியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 2000 ஆம் ஆண்டில் இலக்கிய ஆர்வம் மேலிட பாளை சுசி எனும் புனைப்பெயரில் கவிதை, கட்டுரை, சிறுகதைகள் என எழுதத் துவங்கிய இவரது படைப்புகள் தமிழ்நாட்டின் பல முன்னணி அச்சிதழ்களிலும், கல்லூரி மலர்களிலும் வெளியாகி இருக்கின்றன. ஓவியம் வரைதல், கித்தார் வாசித்தல், ஹாக்கி, டென்னிஸ் விளையாட்டுக்கள் போன்றவற்றிலும் ஆர்வமுடையவர். இவற்றிலும் பல பரிசுகளைப் பெற்றிருக்கிறார்.
முன்னுரை
தொகுஇந்நூலுக்கு இறையியல் வல்லுனர் டாக்டர் தாமஸ் தங்கராஜ் முன்னுரை எழுதியிருக்கிறார்.
வாழ்த்துரை
தொகுசென்னை கிறித்துவக் கல்லூரியின் தாவரவியல் துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற தாவரவியல் விஞ்ஞானி பேராசிரியர் டாக்டர் பி. தயானந்தன் இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கியிருக்கிறார்.
அறிமுக உரை
தொகுஇந்நூலுக்கு தமிழ்நாடு - புதுச்சேரி மாநிலங்களுக்கான கத்தோலிக்கப் பேரவைச் செயலாளர் முனைவர் பா. வளன் அரசு அறிமுக உரை அளித்திருக்கிறார்.
பொருளடக்கம்
தொகுஇந்நூல்
- வேதாகமத்தின் வரலாறு
- தமிழ் வேதாகமம்
- வேதாகம நூல்களின் அறிமுகம்
-என்கிற மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
வேதாகமத்தின் வரலாறு
தொகுஇந்தப் பகுதியில் இந்த நூலுக்கான முன்னுரை, பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு, தோமா அப்போஸ்தலர், போர்ச்சுக்கீசியர் வருகை, சீகன்பால்க் எனும் தலைப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளன.
தமிழ் வேதாகமம்
தொகுஇந்நூலின் இரண்டாம் பகுதியான இதில் மூலப்பிரதிகள், வேதாகமத்தில் இறைப்பெயர்கள், தமிழில் வேதாகமம் மொழிபெயர்க்கப்படுதல், சீகன்பால்க் மொழிபெயர்ப்பு, பெஞ்சமின் சூல்ச் ஐயர், பப்ரீஷியஸ் மொழிபெயர்ப்பு, இரேனியஸ், பீற்றர் பெர்சிவல், ஹென்றி பவர் ஐக்கிய மொழிபெயர்ப்பு, ஹென்றி பவர், முத்தையா பிள்ளை, கால்டுவெல் ஐயர், சார்ஜண்ட் ஐயர், வில்லியம் திறேசி, ஸ்கடர், ஸ்போல்டிங் ஐயர், மைறன் வின்ஸ்லோ ஐயர், பிறதேட்டன் ஐயர், யோவான் கில்னர் ஐயர், கோல்ப் ஐயர், இராஜகோபால், லார்சன் மொழிபெயர்ப்பு, மோனகன், திருவிவிலியம், தள்ளுபடி ஆகமங்கள் எனும் தலைப்புகளில் தமிழ் வேதாகமம் குறித்த பல தகவல்கள் தரப்பட்டுள்ளன.
வேதாகம நூல்களின் அறிமுகம்
தொகுஇந்நூலின் மூன்றாம் பகுதியான வேதாகம நூல்களின் அறிமுகம் எனும் பகுதியில் பரிசுத்த வேதாகமம், பழைய ஏற்பாடு, பழைய ஏற்பாடு - காலக்குறிப்பு, பஞ்சாகமம், சிறையிருப்புக்கு முன் நூல்கள், சிறையிருப்புக்கு பின் நூல்கள், யோசுவா, நியாதிபதிகள், ரூத், 1, 2 சாமுவேல், 1, 2 ராஜாக்கள், 1, 2 நாளாகமம், எஸ்றா, நெகேமியா, எஸ்தர், பழைய ஏற்பாட்டு செய்யுள் நூல்கள், யோபு, சங்கீதம், நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதப்பாட்டு, தீர்க்கதரிசன நூல்கள், பெரிய தீர்க்கதரிசன நூல்கள், ஏசாயா, எரேமியா, புலம்பல், எசேக்கியல், தானியேல், சின்ன தீர்க்கதரிசன நூல்கள், அக்காலத்து 4 பேரரசுகள், ஓசியா, யோவேல், அமோஸ், ஒபதியா, யோனா, மீகா, நாகூம், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா, மல்கியா, இணைத் திருமுறை நூல்கள், புதிய ஏற்பாடு, நான்கு நற்செய்தி நூல்கள், மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான், அப்போஸ்தலர் நடபடிகள், ரோமர், 1.கொரிந்தியர், 2.கொரிந்தியர், கலாத்தியர், எபேசியர், பிலிப்பியர், கொலொசெயர், 1, 2 தெசலோனிக்கேயர், 1 தீமோத்தேயு, 2 தீமோத்தேயு, தீத்து, பிலேமோன், எபிரேயர், யாக்கோபு, 1 பேதுரு, 2 பேதுரு 1 யோவான், 2,3 யோவான், யூதா, வெளிப்படுத்தின விஷேசம் ஆகிய தலைப்புகளில் சிறப்பான தகவல்கள் தரப்பட்டு முடிவுரையும் அளிக்கப்பட்டுள்ளது.
வெளி இணைப்புகள்
தொகு- பரணிடப்பட்டது 2013-07-02 at the வந்தவழி இயந்திரம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |