பலுசிஸ்தான் விடுதலை இராணுவம்

பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் (Balochistan Liberation Army) மேற்குப் பாகிஸ்தானின் மலைப்பகுதியிலுள்ள தீவிரவாதக் குழு ஆகும்.[3] 2000 ஆம் ஆண்டின் கோடைக்காலத்தின் போதே இக்குழுவைப் பற்றி தெரிய வந்தது. இத்தீவிரவாதக் குழுவின் தற்போதைய தலைவர் ஹைர்பையர் மார்ரி ஆகும். சுமார் 500 போராளிகளைக் கொண்டது இத்தீவிரவாதக் குழு.[4][5]

பலுசிஸ்தான் விடுதலை இராணுவம்
இயங்கிய காலம்
கொள்கை பலுசிஸ்தான் பிரிவினை
தலைவர்கள் ஹைர்பையர் மார்ரி [1]
செயற்பாட்டுப்
பகுதி
பலூசிஸ்தான், பாகிஸ்தான்
ஆப்கானித்தான்[2]
எதிராளிகள்  பாக்கித்தான்
 ஈரான்

தடை தொகு

இக்குழுவானது 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீவிரவாதக் குழு என பாகிஸ்தான் அரசால் அறிவிக்கப்பட்டது. இக்குழுவானது பாகிஸ்தானில் பொதுமக்கள் மீதும், ராணுவ வீரர்கள் மீதும் பத்திரிகையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து இவ்வாறு அறிவிக்கப்பட்டது.[2] 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் தியதி இங்கிலாந்து இக்குழுவை தீவிரவாதக் குழு என அறிவித்தது.[6] இக்குழுவின் செயல்பாடுகள் தீவிரத்தன்மை வாய்ந்தவை என அமெரிக்கா அறிவித்தது.[7] ஆனாலும் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இக்குழுவை தீவிரவாதக் குழு என அறிவிக்கவில்லை.[8] பாகிஸ்தான் அதிகாரிகள் இக்குழுவிற்கு இந்தியா உதவி செய்கிறது எனக் கூறுகின்றனர்.[9]

தாக்குதல் தொகு

முகமது அலி ஜின்னா தனது கடைசிக் காலத்தில் வாழ்ந்த வீடான க்வைத்-இ-அசாம் ரெஸிடன்ஸி 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெடிபொருட்களால் தாக்கப்பட்டு பலத்த சேதமடைந்தது. இத்தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் பொறுப்பேற்றுக் கொண்டது. மேலும் அந்நினைவிடத்தில் இருந்த பாகிஸ்தான் நாட்டுக் கொடி அகற்றப்பட்டு பலுசிஸ்தான் ராணுவத்தினரின் கொடி ஏற்றப்பட்டது.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "Nawabzada Hyrbyair Marri | Baloch Leader @ Pakistan Herald". Pakistanherald.com. Archived from the original on 2013-12-19. பார்க்கப்பட்ட நாள் 2013-06-15.
  2. 2.0 2.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-01-02. பார்க்கப்பட்ட நாள் 2013-12-31.
  3. "Rockets hit south-west Pakistan". BBC. 14 December 2005. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/4527966.stm. 
  4. Butt, Qaiser (1947-08-14). "Heritage under attack: PkMAP says it views Ziarat Residency as a 'symbol of slavery' – The Express Tribune". Tribune.com.pk. பார்க்கப்பட்ட நாள் 2013-06-17.
  5. 5.0 5.1 Reuters. "BLA claims attack on Jinnah residency in Ziarat – The Express Tribune". Tribune.com.pk. Archived from the original on 2013-06-30. பார்க்கப்பட்ட நாள் 2013-06-17. {{cite web}}: |author= has generic name (help)
  6. Richard Ford (18 July 2006). "Militant Islamist groups banned under terror law". தி டைம்ஸ்.
  7. "Chapter 2 -- Country Reports: South and Central Asia Overview". Office of the Coordinator for Counterterrorism. April 30, 2007. Archived from the original on 2011-02-04. பார்க்கப்பட்ட நாள் 2013-12-31.
  8. "Terrorist Organization Profile - START - National Consortium for the Study of Terrorism and Responses to Terrorism". Start.umd.edu. Archived from the original on 2012-06-23. பார்க்கப்பட்ட நாள் 2013-06-17.
  9. "India backing Balochistan Liberation Army: Rehman Malik". Asian Tribune. 2009-04-23. Archived from the original on 2012-07-17. பார்க்கப்பட்ட நாள் 2013-06-15.