பல்லவன் அதிவேக விரைவு வண்டி
பல்லவன் அதிவேக விரைவுவண்டி (Pallavan Super-fast Express) காரைக்குடியிலிருந்து சென்னை எழும்பூர் வரை இயங்கும் அதிவேக விரைவுவண்டியாகும். இது திருச்சிராப்பள்ளி, அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகியவை இதன் வழித்தடமாகும். 426 கி.மீ. தூரத்தை 06 மணி 50 நிமிடங்களில் கடக்கிறது.
பல்லவன் அதிவேக விரைவுவண்டி | |||
---|---|---|---|
பல்லவன் அதிவேக விரைவுவண்டி சென்னை எழும்பூர் இரயில் நிலையம் | |||
கண்ணோட்டம் | |||
வகை | அதிவேக விரைவு | ||
நிகழ்நிலை | செயலில் உண்டு | ||
நிகழ்வு இயலிடம் | தமிழ்நாடு | ||
முதல் சேவை | 15 ஆகத்து 1984 | ||
நடத்துனர்(கள்) | தெற்கு இரயில்வே | ||
சராசரி பயணிகளின் எண்ணிக்கை | அதிவேக விரைவு | ||
வழி | |||
தொடக்கம் | காரைக்குடி (KKDI) | ||
இடைநிறுத்தங்கள் | 11 | ||
முடிவு | சென்னை எழும்பூர் (MS) | ||
ஓடும் தூரம் | 426 km (265 mi) | ||
சேவைகளின் காலஅளவு | தினசரி | ||
தொடருந்தின் இலக்கம் | 12605 / 12606 | ||
பயணச் சேவைகள் | |||
வகுப்பு(கள்) | குளிர்சாதன இருக்கை வசதி பெட்டிகள் (CC), இருக்கை வசதி பெட்டிகள் (2S), முன்பதிவற்ற பெட்டிகள் (UR), சமையல் பெட்டி (PCR) & மின்னாக்கி மற்றும் கார்டு வேன் (EOG) | ||
மாற்றுத்திறனாளி அனுகல் | |||
இருக்கை வசதி | உண்டு (சொகுசு இருக்கைகள்) | ||
படுக்கை வசதி | இல்லை | ||
உணவு வசதிகள் | உண்டு (வடை, பொங்கல், காபி, டீ, சமோசா, பூரி) | ||
காணும் வசதிகள் | பெரிய சாளரங்கள் | ||
சுமைதாங்கி வசதிகள் | உள்ளன | ||
தொழில்நுட்பத் தரவுகள் | |||
பாதை | அகலப் பாதை | ||
வேகம் | 69 km/h (43 mph) மணிக்கு 130km | ||
பாதை உரிமையாளர் | இந்திய இரயில்வே | ||
காலஅட்டவணை எண்கள் | 7/7A | ||
|
வரலாறு
தொகு1984 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15 ம் தேதி சென்னை மற்றும் திருச்சி இடையே விரைவுவண்டி அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், காரைக்குடி வரை நீட்டிக்கப்பட்டது. இது செப்டம்பர் 1, 2013 ஆண்டு முதல் அமலுக்கு வந்தது.[1] இந்த வண்டியானது காரைக்குடியிலிருந்து திருச்சிராப்பள்ளி சந்திப்பு திருச்சிராப்பள்ளி நகரை மையமாகக் கொண்டு சென்னை எழும்பூருக்கு செல்கிறது. இது தமிழகத்தின் முக்கிய பிரபலமான ரயில்களுள் ஒன்றாக திகழ்கிறது.
அட்டவணை
தொகு12605 ~ சென்னை எழும்பூர் → காரைக்குடி சந்திப்பு பல்லவன் அதிவேக விரைவுவண்டி | ||||
---|---|---|---|---|
நிலையம் | நிலையக்குறியீடு | வருகை | புறப்பாடு | நாள் |
சென்னை எழும்பூர் | MS | புறப்படும் இடம் | 15:45 | |
தாம்பரம் | TBM | 16:13 | 16:15 | |
செங்கல்பட்டு சந்திப்பு | CGL | 16:43 | 16:45 | |
மேல்மருவத்தூர் | MLMR | 17:08 | 17:10 | |
விழுப்புரம் சந்திப்பு | VM | 18:00 | 18:05 | |
விருத்தாச்சலம் சந்திப்பு | VRI | 18:45 | 18:47 | |
அரியலூர் | ALU | 19:21 | 19:22 | |
லால்குடி | LLI | 19:49 | 19:50 | |
ஸ்ரீரங்கம் | SRGM | 20:06 | 20:08 | |
பொன்மலை | GOC | 20:19 | 20:20 | |
திருச்சிராப்பள்ளி சந்திப்பு | TPJ | 20:40 | 20:45 | |
புதுக்கோட்டை | PDKT | 21:43 | 21:45 | |
காரைக்குடி சந்திப்பு | KKDI | 21:15 | DEST | |
12606 - காரைக்குடி சந்திப்பு → சென்னை எழும்பூர் பல்லவன் அதிவேக விரைவுவண்டி | ||||
காரைக்குடி சந்திப்பு | KKDI | SOURCE | 05:35 | |
புதுக்கோட்டை | PDKT | 05:58 | 06:00 | |
திருச்சிராப்பள்ளி சந்திப்பு | TPJ | 06:50 | 06:55 | |
ஸ்ரீரங்கம் | SRGM | 07:15 | 07:17 | |
லால்குடி | LLI | 07:32 | 07:33 | |
அரியலூர் | ALU | 08:05 | 08:06 | |
விருத்தாச்சலம் சந்திப்பு | VRI | 08:38 | 08:40 | |
விழுப்புரம் சந்திப்பு | VM | 09:28 | 09:30 | |
மேல்மருவத்தூர் | MLMR | 10:18 | 10:20 | |
செங்கல்பட்டு சந்திப்பு | CGL | 10:48 | 10:50 | |
தாம்பரம் | TBM | 11:18 | 11:20 | |
சென்னை எழும்பூர் | MS | 12:15 | DEST |
விசைப்பொறி
தொகுபல்லவன் அதிவேக விரைவு வண்டி சென்னை எழும்பூரில் இருந்து காரைக்குடிக்கு WAP-7 எனும் 6350HP திறன் கொண்ட அதிகவேக மின்சார எஞ்ஜின் கொண்டு இயக்குப்படுகிறது.
பெட்டி வரிசை
தொகுசென்னை எழும்பூர் - காரைக்குடி பல்லவன் அதிவேக விரைவு வண்டி பெட்டி வரிசை
Loco | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
EOG | UR | C1 | C2 | C3 | D1 | D2 | D3 | D4 | D5 | D6 | D7 | PC | D8 | D9 | D10 | D11 | D12 | D13 | UR | UR | EOG |
முதலில் பல்லவன் அதிவேக விரைவு வண்டி 1954ல் சென்னையிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு YDM-4 எனும் குறுகிய இருப்புபாதையில் ஒடக்கூடிய டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்டு ஒடியது.
பிறகு, 1999ல் இந்த இரயில் அகல இருப்புபாதைக்கு மாற்றப்பட்டு WDM-3A, WDM-3A எனும் 3100HP திறன் கொண்ட பச்சை நிற டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்டு ஒடியது.
2012 முழுவதும் மின்யமாக்கப்பட்ட பிறகு, அரக்கோணம், ஈரோடு மின்சார எஞ்சின் பணிமனையிலிருந்து WAP-4 எனும் மின்சார எஞ்ஜின் பொருத்தப்பட்டு சென்னைக்கும் திருச்சிராப்பள்ளிக்கும் இடையே ஒடியது. அதன் பிறகு திருச்சியிலிருந்து காரைக்குடிக்கு WDP-4D எனப்படும் அதிக சக்கி வாய்ந்த டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்டு ஒடியது.
இதன் பெட்டிகள் மதுரை - சென்னை வைகை அதிவேக விரைவு வண்டியுடன் பரிமாற்றத்தில் உள்ளது.