பல்வந்த் கார்கி

பல்வந்த் கார்கி (ஆங்கிலம்: Balwant Gargi) (பிறப்பு: 1916 திசம்பர் 4 - இறப்பு: 2003 ஏப்ரல் 22) இவர் ஒரு பஞ்சாபி மொழி நாடக ஆசிரியரும், நாடக இயக்குநரும், புதின ஆசிரியரும், சிறுகதை எழுத்தாளரும் மற்றும் கல்வியாளருமாவார். [1]

பல்வந்த் கார்கி
இந்திய அரசால் 2017 இல் வெளியிடப்பட்ட கார்கியின் அஞ்சல் முத்திரை
பிறப்பு(1916-12-04)4 திசம்பர் 1916
பட்டிண்டா, பஞ்சாப் (இந்தியா)
இறப்பு22 ஏப்ரல் 2003(2003-04-22) (அகவை 86)
மும்பை, இந்தியா
பணிஎழுத்தாளர், நாடக ஆசிரியர்

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

1916 டிசம்பர் 4, அன்று பஞ்சாபிலுள்ள பதிந்தா மாவட்டத்தில் நீதா காண்தன் என்ற இடத்தில், 1800 ஆண்டுகள் பழமையான வரலாற்று கோபிந்த் கோட்டைக்கு அருகிலுள்ள நீதா மால் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பிறந்தார். இது இரசியா சுல்தான் சிறையில் அடைக்கப்பட்ட புகழ் பெற்ற ஒரு இடமாகும். நீர்ப்பாசனத் துறையின் தலைமை எழுத்தராக இருந்த சிவ் சந்த் என்பவருக்கு இரண்டாவது மகனாவார். அவர் இந்திய மற்றும் பஞ்சாபி இலக்கிய உலகில் வரலாற்றை உருவாக்குபவரகராக மாறினார்.

கார்கி லாகூரிலுள்ள அரசு கல்லூரியில் படித்தார். பின்னர், லாகூரில் உள்ள போர்மன் கிறித்தவ கல்லூரியில் ஆங்கிலத்தில் முதுகலையும், அரசியலில் முதுகலையும் முடித்தார்.[2] அவர் காங்க்ரா பள்ளத்தாக்கிலுள்ள தனது பள்ளியில் நோரா ரிச்சர்ட் என்பவருடன் நாடகத்தையும் பயின்றார்.

நாடகங்கள்

தொகு

பல்வந்த் கார்கி, கார்கி லோகா குத், கெசுரோ, கனக் தி பல்லி, சோக்னி மகிவால், சுல்தான் ரசியா, சௌகன், மிர்சா சாகிபா மற்றும் தூனி தி ஆக் மற்றும் சிறுகதைகள் மிர்ச்சா வாலா சாத், பத்தன் தி பெர்கி மற்றும் குவாரி திசி உள்ளிட்ட பல நாடகங்களை எழுதியுள்ளார். அவரது நாடகங்கள் 12 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள. மேலும் மாஸ்கோ, லண்டன், புது தில்லி மற்றும் அமெரிக்கா முழுவதும் உலகம் முழுவதும் நிகழ்த்தப்பட்டுள்ளன.

விருதுகள்

தொகு

கார்கிக்கு 1962 ஆம் ஆண்டில் தனது ரங் மன்ச் என்ற அவரது புத்தகத்திற்காக சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பத்மஸ்ரீ [3] (1972) விருதும் அதைத் தொடர்ந்து 1998 இல் பஞ்சாபி நாடக எழுத்துச் சங்கத்தின் சங்கீத நாடக அகாதமி விருதும் வழங்கப்பட்டது.[4] சாகித்திய அகாதமி மற்றும் இசை நாடக அகாதமி ஆகிய இரண்டு விருதுகளையும் வென்ற ஒரு சில கலைஞர்களில் கார்கியும் ஒருவர்.

நாடகம் மற்றும் கற்பித்தல்

தொகு

பல்வந்த் கார்கி வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் (1966-67) கற்பித்தல் பணியில் இருந்தார். அங்கு அவர் ஜீன் ஹென்றி என்பவரைச் சந்தித்து பின்னர் அவர் அவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த காலம் அவரது சுயசரிதை தி நேக்கட் திரியாங்கில் என்பதன் அடிப்படையாக இருந்தது.

பல்வந்த் கார்கி சண்டிகரின் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் இந்திய நாடகத் துறையின் நிறுவனர்-இயக்குநராக இருந்தார். திணைக்களத்தில் உள்ள திறந்தவெளி அரங்கத்திற்கு அவரது பெயரிடப்பட்டுள்ளது. அவரது மாணவர்களில் அனுபம் கெர், கிரோன் கெர், சதீஷ் கௌசிக், பூனம் தில்லன் மற்றும் பல தற்போதைய பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் உள்ளனர்.

பல ஆண்டுகளாக, கார்கி ஆர்வர்டு பல்கலைக்கழகம், வசர் கல்லூரி, மவுண்ட் கோலியோக் கல்லூரி, திரினித்தி கல்லூரி, ஹவாய் பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம் மற்றும் பல புகழ்பெற்ற சர்வதேச நிறுவனங்களில் ஒரு சிறப்பு வருகை பேராசிரியராக விரிவுரையாளாக கற்பித்தார்.

அவரது குழந்தைகள், மனு கார்கி மற்றும் ஜன்னத் கார்கி ஆகியோர் அமெரிக்காவில் குடியேறினர். மனு ஹாலிவுட்டில் படங்களைத் தயாரிப்பவராக உள்ளார்.

குறிப்புகள்

தொகு
  1. Balwant Gargi dead The Tribune, 23 April 2003.
  2. Balwant Gargi dead The Tribune, 23 April 2003.
  3. Padma Shri Awards Govt. of India website.
  4. "SNA: List of Akademi Awardees". Sangeet Natak Akademi Official website. Archived from the original on 17 February 2012.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்வந்த்_கார்கி&oldid=4169266" இலிருந்து மீள்விக்கப்பட்டது