பழையங்குடி
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், பழையங்குடி ஊராட்சிக்குட்பட்ட ஒரு சிற்றூர் பழையங்குடி [4]. இது திருவாரூர்-திருத்துறைப்பூண்டி வழித் தடத்தில் திருத்துறைப்பூண்டி அருகில் 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
பழையங்குடி | |
— சிற்றூர் — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவாரூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | தி. சாருஸ்ரீ, இ. ஆ. ப [3] |
ஊராட்சித் தலைவர் | |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பழையங்குடி கிராமத்தில் பழையங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஒன்று உள்ளதும். இக்கிராமத்தில் உள்ளவர்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். அரிச்சந்திரா நதி பாய்கிறது.
இங்குள்ள பழமையான சிவன் கோவிலின் இறைவன் பெயர் அகத்தீஸ்வரர். கோவிலும் அகத்தீசுவர் கோவில் என்று அழைக்கப்படுகிறது[5]. இக்கோவிலில் தைப்பூசத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இக்கிராம எல்லையில் தொழுதூரைச் சார்ந்த நல்ல மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் சித்திரை மாதப் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வூரின் பழைமையான பெயர் கர்மரங்க வன ஷேத்திரம் ஆகும். கர்மவரங்க மரங்கள் நிறைந்து இருந்ததால் இது கர்மரங்க வன ஷேத்திரம் என அழைக்கப்பட்டது. இந்த கர்மரங்க மரத்திற்கு தம்பரத்தை மரம் என்ற பெயரும் உண்டு.[6]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015. பக்கஎண்:1268
- ↑ http://temple.dinamalar.com/ListingMore.php?c=3&D=73&Page=42
- ↑ அகத்தீஸ்வரசுவாமி தல வரலாறு. அறநிலையத்துறை. 2005.