பவிகொண்டா பௌத்த வளாகம் (Bavikonda Buddhist Complex) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினம் நகரத்திலிருந்து 16 கிமீ தொலைவில் உள்ள மலையில் உள்ளது. தெலுங்கு மொழியில் பவிகொண்டா என்பதற்கு கிணறுகளின் மலை எனப் பொருளாகும். இங்குள்ள மலையில் மழை நீர் சேமிக்க கிணறுகள் தோண்டப்பட்டுள்ளது.

பவிகொண்டா
பாதுகாக்கப்பட்ட பௌத்த நினைவுச் சின்னங்களின் வளாகம்
பவிகொண்டா தூபி
பவிகொண்டா தூபி
பவிகொண்டா is located in ஆந்திரப் பிரதேசம்
பவிகொண்டா
பவிகொண்டா
இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின், விசாகப்பட்டினம் அருகே உள்ள பவிகொண்டா
ஆள்கூறுகள்: 17°49′2″N 83°23′27″E / 17.81722°N 83.39083°E / 17.81722; 83.39083
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்விசாகப்பட்டினம்
மொழிகள்
 • அலுவல் மொழிதெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுAP
அருகமைந்த நகரம்விசாகப்பட்டினம்
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் பௌத்த நினைவுச் சின்னங்களின் வரைபடம்

பவிகொண்ட பௌத்த விகாரை கிமு மூன்றாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதாகும். பவிகொண்டா பௌத்த தொல்லியல் களத்தை, ஆந்திரப் பிரதேச அரசு அகழாய்வு செய்த போது கிடைத்த தொல்பொருட்கள்:

  • கலசத்தில் சேகரிகப்பட்ட எலும்புத்துண்டுகள் (புத்தரின் எலும்புத் துண்டுகள் எனக் கருதப்படுகிறது.),
  • கல்வெட்டுக்கள்,
  • மட்பாண்டங்கள்,
  • பேழைகள்,
  • ஓடுகள்,
  • செங்கற்கள்,
  • நாணயங்கள் முதலியன. [1]

பவிகொண்டா அருகில் பிற பௌத்த தொல்லியல் களங்களான தொட்டலகொண்டா மற்றும் பவுரல்லகொண்டா உள்ளது.

பவிகொண்டா பௌத்த வளாகத்தின் காட்சிகள்

தொகு

இதனையும் காணக

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Archived copy". Archived from the original on 2012-02-09. பார்க்கப்பட்ட நாள் 2012-10-24.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bavikonda
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பவிகொண்டா&oldid=3587475" இலிருந்து மீள்விக்கப்பட்டது