பாகே கோவர்தன்

இந்திய அரசியல்வாதி

பாகே கோவர்தன் (Bhagey Gobardhan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியலாளர் 1934 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[2] 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சனதா தளம் கட்சியின் வேட்பாளராகவும், 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராகவும் ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ச் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சந்திரசேகர் ஆட்சியில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்தார்.[3][4] பின்னர் இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்து 1991 ஆம் ஆண்டு மீண்டும் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [5][6]

பாகே கோவர்தன்
Bhagey Gobardhan
மாநில மனிதவள மேம்பாட்டுத் துறை
பதவியில்
1990–1991
Member: 9th, பத்தாவது மக்களவை
பதவியில்
1989–1993
முன்னையவர்சித்த லால் முர்மு
பின்னவர்சுசிலா திரியா
தொகுதிமயூர்பஞ்சு மக்களவைத் தொகுதி, ஒடிசா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1934-10-31)31 அக்டோபர் 1934
ஜம்சேத்பூர், பீகார், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (த்ற்பொழுது சார்க்கண்டு, இந்தியா)
இறப்பு31 சூலை 1993(1993-07-31) (அகவை 58) [1]
அரசியல் கட்சிசனதா தளம்
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு, சனதா கட்சி
துணைவர்நிர்மல் பாகே
மூலம்: [1]

1993 ஆம் ஆண்டு சூலை 31 ஆம் தேதியன்று பாகே கோவர்தன் காலமானார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Obituary References". இந்திய நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 23 March 2020.
  2. "Dar Ko Bhagao Bhagey!". Sambad English. பார்க்கப்பட்ட நாள் 20 January 2022. Born on 31st October 1934 in a tribal family, Gobardhan had his early education in Baripada and Katak.
  3. Ranjana Arora; Verinder Grover (1995). Indian Government and Politics at Crossroads: Political Instability, Money, Power and Corruption, Punjab and Kashmir Problems, Secularism, Religion and Politics, Development Towards 2000 AD. Deep & Deep Publications. p. 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7100-547-5. பார்க்கப்பட்ட நாள் 23 March 2020.
  4. G. C. Malhotra (2005). Anti-defection Law in India and the Commonwealth. [Published for] Lok Sabha Secretariat [by] Metropolitan Book Company. p. 150. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-200-0406-1. பார்க்கப்பட்ட நாள் 23 March 2020.
  5. Data India. Press Institute of India. 1991. p. 302. பார்க்கப்பட்ட நாள் 23 March 2020.
  6. India. Parliament. House of the People; India. Parliament. Lok Sabha (1993). Lok Sabha Debates. Lok Sabha Secretariat. p. 53. பார்க்கப்பட்ட நாள் 23 March 2020.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகே_கோவர்தன்&oldid=3803542" இலிருந்து மீள்விக்கப்பட்டது