பாசுடு பைவ்

பாஸ்ட் பைவ் (Fast Five[1] அல்லது பாசுடு & பியூரியசு 5: ரியோ ஆய்சுடு[5] எனவும் அழைக்கப்படுகின்றது.) என்பது 2011 இல் வெளியான அமெரிக்க கொள்ளை அதிரடித் திரைப்படம் ஆகும். கிறிசு மோகன் எழுதிய இந்த திரைப்படத்தை ஜசுடின் லின் இயக்கியுள்ளார். 2009இல் வெளியான பாஸ்ட் & பியூரியசு திரைப்படத்தின் ஒரு தொடராக வெளியான பாசுடு பைவ் திரைப்படம், பாசுடு & த பியூரியசு திரைப்படத் தொடரின் ஐந்தாவது திரைப்படமாக வெளியானது. இந்த திரைப்படத்தில் வின் டீசல், பால் வாக்கர், சோர்டானா பிருவிசுடர், டைரீசு கிப்சன், கிறிஸ் லூடாகிரிஸ், மட் இசுக்கல்சு, சுங் காங், டுவெயின் ஜான்சன், கால் கடோட், மற்றும் சோவாகுயிம் டி அல்மெய்டா ஆகியோர் நடித்துள்ளனர். பாசுடு பைவ், அமெரிக்க இராஜாங்க பாதுகாப்பு சேவை (டிஎஸ்எஸ்) அதிகாரியான லூக் ஹோப்ஸ் (ஜோன்சன்) என்பவரினால் கைது செய்ய தேடப்படும் டொமினிக் டொரெட்டோ (டீசல்), பிரயான் ஓ கொன்னர் (வால்கர்) மற்றும் மியா டொரெட்டோ (பிருவிசுடர்) ஆகியோர் ஹெர்னன் ரெய்ஸ் (டீ அல்மெய்டா) எனும் ஊழல் தொழிலதிபரிடம் இருந்து 100&nbspமில்லியன் டாலர்களை கொள்ளையடிப்பது பற்றி தொடர்கின்றது.

பாஸ்ட் பைவ்
இயக்கம்ஜஸ்டின் லின்
தயாரிப்பு
கதைகிரிஸ் மோர்கன்
இசைபிரையன் இடைலர்
நடிப்பு
ஒளிப்பதிவுஇசுடீவன் எப். வின்டன்
படத்தொகுப்பு
  • கிரிஸ்டியன் வாக்னெர்
  • கெல்லி மத்சுமோட்டோ
  • ஃபிரெட் ரஸ்கின்
விநியோகம்யுனிவர்சல் ஸ்டுடியோஸ்
வெளியீடுஏப்ரல் 15, 2011 (2011-04-15)(சினிபோலிஸ் லகூன்)
ஏப்ரல் 29, 2011 (அமெரிக்கா)
ஓட்டம்130 minutes[1]
நாடு
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$125 மில்லியன்[3]
மொத்த வருவாய்$626.1 மில்லியன்[4]

நடிப்பு தொகு

மேலிருந்து கீழாக: வின் டீசல், பால் வாக்கர், மற்றும் சோர்டானா பிருவிசுடர்
பொலிசினால் தேடப்பட்டும் தொழிமுறை குற்றவாளி, தெரு கார் பந்தய வீரர். டீசல் இத்திரைப்படத்தில் தயாரித்து நடிப்பதில் $15 மில்லியன் பெறுகின்றார்.[6]
குற்றவாளியாக மாறிய ஓய்வு பெற்ற எப்பிஐ அதிகாரி. மியா டொரெட்டோவுடன் காதலன். தாண்டோட்ட வல்லுநரான போல் டார்னெலுடன் பயிற்சி பெற்று படத்தின் அதிகமான சண்டைக் காட்சிகளை வால்கர் தானே செய்திருந்தார்.[7]
  • சோர்டானா பிருவிசுடர் -மியா டொரெட்டோ [8]
டொமினிக்கின் தங்கை மற்றும் பிரயானின் காதலி.
  • டைரீசு கிப்சன் - ரோமன் பியர்சு
பிரயானின் பால்ய சிநேகிதன். கிப்சன் நடிப்பது சூன் 30, 2010இல் உறுதிப்படுத்தப்பட்டது.[9] கிப்சன் பாசுடு பைவ் திரைப்படத்திற்கு நடிக்க ஒப்பமிட்ட நேரம் டிரான்ஸ்ஃபார்மஸ்: டார்க் ஒப் தி மூன் திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்தார். அதனால் இரண்டு படத்தையும் தக்கவைக்க புவேர்ட்டோ ரிகோவிற்கும் அட்லாண்டாவிற்கும் மாறி மாறி செல்ல வேண்டியிருந்தது.[10]
  • கிறிஸ் லூடாகிரிஸ் - தேஜ் பார்க்கர்
மியாமியில் இருக்கும் பிரயானினதும் ரோமானினதும் நண்பன்.லூடாகிரிஸ் இதில் நடிப்பதை சூலை 12, 2010இல் புவேர்ட்டோ ரிகோவில் நடிக்க செல்லுமிடத்தில் உறுதிப்படுத்தினார்.[11]
  • மட் இசுக்கல்சு - வின்சு
டொமினிக்கன் பால்ய சிநேகிதன். இசுக்கல்சு முதல் பாகத்தில் நடித்த போதிலும் இத்திரைப்படத்தில் அவரது நடிப்பு சூலை 16, 2010லேயே உறுதிப்படுத்தப்பட்டது.[12]
  • சுங் காங் - ஹான் சியோல் ஓ[13]
டொமினிக் குடியரசில் டொமினிக்கின் தொழில் கூட்டாளி மற்றும் தெரு கார் பந்தய வீரர்.
அமெரிக்க இராஜாங்க பாதுகாப்பு சேவை (டிஎஸ்எஸ்) அதிகாரி.
  • கால் கடோட் - கிசெல் யசார்
  • சோவாகுயிம் டி அல்மெய்டா - ஹெர்னன் ரெய்ஸ்
  • எல்சா படகி - எலீனா நெவ்ஸ்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Fast Five". bbfc.co.uk. British Board of Film Classification. ஏப்பிரல் 13, 2011. Archived from the original on August 25, 2012. பார்க்கப்பட்ட நாள் August 1, 2011.
  2. 2.0 2.1 "Fast Five (2011)". British Film Institute. பார்க்கப்பட்ட நாள் October 5, 2023.
  3. "Fast Five". த நம்பர்சு. நேஷ் இன்பர்மேசன் சர்விசசு, எல்.எல்.சி. Archived from the original on July 5, 2011. பார்க்கப்பட்ட நாள் February 11, 2021.
  4. "Domestic Box Office For 2011". பாக்சு ஆபிசு மோசோ. Archived from the original on June 14, 2021. பார்க்கப்பட்ட நாள் June 23, 2023.
  5. "Fast Five Becomes Fast & Furious 5: Rio Heist and Picks Up New Poster". Scannain. Archived from the original on July 4, 2011.
  6. "Hollywood's Top 40". Condé Nast]]work=Vanity Fair (magazine). மார்ச்சு 2011. Archived from the original on March 1, 2011. பார்க்கப்பட்ட நாள் March 7, 2011.
  7. Production 2011, ப. 26–27.
  8. Production 2011, ப. 36.
  9. Vejvoda, Jim (சூன் 30, 2010). "Tyrese is Still Fast, Still Furious". IGN. News Corporation. Archived from the original on July 5, 2011. பார்க்கப்பட்ட நாள் November 11, 2012.
  10. Production 2011, ப. 20.
  11. "This Fast Five Movie Is Getting Ludacris". Latino Review. July 12, 2010. Archived from the original on July 5, 2011. பார்க்கப்பட்ட நாள் March 9, 2011.
  12. Siegel, Tatiana. "'Fast and the Furious' adds to cast". Variety (magazine)date=July 16, 2010 (Reed Business Information) இம் மூலத்தில் இருந்து July 5, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5zx6j7dqC?url=http://www.variety.com/article/VR1118021821. 
  13. Production 2011, ப. 21.

Documents

External links தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசுடு_பைவ்&oldid=3902296" இலிருந்து மீள்விக்கப்பட்டது