புதுச்சேரி வானூர்தி நிலையம்

புதுச்சேரியில் உள்ள வானூர்தி நிலையம்
(பாண்டிச்சேரி விமான நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புதுச்சேரி வானூர்தி நிலையம் (Puducherry Airport, (ஐஏடிஏ: PNYஐசிஏஓ: VOPC) இந்திய ஒன்றியப் பகுதியான புதுச்சேரியின் லாசுப்பேட்டையில் அமைந்துள்ள ஓர் வானூர்தி நிலையமாகும். இந்த நிலையத்தில் பட்டியலிடப்பட்ட சேவைகளும் ஒப்பந்த பறப்புகளும் உள்ளூர் பறப்புப் பயிற்சிப் பள்ளியும் இயங்குகின்றன. பெருகிவரும் வான் பயணத் தேவைகளைக் கருத்தில்கொண்டு புதுச்சேரி அரசு இந்த வானூர்தி நிலையத்தை அளவில் பெரிய வானூர்திகளும் பயன்படுத்துமாறு புதுப்பித்து புதிய முனையத்தை திறந்துள்ளது.[1] பெங்களூரிலிருந்து புதுச்சேரிக்கு இயக்கப்பட்ட இசுபைசுசெட் வானூர்தி இந்த முனையத்தில் முதன்முதலாக சனவரி 17, 2013 அன்று வந்திறங்கியது.[2]

புதுச்சேரி வானூர்தி நிலையம்

பாண்டிச்சேரி விமானநிலையம்
புதிய முனையம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்ஏஏஐ
இயக்குனர்இந்திய வானூர்தி நிலையங்களின் ஆணையம்
சேவை புரிவதுபுதுச்சேரி
அமைவிடம்லாசுப்பேட்டை
உயரம் AMSL134அடி ft / 41மீ m
ஆள்கூறுகள்11°57′57″N 079°48′46″E / 11.96583°N 79.81278°E / 11.96583; 79.81278
நிலப்படம்
PNY is located in புதுச்சேரி
PNY
PNY
PNY is located in இந்தியா
PNY
PNY
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
07/25 7,546 1,500 தார்

கட்டமைப்பு

தொகு

இந்த வானூர்தி நிலையத்தை புதுப்பிக்க புதுவை அரசுக்கும் இந்திய வானூர்தி நிலையங்களின் ஆணையத்திற்கும் புரிந்துணர்வு உடன்பாடு சூன் 2007இல் கையெழுத்தானது. இதன் முதற்கட்டமாக ஏடிஆர் இரக வானூர்திகள் வந்துசெல்லுமாறு ஓடுதளம் 260 மீட்டருக்கு விரிவுபடுத்தப்பட்டது. இதற்காக புதுவை ஒன்றியப் பகுதிக்குள் 19.92 எக்டேர் நிலப்பரப்பை ரூ.18.95 கோடிக்கு அரசு கையகப்படுத்தி சூலை 2007இல் ஆணையத்திற்கு வழங்கியது.

புதுச்சேரி வானூர்தி நிலையத்தில் தாரிடப்பட்ட (கருங்காரை) 1500 மீட்டர் நீளமும் 30 மீட்டர் அகலமும் கொண்ட ஓடுதளமொன்று 07/25 திக்கில் ஆற்றுபடுத்தபட்டுள்ளது. புது முனையக் கட்டிடத்தில் நெருக்கடிமிக்க நேரங்களில் 300 பயணியருக்கு சேவை வழங்குமாறு வசதிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. வழிகாட்டுக் கருவிகளில் வானூர்தி நிலைய வழிகாட்டலையும் அடங்கி உள்ளது.[3]

செயற்படுத்தப்படும் இரண்டாம் கட்டத்தில் பெரிய தாரைப்பொறி வானூர்திகளும் இறங்குமாறு ஓடுதளத்தை மேலும் 1100 மீட்டருக்கு விரிவுபடுத்த ஒன்றியப் பகுதியை அடுத்துள்ள தமிழ்நாட்டிலிருந்து 200 ஏக்கர் நிலப்பரப்பை கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.[4]

வான்வழிச் சேவைகளும் சேருமிடங்களும்

தொகு
விமான நிறுவனங்கள்சேரிடங்கள்
ஸ்பைஸ் ஜெட் ஐதராபாத்

மேற்சான்றுகள்

தொகு
  1. "Flight operations await new terminal". சிஎன்என்-ஐபிஎன். 10 May 2012 இம் மூலத்தில் இருந்து 13 மே 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120513121042/http://ibnlive.in.com/news/flight-operations-await-new-terminal/256422-60-118.html. பார்த்த நாள்: 3 July 2012. 
  2. "First flight to Puducherry from Bangalore on January 17". Archived from the original on 8 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 6 January 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Airport website". Archived from the original on 2 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 3 January 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Puducherry airport to go on stream in October". தி எகனாமிக் டைம்ஸ். 3 Sept 2011. http://articles.economictimes.indiatimes.com/2011-09-03/news/30110146_1_puducherry-airport-runway-lawspet. பார்த்த நாள்: 3 January 2012.