பாத்தேக் மொழி

அசுலியான் மொழிகள் குடும்பத்தில் ஒரு பிரிவு

பாத்தேக் மொழி, (மலாய்: Bahasa Batek; ஆங்கிலம்: Batek Language); என்பது மலேசியாவில் பேசப்படும் மொழியாகும். மலேசியப் பழங்குடியினர் பேசும் மொழிகளில் பாத்தேக் மொழியும் ஒரு மொழியாகும்.

பாத்தேக் மொழி
Batek Language
Bahasa Batek
நாடு(கள்) மலேசியா
இனம்1,160 (2008)[1]
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
1,000  (2006)[1]
அவுஸ்திரேலிய
பேச்சு வழக்கு
Teq
Deq (De’)
Iga
Nong
மொழிக் குறியீடுகள்
ISO 639-3btq
மொழிக் குறிப்புbate1262[2]

ஆசுத்ரோ-ஆசிய மொழிகள் குடும்பத்தின் ஒரு பிரிவான அசிலியான் மொழிகள் பிரிவில் உள்ள பாத்தேக் மொழி, தீபகற்ப மலேசியாவில் பாத்தேக் மக்களின் முதன்மை மொழியாக உள்ளது.

பாத்தேக் மக்கள்

தொகு

பாத்தேக் மக்கள் பெரும்பான்மையினர் பகாங் தீபகற்ப மலேசியாவின் தித்திவாங்சா மலைத்தொடரில் அமைந்து உள்ள தாமான் நெகாராவில் வசிக்கின்றனர். இவர்களின் மக்கள் தொகை படிப்படியாகக் குறைந்து வருகிறது.

2000-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இவர்களின் மொத்த எண்ணிக்கை 1,519 ஆகும்.[3] இவர்களின் வாழ்விடப் பகுதிகளுக்குள் ஏற்படும் ஊடுருவல்களினால் இவர்கள் பெரும்பாலும் தாமான் நெகாரா தேசியப் பூங்காப் பகுதிகளிலேயே வாழ்கின்றனர்.

இவர்கள் நாடோடி வேட்டுவரும், உணவு சேகரிப்பவர்களும் என்பதால், இவர்களின் வாழிடங்கள் குறித்த வாழிட எல்லைகளுக்குள் மாறிக்கொண்டு இருக்கின்றன.[4]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்

தொகு
  1. 1.0 1.1 பாத்தேக் மொழி
    Batek Language
    at Ethnologue (18th ed., 2015)
  2. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Batek". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  3. "Orang Asli Population Statistics". Center for Orang Asli Concerns. Archived from the original on 2012-02-09. பார்க்கப்பட்ட நாள் 2008-02-12.
  4. Bonta, Bruce D. Peaceful Peoples: an Annotated Bibliography பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8108-2785-9. Metuchen NJ: Scarecrow, 1993 Page 29-31

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாத்தேக்_மொழி&oldid=4107846" இலிருந்து மீள்விக்கப்பட்டது