பாரத மாதா கோயில், கன்னியாகுமரி

ஓம் பாரத மாதா .

பாரத மாதா கோயில் என்பது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி புறநகர்ப் பகுதியின் விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் நிறுவப்பெற்றது. [1][2] மூன்று ஏக்கர் நிலப்பரப்பில், ரூபாய் 25 கோடி செலவில் பாரத மாதா கோயில் மற்றும் இராமாயண தரிசன சித்திரக் கண்காட்சிக் கூடம் அமைக்கப்பட்டது.

பாரத மாதா கோயில் தொகு

இக்கோயிலில் 5.5 டன் எடையும், 15 அடி உயரமும் கொண்ட பாரத மாதாவின் ஐம்பொன் சிலை நிறுவப்பட்டுள்ளது. பாரத மாதா கோயிலில், சிதம்பரம் தில்லை நடராஜர் சிலை, பகவதி அம்மனின் தவக்கோல காட்சி, சுவாமி விவேகானந்தர் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளன. அரங்கத்தின் நடுவில், ஓம் என்ற எழுத்துடன் பாரத நாட்டின் வரைபடமும், மாதா அமிர்தானந்தமயி சித்திரமும் சித்தரிக்கப்பட்டுள்ளன. பாரத மாதா கோயிலின் உள்புறத்தில் 18 அடி நீளம், 12 அடி அகலத்தில் மூன்று முப்பெரும் சித்திரங்களாக இராமர் பட்டாபிஷேகம், இராமேஸ்வரத்தில் ராமர் - சீதை ஆகியோர் இணைந்து சிவலிங்க பிரதிஷ்டை செய்யும் காட்சி, மற்றும் பத்மநாபசாமி அனந்தசயன காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. மேலும், 12 அடி நீளம், 8 அடி அகலத்தில் 12 வண்ண ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன.

இராமாயணக் காட்சிக் கூடம் தொகு

பாரத மாதா கோயிலின் கீழ் தளத்தில், வால்மீகி இராமாயணத்தின், 108 முக்கிய சம்பவங்கள், 6 அடி நீளம் 4 அடி அகலத்தில் வண்ண ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. இந்த இராமாயணக் கண்காட்சி கூடத்தின் முன்பு, 12.5 டன் எடையும், 27 அடி உயரமும் கொண்ட ஒரே கல்லில், 27 அடி உயர அனுமன் சிலை நிறுவப்பட்டுள்ளது.

முகப்பு மற்றும் பூங்கா தொகு

கோயிலின் முகப்பு பகுதியில் நீருற்றுடன் கூடிய பூங்காவும், பூங்காவின் உள்ளே, 32 அடி உயரத்தில் சிவபெருமானின் தவக்கோலக் காட்சி சிலையும் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் சிவபெருமானின் தலையில் இருந்து கங்கை ஆறு பாய்வது போன்றும், சிலையின் கீழ் உள்ள நீருற்றில் 8 அன்ன பறவைகள், 4 யானைகள், 4 கந்தவர்கள் சிலையும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், பூங்காவின் உள்ளே பசு - கன்று, மான், கொக்கு போன்ற சிலைகளும் கண்ணை கவரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. குமரி விவேகானந்த கேந்திரத்தில் ரூ.20 கோடியில் ராமாயண கண்காட்சிக் கூடம்: காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி திறந்துவைத்தார்
  2. கன்னியாகுமரியில் ரூ.25 கோடி செலவில் பாரத மாதா கோவில், ராமாயண சித்திர கண்காட்சி கூடம் பிரதமர் நரேந்திரமோடி 2017 சனவரி, 12–ந் தேதி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்