விவேகானந்தபுரம்
விவேகானந்தபுரம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அகத்தீஸ்வரம் வட்டத்தின் ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1] நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பகுதியானது, கன்னியாகுமரியிலுள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தைப் பராமரித்து வரும் விவேகானந்த கேந்திரத்தின் தலைமையிடம் அமைந்துள்ள இடமாகும்.[2]
விவேகானந்தபுரம் | |
---|---|
விவேகானந்தபுரம், கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 8°05′38″N 77°32′54″E / 8.0940°N 77.5483°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
ஏற்றம் | 44.13 m (144.78 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 629702 |
புறநகர்ப் பகுதிகள் | கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம், சின்னமுட்டம் |
மக்களவைத் தொகுதி | கன்னியாகுமரி |
சட்டமன்றத் தொகுதி | கன்னியாகுமரி |
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 44.13 மீ. உயரத்தில், (8°05′38″N 77°32′54″E / 8.0940°N 77.5483°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு விவேகானந்தபுரம் அமையப் பெற்றுள்ளது.
சமயம்
தொகுகோயில்கள்
தொகுஇங்குள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் சுமார் ரூ.25 கோடி செலவில் பாரத மாதா கோயில் கட்டப்பட்டுள்ளது.[3][4] இந்த பாரத மாதா கோயிலில் நிறுவப்பட்டுள்ள சிவன் சிலை சுமார் 12 அடி உயரம் கொண்டும், அச்சிலை அமைந்துள்ள பீடம் சுமார் 20 அடி உயரத்திலும் காணப்படுகின்றன.[5] மேலும், சக்கர தீர்த்த காசிவிசுவநாதர் கோயில் என்ற சிவன் கோயில் ஒன்றும் விவேகானந்தபுரத்தில் அமைந்துள்ளது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Vivekanandapuram Pin Code - 629702, All Post Office Areas PIN Codes, Search kanyakumari Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2025-01-01.
- ↑ "விவேகானந்தா் நினைவு மண்டபம் – திருவள்ளுவா் சிலை". kanniyakumari.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2025-01-01.
- ↑ "குமரியில் பாரத மாதா கோயில் இன்று திறப்பு : பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்". temple.dinamalar.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2025-01-01.
- ↑ மாலை மலர் (2023-11-07). "கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் சூரிய ஒளியில் ஜொலித்த பாரத மாதா கோவில்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2025-01-01.
- ↑ தினத்தந்தி (2016-12-14). "32 feet tall idol of Lord Shiva in the temple of Kanyakumari paratamata". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2025-01-01.
- ↑ மாலை மலர் (2023-02-15). "கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சக்கர தீர்த்த காசி விஸ்வநாதர் கோவிலில் சனி பிரதோஷத்துடன் மகா சிவராத்திரி விழா". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2025-01-01.