1783 பாரிசு உடன்படிக்கை

(பாரிசு ஒப்பந்தம் (1783) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பாரிசு உடன்படிக்கை (Treaty of Paris) அமெரிக்கப் புரட்சிப் போரை முடிவுக்குக் கொண்டுவர பெரிய பிரித்தானிய அரசர் மூன்றாம் சார்சின் சார்பாளர்களுக்கும் ஐக்கிய அமெரிக்க நாட்டின் சார்பாளர்களுக்கும் இடையே பாரிசில் செப்டம்பர் 3, 1783 அன்று கையொப்பமிடப்பட்ட உடன்படிக்கை ஆகும். இதன்படி பிரித்தானியா ஐக்கிய அமெரிக்காவின் இறையாண்மையையும் சுதந்திரத்தையும் அங்கீகரித்தது. இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைகளை ஐக்கிய அமெரிக்காவிற்கு "மிகவும் சாதகமாக" வரையறுத்தது.[2] இவற்றில் மீன்பிடி உரிமைகள், சொத்துக்கள் திருப்புதல், போர்க்கைதிகளை விடுவித்தல் ஆகிய விவரங்களும் அடங்கும். இந்த உடன்படிக்கைக்கு கூட்டமைப்பின் பேராயம் சனவரி 14, 1784 அன்றும் பெரிய பிரித்தானிய அரசரால் ஏப்ரல் 9, 1784 அன்றும் பின்னேற்பு வழங்கினர்.

பாரிசு உடன்படிக்கை (1783)
ஐக்கிய அமெரிக்காவிற்கும் பெரிய பிரித்தானியாவிற்கும் இடையேயான உறுதியான அமைதி உடன்பாடு
பாரிசு உடன்படிக்கையின் முதல் பக்கம், செப்டம்பர் 3, 1783 இல் கையெழுத்தானது
வரைவுநவம்பர் 30, 1782
கையெழுத்திட்டதுசெப்டம்பர் 3, 1783
இடம்பாரிசு, பிரான்சிய இராச்சியம்
நடைமுறைக்கு வந்ததுமே 12, 1784
நிலைபெரிய பிரித்தானிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா பின்னேற்பு
கையெழுத்திட்டோர்
தரப்புகள்
வைப்பகம்ஐக்கிய அமெரிக்காவின் அரசு[1]
மொழிஆங்கிலம்
முழு உரை
Treaty of Paris (1783) விக்கிமூலத்தில் முழு உரை
பாரிசு உடன்பாட்டைப் பேசிய அமெரிக்க சார்பாளர்கள் ஜான் ஜெய், ஜான் ஆடம்ஸ், பெஞ்சமின் பிராங்கிளின், என்றி லாரன்சு, மற்றும் வில்லியம் டெம்பிள் பிராங்க்ளின். பிரித்தானிய சார்பாளர்கள் தங்களை வரைவதற்கு ஒத்துழைக்காததால் ஓவியம் முடிவுறவில்லை.

இந்த உடன்படிக்கையுடன், பெரிய பிரித்தானியா அமெரிக்காவை ஆதரித்த பிரான்சு, எசுப்பானியா, இடச்சுக் குடியரசு ஆகியவற்றுடன் ஏற்படுத்திக்கொண்ட தனித்தனி அமைதி ஒப்பந்தங்கள் அனைத்தும் கூட்டாக பாரிசின் அமைதி என்றழைக்கப்படுகின்றன.[3][4]

இதனையும் காண்க தொகு

மேற்சான்றுகள் தொகு

  1. Miller, Hunter (ed.). "British-American Diplomacy: Treaty of Paris". The Avalon Project at Yale Law School. பார்க்கப்பட்ட நாள் October 19, 2014.
  2. Quote from Thomas Paterson, J. Garry Clifford and Shane J. Maddock, American foreign relations: A history, to 1920 (2009) vol 1 p 20
  3. Morris 1965
  4. Jeremy Black, British foreign policy in an age of revolutions, 1783–1793 (1994) pp 11–20

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=1783_பாரிசு_உடன்படிக்கை&oldid=3825098" இலிருந்து மீள்விக்கப்பட்டது