பாரில் வனேய்சாங்கி
பாரில் வனேய்சாங்கி (Baryl Vanneihsangi) என்பவர் ஒரு இந்திய தொலைக்காட்சி தொகுப்பாளர், வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியாவின் 9வது மிசோராம் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் ஐஸ்வால் மாவட்டத்தின் ஐஸ்வால் தெற்கு 3 தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். சோரம் மக்கள் இயக்கத்தில் உறுப்பினராக உள்ள இவர் ஐஸ்வால் மாநகராட்சியில் பகுதி உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
பாரில் வனேய்சாங்கி | |
---|---|
சபாநாயகர்-மிசோரம் சட்டப் பேரவை | |
பதவியில் 8 மார்ச்சு 2024 – பதவியில் | |
முன்னையவர் | லால்பியாக்ஜாமா |
வார்ப்புரு:No break | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 8 திசம்பர் 2023 | |
முன்னையவர் | எப். லால்னுன்மாவியா |
தொகுதி | அய்சால் தெற்கு 3 |
மாநகர உறுப்பினர், அய்சால் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 18 பிப்ரவரி 2021 | |
முன்னையவர் | சி.லால்தன்சங்க |
தொகுதி | பகுதி 19 |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பாரில் வனேய்சாங்கி லவு Expression error: Unrecognized punctuation character "{"., 28 February 1991 அய்சால், மிசோரம் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | ஜோரம் மக்கள் இயக்கம் |
முன்னாள் கல்லூரி | வடகிழக்கு மலைப் பல்கலைக்கழகம் |
வேலை | தொலைக்காட்சி தொகுப்பாளர், வானொலி அறிவிப்பாளர், அரசியல்வாதி |
இளமை
தொகுபாரில் 28 பிப்ரவரி 1991 அன்று ஐஸ்வாலில் உள்ள வான்ரோச்சுவாங்காவில் பிறந்தார்.[1][2][3] 2014ஆம் ஆண்டில், சில்லாங்கில் உள்ள வடகிழக்கு மலைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[4] அரசியல் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பு, இவர் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், வானொலி தொகுப்பாளராகவும் இருந்தார்.
அரசியல் வாழ்க்கை
தொகு[5][6] 2021ஆம் ஆண்டு நடைபெற்ற அய்சால் மாநகராட்சி தேர்தலில், சோரம் மக்கள் இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பகுதி எண் XIX-இலிருந்து உறுப்பினராகத் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2023ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், அய்சால் தெற்கு 3 சட்டப்பேரவைத் தொகுதியில் ஜோரம் மக்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று மிசோரம் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 2023ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மிசோரம் சட்டமன்றத்தின் இளைய உறுப்பினராக இவர் அறியப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.[7]
மார்ச்சு 7, 2024 அன்று 40 உறுப்பினர்களைக் கொண்ட மிசோரம் சட்டமன்றத்தின் சபாநாயகராக நியமிக்கப்பட்டார். மிசோரமின் முதல் பெண் சபாநாயகர் என்ற பெருமையை பாரில் வனேய்சாங்கி பெற்றார்.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Mizoram Legislative Assembly". www.mizoramassembly.in. பார்க்கப்பட்ட நாள் 2024-01-30.
- ↑ "Aizawl South III Assembly Election Results 2023: ZPM's Baryl Vanneihsangi Tlau wins from Aizawl South III constituency". India Today NE (in ஆங்கிலம்). 2023-12-04. பார்க்கப்பட்ட நாள் 2024-02-12.
- ↑ "Know About RJ-Turned-Politician Baryl Vanneihsangi, Who Became Youngest Woman MLA Of Mizoram". English Jagran (in ஆங்கிலம்). 2023-12-06. பார்க்கப்பட்ட நாள் 2024-01-30.
- ↑ "Meet Baryl Vanneihsangi, The Youngest MLA Of Mizoram". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2024-01-30.
- ↑ "List of Elected Candidates – GE to AMC 2021". sec.mizoram.gov.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-12.
- ↑ "List of Councillors | Aizawl Municipal Corporation (AMC)". amcmizoram.com. பார்க்கப்பட்ட நாள் 2024-02-12.
- ↑ "Who is Baryl Vanneihsangi, the youngest woman MLA of Mizoram?". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-12-05. பார்க்கப்பட்ட நாள் 2024-01-30.
- ↑ The Wire (8 March 2024). "History Made in Mizoram as a Woman MLA Occupies Speaker's Seat for First Time" இம் மூலத்தில் இருந்து 11 March 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240311091043/https://thewire.in/politics/history-made-in-mizoram-as-a-woman-mla-occupies-speakers-seat-for-first-time.