பார்த்தா சாட்டர்ஜி

இந்திய அரசியல்வாதி

பார்த்தா சாட்டர்ஜி (Partha Chatterjee) (பிறப்பு: 6 அக்டோபர் 1952), இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் பொதுச் செயலளாரகவும், மேற்கு வங்க மாநில அமைச்சராகவும், இந்திய அரசின் அமலாக்க இயக்குனரகத்தால் பள்ளி ஊழியர் நியமன ஊழல் வழக்கில் கைது செய்யப்படும் வரை ஆகத்து 2022 முடிய பதவியில் இருந்தவர்.[3] இவர் பெஹாலா மேற்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து, அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு சார்பாக 2001-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 2021 முடிய தொடர்ந்து ஐந்து முறை மேற்கு வங்காள சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

பார்த்தா சாட்டர்ஜி Chatterjee
அமைச்சர், மேற்கு வஙகாள அமைச்சரவை
பதவியில்
10 மே 2021 – 28 சூலை 2022
ஆளுநர்எம். கே. நாராயணன்
ஜகதீப் தன்கர்
துறைகள்வணிகம் & தொழில் துறை மற்றும் தொழில் முனைவோர்
முன்னையவர்நிருபம் சென்
அமித் மித்திரா
சைலேன் சர்க்கார்
டாகடர் தேபேஷ் தாஸ்
பதவியில்
20 மே 2011 – 20 டிசம்பர் 2012
பதவியில்
20 மே 2014 – 10 மே 2021
ஆளுநர்ஜகதீப் தன்கர்
துறைகள்கல்வித் துறை
முன்னையவர்பிராத்திய பாசு
பின்னவர்பிராத்திய பாசு
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2001
முன்னையவர்நிர்மல் முகர்ஜி
தொகுதிபெஹாலா மேற்கு சட்டமன்றத் தொகுதி
சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்
பதவியில்
21 செப்டம்பர் 2006 – 13 மே 2011
Deputyஅபு அசீம் கான் சௌத்திரி
முன்னையவர்பங்கஜ் குமார் பானர்ஜி
பின்னவர்சூரிய காந்த மிஸ்ரா
தொகுதிபெஹாலா மேற்கு சட்டமன்றத் தொகுதி
பொதுச் செயலாளர், அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
பதவியில்
1998–2022
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதகவல் தொழில்நுட்பம் & மின்னணுவியல்
6 அக்டோபர் 1952 (1952-10-06) (அகவை 72)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
இறப்புதகவல் தொழில்நுட்பம் & மின்னணுவியல்
நாடாளுமன்ற விவகாரத்துறை
இளைப்பாறுமிடம்தகவல் தொழில்நுட்பம் & மின்னணுவியல்
நாடாளுமன்ற விவகாரத்துறை
குடியுரிமைஇந்தியர்
அரசியல் கட்சிசுயேட்சை (ஆகஸ்டு 2022 முதல்)
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு (1998--2022)
இந்திய தேசிய காங்கிரசு (1998 வரை)
துணைவர்கள்மறைந்த (பாப்லி) ஜெயசிறீ சாட்டஜி [1]
பிள்ளைகள்சோகினி சட்டர்ஜி[2]
பெற்றோர்
  • தகவல் தொழில்நுட்பம் & மின்னணுவியல்
  • நாடாளுமன்ற விவகாரத்துறை
வாழிடம்sகொல்கத்தா
முன்னாள் கல்லூரிகொல்கத்தா பல்கலைக்கழகம், இளங்கலை பட்டம்]], முதுநிலை வணிக நிர்வாகம் பட்டம்

இறுதியாக சாட்டரஜி மேற்கு வங்காள அரசின் வணிகம் & தொழில் துறை அமைச்சராக இருந்த போது 28 சூலை 2022 அன்று, பள்ளி ஊழியர்கள் நியமன ஊழல் வழக்கில் அமலாக்க இயக்குனரகத்தால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதால், அமைச்சரவையிலிருந்து விலக்கப்பட்டதுடன், அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார்.

ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில்

தொகு

அமைச்சர் பார்த்தா சாட்டஜி, மேற்கு வங்காள மாநில அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில், கையூட்டாக பெற்ற 50 கோடி ரூபாய் பணம் மற்றும் 5 கோடி ரூபாய் மதிப்பு தங்கத்தை, அவரது உதவியாளரான நடிகை அர்பிதா முகர்ஜியின் வீட்டிலிருந்து 28 சூலை 2022 அன்று அமலாக்க இயக்குனரகத்தால் கைப்பற்றப்பட்டது. இதனால் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டார்.[4] எனவே பார்த்தா சாட்டர்ஜி அமைச்சர் பதவியிலிருந்தும், திருணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.[5][6] 5 ஆகஸ்டு 2022 அன்று பார்த்தா சாட்டஜியையும், அவரது உதவியாளரான அர்பிதா முகர்ஜியை சிறையில் அடைத்தனர்.[7]

ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில், பார்த்தா சாட்டர்ஜிக்கு சொந்தமான ரூபாய் 48.22 கோடி மதிப்புள்ள சொத்துகளை 19 செப்டம்பர் 2022 அன்று முடக்கி அமலாக்க இயக்குனரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. "TMC secretary general Partha Chatterjee's wife dead". Press Trust of India (Kolkata). 26 July 2017. https://www.business-standard.com/article/pti-stories/tmc-secretary-general-partha-chatterjee-s-wife-dead-117072601292_1.html. 
  2. Press Trust of India (5 April 2016). "Chip off the old block: Candidates turn to their sons, daughters for help during election campaigns". Firstpost (Kolkata). https://www.firstpost.com/politics/chip-off-the-old-block-candidates-turn-to-their-sons-daughters-for-help-during-election-campaigns-2713056.html. 
  3. Nag, Jayatri. "WB Trinamool Minister Partha Chatterjee has been summoned by CBI again". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/wb-trinamool-minister-partha-chatterjee-has-been-summoned-by-cbi-again/articleshow/91694078.cms. 
  4. "Rs 49.8 Crore Cash, Rs 5 Crore Gold and Coded Diaries: The Bengal Scam Haul So Far. And Counting?". News18 (in ஆங்கிலம்). 2022-07-28. பார்க்கப்பட்ட நாள் 2022-07-28.
  5. "Bengal SSC Scam LIVE Updates: Partha Chatterjee Sacked as Minister Over Graft Charges, May be Removed as TMC Gen Secy Too". News18 (in ஆங்கிலம்). 2022-07-28. பார்க்கப்பட்ட நாள் 2022-07-28.
  6. Singh, Shiv Sahay (2022-07-28). "Partha Chatterjee is out of Bengal Cabinet" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/other-states/arrested-west-bengal-minister-partha-chatterjee-sacked-from-cabinet/article65693598.ece. 
  7. ஆசிரியர் நியமன ஊழல்: பார்த்தா, அர்பிதாவுக்கு காவல் ஆக.,31 வரை நீட்டிப்பு
  8. மே.வங்க ஆசிரியர் நியமன முறைகேடு: ரூ.48 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்த்தா_சாட்டர்ஜி&oldid=3926353" இலிருந்து மீள்விக்கப்பட்டது