பர்னாவா (Barnava) என்பது இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பாகுபத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். மீரட் அருகே உள்ள சர்தானா மற்றும் பினாளிலி இடையே பர்னாவா உள்ளது. பர்னாவாவிலிருந்து 3 கி.மீ. மற்றும் மீரட்டிலிருந்து 37 கிமீ தொலைவில் இக்கிராமம் உள்ளது. மகாபாரதத்தில் அரக்கு மாளிகை என பர்னாவா அறியப்பட்டுள்ளது. மகாபாரதத்தின்போது வர்ணவம் என அறியப்பட்டது. பர்னாவா இன்னும் அரக்கு மாளிகை இருந்ததற்கான ஆதாரத்தைக் கொண்டிருந்ததாகப் பலர் நம்புகின்றனர். 

பர்னாவா
கிராமம்
பர்னாவா is located in உத்தரப் பிரதேசம்
பர்னாவா
பர்னாவா
Location in Uttar Pradesh, India
பர்னாவா is located in இந்தியா
பர்னாவா
பர்னாவா
பர்னாவா (இந்தியா)
ஆள்கூறுகள்: 29°06′54″N 77°25′43″E / 29.11500°N 77.42861°E / 29.11500; 77.42861
நாடு இந்தியா
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்பாக்பாத்
அரசு
 • நிர்வாகம்கிராம ஊராட்சி
மொழி
 • அலுவல்இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

சந்திரபிரபு திகம்பேர் ஜெயின் அத்திசியா சேத்ரா எனும் புகழ்பெற்ற சைன கோயில் கோவில் பர்னாவா கிராமத்தில் அமைந்துள்ளது. புது தில்லியில் உள்ள தாமரை கோவில் போன்ற கோயில் ஒன்று பர்னாவா ஜெயின் கோவில் வளாகத்தில் உள்ளது. இதன் முதன்மை வாயில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு அழகிய சிற்பங்களுக்காகப் புகழ்பெற்றது. 

பர்னாவா ஜெயின் கோயில்

தொகு

பர்னாவா ஜெயின் கோவில் 100 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்தது. இந்தக் கோயில் ஜைனத்தின் எட்டாவது தீர்த்தங்கரரான சந்திரபிரபுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் மல்லினாதா சிலை உள்ளது. இது சுமார் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 1917ஆம் ஆண்டு இந்தக் கோயில் சீத் லால்மன் தாசால் புதுப்பிக்கப்பட்டது.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Shri Chandaprabhu Digambar Jain Atishaya Kshetra Mandir".
  2. "Barnava (UP) - ENCYCLOPEDIA OF JAINISM". Archived from the original on 19 September 2016. பார்க்கப்பட்ட நாள் 17 August 2016.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Barnava
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்னவா&oldid=4046394" இலிருந்து மீள்விக்கப்பட்டது