பாலக்காடு சந்திப்பு தொடருந்து நிலையம்

கேரளத்தில் உள்ள தோடருந்து நிலையம்

பாலக்காடு சந்திப்பு (முன்னர் ஒலவக்கோடு சந்திப்பு) (நிலைய குறியீடு: PGT[1]) என்பது இந்திய இரயில்வேயின், தென்னக தொடருந்து மண்டலத்தின், பாலக்காடு தொடருந்து கோட்டத்தில் உள்ள NSG-2 வகை இந்திய தொடருந்து நிலையம் ஆகும்.[3] இது கேரளத்தின், பாலக்காட்டில் உள்ள ஒரு மிகப்பெரிய தொடருந்து நிலையமாகும். இது கேரளத்தில் உள்ள மிகப்பெரிய தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். மேலும் இது மாவட்டத்தின் இரண்டாவது பெரிய தொடருந்து நிலையமாகும். தூய்மை இந்தியா இயக்கம் நடத்திய கணக்கெடுப்பு ஆய்வின்படி, பாலக்காடு சந்திப்பு கேரள மாநிலத்தின் தூய்மையான தொடருந்து நிலையம் ஆகும்.[4] பாலக்காடு சந்திப்பு கேரளத்தின் பாலக்காடு நகரின் முக்கிய தொடருந்து நிலையமாகவும், பாலக்காடு நகரத்தில் உள்ள நகர தொடருந்து நிலையத்துக்கு அடுத்து இரண்டாம் நிலை தொடருந்து நிலையமாகவும் செயல்படுகிறது.[5]

பாலக்காடு சந்திப்பு


ஒலவக்கோடு சந்திப்பு
இந்திய இரயில்வே நிலையம்
பாலக்காடு சந்திப்பு தொடருந்து நிலையத்தின் முதன்மை நுழைவாயில்
பொது தகவல்கள்
அமைவிடம்தொடருந்து நிலையச் சாலை, தே. நெ 966, ஒலவக்கோடு, பாலக்காடு, கேரளம்,
 இந்தியா.
ஆள்கூறுகள்10°48′04″N 76°38′20″E / 10.801°N 76.639°E / 10.801; 76.639
ஏற்றம்84 மீட்டர்கள் (276 அடி)
உரிமம்இந்திய அரசு
இயக்குபவர்இந்திய இரயில்வே
தடங்கள்ஜோலர்பேட்டை - ஷோரணூர் பாதை
பாலக்காடு - பொள்ளாச்சி பாதை
நடைமேடை5
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரை நிலையம்
தரிப்பிடம்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலைபயன்பாட்டில்
நிலையக் குறியீடுPGT[1]
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) பாலக்காடு
வரலாறு
திறக்கப்பட்டது1898; 126 ஆண்டுகளுக்கு முன்னர் (1898)
மூடப்பட்டது1899
மறுநிர்மாணம்1904
மின்சாரமயம்ஆம்
முந்தைய பெயர்கள்ஒலவக்கோடு சந்திப்பு
பயணிகள்
பயணிகள் 50,0000ஒரு நாளுக்கு 21,898 [2]
அமைவிடம்
பாலக்காடு சந்திப்பு is located in இந்தியா
பாலக்காடு சந்திப்பு
பாலக்காடு சந்திப்பு
இந்தியா இல் அமைவிடம்
பாலக்காடு சந்திப்பு is located in கேரளம்
பாலக்காடு சந்திப்பு
பாலக்காடு சந்திப்பு
பாலக்காடு சந்திப்பு (கேரளம்)
Map
ஊடாடும் வரைபடம்

அமைவிடம்

தொகு
 
பாலக்காடு சந்திப்பு வான்வழிக் காட்சி

இந்த நிலையமானது பாலக்காடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்து நிலையத்திலிருந்து 4 கிலோமீட்டர்கள் (2.5 mi) தொலைவில் அமைந்துள்ளது. பாலக்காடு நகரின் புறநகர் பகுதியான ஒலவக்கோடு, பாலக்காட்டை கோழிக்கோடுடன் இணைக்கும் 966 எண் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த நிலையம் பாலக்காடு தொடருந்து கோட்டத்தில் அமைந்துள்ளது. இது இந்திய இரயில்வேயின் தென்னக இரயில்வே மண்டலத்தின் முக்கியமான தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும்.[6]

பாதைகள்

தொகு

பாலக்காடு சந்திப்பானது ஜோலார்பேட்டை-ஷோறனூர் வழித்தடத்தில் அமைந்துள்ளது. மேலும் பாலக்காடுமதுரை பாதையின் ஒரு நிறுத்தமாகவும் உள்ளது. இந்த நகரத்திற்கு சேவை செய்யும் மற்றொரு நிலையமாக பாலக்காடு நகர தொடருந்து நிலையம் உள்ளது.

உள்கட்டமைப்பு

தொகு

இந்த நிலையமானது ஐந்து நடைமேடைகளைக் கொண்டுள்ளது. 1, 2, 3 ஆகிய நடைமேடைகள் பாலக்காடு நகரம், ஷொர்ணூர், திருச்சூர் நோக்கி செல்லும் தொடருந்துகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. 4, 5 நடைமேடைகள் முதன்மையாக சென்னை நோக்கி செல்லும் தொடருந்துகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

மெமு கொட்டகை

தொகு

மெயின்லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் மெமு மெமு கொட்டகை புறநகர் தொடருந்துகளைப் பராமரிப்பதற்காக உள்ளது. மேலும் இது மாநிலத்தின் முதல் மெமு கொட்டகை ஆகும்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Station Code Index" (PDF). Portal of Indian Railways. Centre For Railway Information Systems. 2023–24. p. 7. Archived from the original (PDF) on 16 February 2024. பார்க்கப்பட்ட நாள் 23 March 2024.
  2. "Categorisation of Stations – Palakkad Division" (PDF). Southern Railway Zone – Indian Railways. பார்க்கப்பட்ட நாள் 21 September 2018.
  3. "SOUTHERN RAILWAY LIST OF STATIONS AS ON 01.04.2023 (CATEGORY- WISE)" (PDF). Portal of Indian Railways. Centre For Railway Information Systems. 1 April 2023. p. 2. Archived from the original (PDF) on 23 March 2024. பார்க்கப்பட்ட நாள் 23 March 2024.
  4. Service, Express News (2016-09-05). "Palakkad Junction is cleanest station in Kerala: Swatch Bharat Survey". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-29.
  5. Kumar, S. Senthil (2023-10-23). "Podanur to be renamed as Coimbatore South station". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-29.
  6. "Southern Railway – Gateway of South India".
  7. "ഒലവക്കോട്ടെ മെമു ഷെഡ് നവീകരിച്ചു; പുതിയ പ്രതീക്ഷ". Manoramanews (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-10.

வெளி இணைப்புகள்

தொகு