பாலக்கோங்
பாலக்கோங் (ஆங்கிலம்: Balakong; மலாய்: Balakong; சீனம்: 無拉港; ஜாவி: بالقوڠ;) என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டத்தில் உள்ள ஒரு புற நகரப்பகுதி ஆகும்.
பாலக்கோங் | |
---|---|
Balakong | |
ஆள்கூறுகள்: 3°1′48″N 101°45′0″E / 3.03000°N 101.75000°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சிலாங்கூர் |
மாவட்டம் | உலு லங்காட் மாவட்டம் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
கோலாலம்பூர் பெருநகரத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ள இந்த நகரமானது; பெரும்பாலும் குடியிருப்புகள், அலுவலக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. ஒரு காலத்தில் காடு மேடுகளாக இருந்த இந்தப் பகுதி தற்போது முழுவதுமாக மாற்றப்பட்டு, பல்வேறு வகையான வேலைகள் மற்றும் புதிய தொழில்களை வழங்கி வருகிறது.[1][2]
பொது
தொகுவரலாறு
தொகுஇங்கு வசிக்கும் உள்ளூர் சீன குடியிருப்பாளர்களின் கூற்றுப்படி, பாலக்கோங் என்ற பெயர் சீன புதிய கிராமம் (Chinese New Village), அல்லது பாலக்கோங் சீன புதிய கிராமம் (Balakong Chinese New Village) என்பதிலிருந்து வந்தது என அறியப்படுகிறது. பிரித்தானிய மலாயாவில்; மலாயா அவசரகாலத்தின் (Malayan Emergency 1948–1960) போது உருவாக்கப்பட்ட ஒரு குடியேற்றத் திட்டமாகும். [3][4]
1950-ஆம் ஆண்டில் பிரிக்ஸ் திட்டத்தின் (Briggs Plan) ஒரு பகுதியாக இந்த புதுக்கிராமம் உருவாக்கப்பட்டது. இவற்றைத் தடுப்பு முகாம்கள் (Internment Camps) என்று அழைப்பதும் உண்டு. கிராமப்புறக் குடிமக்களுக்குள் மறைந்து இருந்த மலாயா தேசிய விடுதலை படையினரின் (Malayan National Liberation Army) ஆதரவாளர்களைத் தனிமைப்படுத்த இந்தப் புதுக்கிராமங்கள் திட்டம் செயல்படுத்தப்பட்டது.[5]
குடியிருப்பு நகரங்கள்
தொகுபெரும்பாலான புதுக்கிராமங்கள், முள்கம்பிகள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்களால் சூழப்பட்டு இருந்தன. தடுப்பு முகாம்களில் இருந்து தப்பிச் செல்பவர்களையும்; ஊரடங்குச் சட்டத்திற்குக் கட்டுப்படாமல் வெளியேற முயற்சிக்கும் எவரையும் சுட்டுக் கொல்லவும் கட்டளையிடப்பட்டது.[6]
பிரித்தானியர்கள் மலாயாவை விட்டு வெளியேறிய பின்னர், பல புதுக்கிராமங்கள்; சாதாரண குடியிருப்பு நகரங்களாகவும் மற்றும் சில புதுக்கிராமங்கள் சாதாரண கிராமங்களாகவும் மாற்றம் கண்டன.[7]
1990-களுக்கு முன்
தொகு1990-ஆம் ஆண்டுக் காலக்கட்டத்தில் இந்தப் புறநகர்க் கிராமத்தைச் சுற்றிலும் ஈயச் சுரங்கங்களும் ரப்பர் தோட்டங்களும் இருந்தன. கிராமத்தில் பெரும்பாலான குடும்பங்கள் ரப்பர் மரம் சீவும் தொழிலாளர்க் குடும்பங்களாக இருந்தன.
அங்கே ஒரு தொடக்கதிலைப் பள்ளி, சில சீனர் கோயில்கள், ஒரு காய்கறிச் சந்தை, மலை உச்சியில் ஒரு கிறித்துவ தேவாலயம், ஒரு நகரத் தெரு, ஒரு நகர மண்டபம் மற்றும் ஒரு கால்பந்து மைதானம் இருந்தன. சுங்கை பாலக் எனும் ஆற்றினால் இந்தக் கிராமம் பிரிக்கப்பட்டு இருந்தது.
காட்சியகம்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "The area is almost completely transformed, offering a wide variety of jobs and new industries". பார்க்கப்பட்ட நாள் 19 August 2023.
- ↑ "Balakong or Cheras South is a township in Selangor, Malaysia. Balakong is located precisely at the boundary of Cheras. The township is composed particularly of residential condominiums, workplace complexes and factories". www.hellotravel.com. பார்க்கப்பட்ட நாள் 19 August 2023.
- ↑ Deery, Phillip. "Malaya, 1948: Britain's Asian Cold War?" Journal of Cold War Studies 9, no. 1 (2007): 29–54.
- ↑ Amin, Mohamed (1977). Caldwell, Malcolm (ed.). The Making of a Neo Colony. Spokesman Books, UK. p. 216.
- ↑ "The town began as a tin-mining settlement prior to the 20th century. By the turn of the century, rubber plantation took over from tin mining as the mainstay of the local industry. The Balakong area was settled mostly by Chinese of Hakka and Cantonese ethnic groups. During the Communist Emergency Period, the settlement was relocated into a new village to prevent contact with communist guerrillas". Penang (in ஆங்கிலம்).
- ↑ Peng, Chin; Ward, Ian; Miralor, Norma (2003). Alias Chin Peng: My Side of History. Singapore: Media Masters. p. 268. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 981-04-8693-6.
- ↑ Hale, Christopher (2013). Massacre in Malaya: Exposing Britain's My Lai. Brimscombe Port: The History Press. p. 326. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7524-8701-4.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Bandar Baru Bangi தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.