பாலர் நாடக சபைகள்
பாலர் நாடக சபைகள் என்னும் பாய்ஸ் நாடகக் கம்பெனிகள் சிறுவர்களை மட்டுமே நடிகர்களாகக் கொண்டு இயங்கிய தமிழ் நாடகக் குழுகள் ஆகும். இக்குழுகளில் பின்னர் சிறுமிகளும் நடிகர்களாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். இக்குழுகள் சிறுவர்தம் நடிப்பின் வழியாக பெரியவர்களுக்கான புராண, இதிகாச, வரலாற்று, சமூக, சமூகசீர்திருத்த நாடகங்களை நிகழ்த்தின.
தொடக்கம்
தொகுபத்தொன்பதாம் நூற்றாண்டில் இறுதியில் எல்லா பக்கமும் பார்வையாளர்கள் சூழ்ந்திருக்கும் வட்டரங்கில் நடைபெற்ற நாடகங்கள் முப்பக்கமும் மறைக்கப்பட்ட முன்பக்கம் மட்டுமே பார்வையாளர்கள் இருந்து பார்க்கும் பெட்டி அரங்கமுறைக்கு (Proscenium) மாறிக்கொண்டிருந்தன. அக்காலகட்டதில்தான் சங்கரதாசு சுவாமிகள் நாடக உலகில் நுழைந்து நடிகராகவும் நாடக ஆசிரியராகவும் திகழ்ந்தார்.
அவர் இதிகாச, புராண, பக்திக் கதைகளை நாடகங்களாக மாற்றினார். அவற்றை நாடகத்தைத் தொழிலாக்கொண்ட தமிழ்நாட்டு நாடக சபைகள் அனைத்தும் பெரும்பாலும் பயன்படுத்தின.[1] இந்நிலையில் நடிப்பு, இலக்கியம், உரையாடல்கலை ஆகியவற்றில் சிறந்த நடிகர்கள், சங்கரதாசரின் நாடக வடிவத்தையும் பாடல்களையும் மட்டும் பயன்படுத்திக்கொண்டு, தாமே சொந்தமாக உரையாடத் தொடங்கினார். அவை தொடக்கத்தில் அந்தந்த நடிகர்களின் தனித்திறனைக் காட்டுபவையாக இருந்தன. நாளடைவில் நடிகர்கள் ஒருவரை ஒருவர் சிலேடைகளால் ‘குத்தி’க் கொள்வதற்கும் மேடையில் தம்முடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்குமான எத்தனங்களாக மாறின.[2] எக்குழுவையும் சாராமல் தனித்திருந்த நடிகர்கள் இணைந்து நடிக்கும் சிறப்பு நாடகங்களில் (ஸ்பெஷல் நாடகங்கள்) புகழ்பெற்ற நடிகர்கள் இணைந்து நடிப்பதற்கு மாறாக அவரவர் ஆதிக்கத்தை நிலைநாட்டும் மோதற்களங்களாக நாடகக்களங்கள் மாறத் தொடங்கின; கட்டுப்பாடுகள் தளர்ந்தன. இதனால் நாடகத்தின் கதையோட்டம் சிதைந்து, வெற்று உரையாடல்கள் நாடக மேடைகளில் ஆதிக்கம் பெற்று நாடகக்கலை நலிவுறத் தொடங்கியது. ‘ஒரு நாடகம் சிறப்பாக இருக்கவேண்டுமானால் அந்த நாடகத்தில் பங்குகொள்ளும் நடிகர்களிடையே ஒழுங்கும் நியதியும் கட்டுப்பாடும் இருக்கு வேண்டும்’ [1] எனக் கருதிய சங்கரதாசு சுவாமிகள் இதனைக் கண்டு வேதனையடைந்தார். அவர் ஆசிரியருக்குக் கட்டுப்பட்டு நடிக்கக் கூடிய நடிகர்களைக்கொண்டு நாடகங்களை நிகழ்த்த விரும்பினார். எனவே சிறுவர்களுக்கு நடிப்புப் பயிற்சி அளித்து அவர்களையே நடிகர்களாகக்கொண்ட, சமரச சன்மார்க்க நாடக சபா என்னும் நாடகக்குழுவை 1910 ஆம் ஆண்டில் தொடங்கினார்.[3] இக்குழுவில்தான் பின்னாளில் நாடக உலகின் அரசராகக் கருதப்பட்ட எஸ். ஜி. கிட்டப்பாவும் அவருடன் பிறந்தவர்களும் நடிக்கக் கற்றனர்.
தொடர்ச்சி
தொகுபெரும் நடிகர்களின் ஆதிக்கத்தால் தவித்துக்கொண்டிருந்த பல நாடகக்குழுகளின் உரிமையாளர்களும் புதிக நாடகக்குழுகளைத் தொடங்கிய பலரும் சிறுவர் நாடகக் குழுகளைத் தொடங்கினர். அவற்றுள் அறியவரும் சில நாடகக் குழுகள் வருமாறு:
வ.எண் | ஆண்டு | நாடகக்குழுவின் பெயர் | உரிமையாளர்/கள் | ஆசிரியர் | நடிகர்கள் |
01 | 1910 | சமரச சன்மார்க்க நாடக சபா | சங்கரதாசு சுவாமிகள் | சங்கரதாசு சுவாமிகள் | எஸ்.ஜி. கிட்டப்பா மதுரை மாரியப்ப சுவாமிகள்[3] |
02 | மதுரை ஸ்ரீ பால மீன ரஞ்சனி சங்கீத சபா | ஜெகநாத ஐயர் | சங்கரதாசு சுவாமிகள் புதுக்கோட்டை தம்புடு பாகவதர் |
கே.சாரங்கபாணி நவாப் ராஜமாணிக்கம் பி.டி.சம்பந்தம் எம்.எஸ்.முத்துக்கிருஷ்ணன் டி.பி.பொன்னுசாமிபிள்ளை டி. பாலசுப்பிரமணியம் எம். ஆர். ராதா ஏ.எம்.மருதப்பா எஸ்.வி.வெங்கட்ராமன் டி.கே.கோவிந்தன் சிதம்பரம் ஜெயராமன் [4] | |
03 | 1918 | மதுரை தத்துவ ஸ்ரீ மீன லோசனி வித்துவ பால சபா | சின்னையாபிள்ளை பழனியாபிள்ளை கருப்பையாபிள்ளை சுப்ரமணிய பிள்ளை |
சங்கரதாசு சுவாமிகள் கே.ஜி.குப்புசாமி நாயுடு உடுமலை சந்தச் சரபம் முத்துசாமிக் கவிராயர் சக்கரவாகம்பிள்ளை |
தி.க.சங்கரன் தி.க.முத்துசாமி தி. க. சண்முகம் தி.க.பகவதி |
04 | மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி | பக்கிரிசாமி பிள்ளை | எம். கந்தசாமி முதலியார்[5] | எம். ஜி. சக்கரபாணி எம்.ஜி. இராமச்சந்திரன் காளி என். ரத்தினம் பி. யு. சின்னப்பா கே.பி. காமாட்சி கே.பி.கேசவன் எம். கே. ராதா பக்கிரிசாமிபிள்ளை எம். ஜி. தண்டபாணி டி. ஆர்.பி. ராவ் [3] | |
05 | ஸ்ரீ மீனலோசனி பால சற்குண நாடக சபா | பழனியாபிள்ளை | |||
06 | 1922 | பால மனோகர சபா | தெ. பொ. கிருஷ்ணசாமி பாவலர் | தெ. பொ. கிருஷ்ணசாமி பாவலர் | எம். எம். சிதம்பரநாதன்[5] |
07 | மதுரை ஸ்ரீ பால ஷண்முகானந்த சபா | தி.க.ச. சகோதரர்கள் | எம். கந்தசாமி முதலியார் தி.க. சங்கரன் |
தி.க. சங்கரன் தி.க.முத்துசாமி தி.க.சண்முகம் தி.க.பகவதி என். எஸ். கிருஷ்ணன் எம்.ஆர்.சாமிநாதன் எஸ். வி. சகஸ்ரநாமம் கே. ஆர். ராமசாமி எஸ்.வி.சுப்பையா என். எஸ்.பாலகிருஷ்ணன் பிரண்ட் ராமசாமி டி.என்.சிவதாணு ஏ. பி. நாகராஜன் டி. வி. நாராயணசாமி எஸ். எஸ். இராசேந்திரன் எம்.எஸ். திரெளபதி எம். என். ராஜம் [6] | |
08 | ஆர்மோனியம் கே. டி. நடராஜ பிள்ளை | ||||
09 | ஶ்ரீ ராமா பாலகான சபா | காரைக்குடி வைரம் அருணாசலம் செட்டியார்[7] | |||
10 | ஸ்ரீ மங்கள பாலகான சபா | டி.பி.பொன்னுசாமிபிள்ளை | சிவாஜி கணேசன் [8] | ||
11 | திருச்சி பால பாரத சபா[9] | ||||
12 | என்.வி.சண்முகம் பட்டணம் பொடி நிறுவனம்[10] | ||||
13 | எட்டயபுரம் இளையராசா காசி விசுவநாத பாண்டியன் | எட்டயபுரம் இளையராசா காசி விசுவநாத பாண்டியன்[11] | |||
14 | புளியமாநகர் பாய்ஸ் கம்பெனி | புளியமாநகர் சுப்பா ரெட்டியார் | பி.எஸ். கோவிந்தன்[12] | ||
15 | 1933 | மதுரை தேவி பால விநோத சங்கீத சபா[13] | நவாப் இராஜமாணிக்கம் | சி.ஏ.ஐயாமுத்து[14] | |
16 | ராமானுஜம் நாடக சபா | தாடிக்கொம்பு பொன்னையா | தாடிக்கொம்பு பொன்னையா | கே. ஆர். அம்பிகா[15] | |
17 | மதுரை பால வினோத சங்கீத சபா | பக்கிரி ராஜா[16] | |||
18 | ராம பால கான சபா[17] | ||||
19 | தேவி பால சண்முகானந்த சபை | தர்மராஜபிள்ளை[18] | தி. க. சங்கரன் | தி. க. முத்துசாமி, தி. க. சண்முகம், தி. க. பகவதி |
நிறைவு
தொகு1910, 1920, 1930 ஆம் பத்தாண்டுகளில் சிறுவர்களாக நாடகத்துறைக்கு வந்தவர்கள் அடுத்தடுத்த பதினைந்து ஆண்டுகளில் தம் பதினைந்து அல்லது பதினாறாம் வயதுகளில் மகரக்கட்டு என்னும் குரல் மாற்றாம் ஏற்பட்டு நாடக சபைகளில் இருந்து வெளியேறினர். அவர்கள் அடுத்த சில ஆண்டுகளில் சிறப்பு நாடகங்களிலோ, திரைப்படங்களிலோ நடிக்கத் தொடங்கினர். 1940 ஆம் பத்தாண்டுகளில் திராவிட இயக்கத்தின் வளர்ச்சியின் காரணமாக இதிகாச, புராண, பக்தி நாடகங்களின் செல்வாக்குக் குறைந்தது. 1930 ஆம் ஆண்டு முதல் பேசும்படங்கள் வருகை நாடக நடிகர்களின் தொழிற்படுகளமாக மாறத்தொடங்கியது. இத்தகு மாற்றங்களால் சிறுவர் நாடகக்குழுகள் மெல்ல மெல்ல மறையத் தொடங்கின.
சான்றெண் அடைவு
தொகு- ↑ 1.0 1.1 சண்முகம் தி.க., நாடக்கலை, சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம் சென்னை, இ.பதி.1967, பக்.32
- ↑ சண்முகம் தி.க., நாடக்கலை, சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம் சென்னை, இ.பதி.1967, பக்.35-36
- ↑ 3.0 3.1 3.2 சண்முகம் தி.க., நாடக்கலை, சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம் சென்னை, இ.பதி.1967, பக்.37
- ↑ சண்முகம் தி.க., நாடக்கலை, சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம் சென்னை, இ.பதி.1967, பக்.38
- ↑ 5.0 5.1 சண்முகம் தி.க., நாடக்கலை, சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம் சென்னை, இ.பதி.1967, பக்.46
- ↑ சண்முகம் தி.க., நாடக்கலை, சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம் சென்னை, இ.பதி.1967, பக்.44
- ↑ சண்முகம் தி.க., நாடக்கலை, சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம் சென்னை, இ.பதி.1967, பக்.55
- ↑ சண்முகம் தி.க., நாடக்கலை, சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம் சென்னை, இ.பதி.1967, பக்.53
- ↑ சண்முகம் தி.க., நாடக்கலை, சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம் சென்னை, இ.பதி.1967, பக்.50
- ↑ சண்முகம் தி.க., நாடக்கலை, சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம் சென்னை, இ.பதி.1967, பக்.50
- ↑ சண்முகம் தி.க., நாடக்கலை, சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம் சென்னை, இ.பதி.1967, பக்.50
- ↑ சண்முகம் தி.க., நாடக்கலை, சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம் சென்னை, இ.பதி.1967, பக்.53
- ↑ வெங்கட் சாமிநாதன், நினைவுகளின் தடத்தில்-28, http://www.sify.com/khel/fullstory.php?id=14779479&page=2[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ சண்முகம் தி.க., நாடக்கலை, சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம் சென்னை, இ.பதி.1967, பக்.49
- ↑ http://www.kalachuvadu.com/issue-79/santhippu.htm பரணிடப்பட்டது 2013-12-16 at the வந்தவழி இயந்திரம் இசை நாடகக் கலைஞரின் அனுபவப் பதிவு கலைமாமணி கே.ஆர்.அம்பிகா
- ↑ சண்முகம் தி.க. எனது நாடக வாழ்க்கை, வானதி பதிப்பகம் சென்னை, ஏப்ரல் 1972, பக்.269
- ↑ மனோரமா, கடந்தகால நினைவுகள், http://www.lakshmansruthi.com/cineprofiles/manorama04.asp பரணிடப்பட்டது 2012-04-21 at the வந்தவழி இயந்திரம்
- ↑ சண்முகம் தி.க. எனது நாடக வாழ்க்கை, வானதி பதிப்பகம் சென்னை, ஏப்ரல் 1972, பக்.269