பாலா கைலாசம்
பாலா கைலாசம் (Bala Kailasam, 26 அக்டோபர் 1960-15 ஆகத்து 2014) என்பவர் ஒரு இந்திய ஆவணப் படப் படைப்பாளியும், நாடக எழுத்தளரும் ஆவார். இவர் முதன்மையாக தமிழகத் திரைப்படத்துறையில் பணியாற்றினார்.[1] இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான கே. பாலச்சந்தரின் மகன் ஆவார்.
பாலா கைலாசம் | |
---|---|
பிறப்பு | பாலா கைலாசம் 26 அக்டோபர் 1960 நன்னிலம், சென்னை மாநிலம், இந்தியா |
இறப்பு | 15 ஆகத்து 2014 | (அகவை 53)
பணி | இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் |
பெற்றோர் | கைலாசம் பாலசந்தர் (தந்தை) ராஜம் (தாய்) |
வாழ்க்கைத் துணை | கீதா |
கல்வி
தொகுபாலா கைலாசம் 1983 இல் சென்னை பல்கலைக்கழகத்தில், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியலில் பட்டம் பெற்றார். மின்னர் அமெரிக்காவில் உள்ள அயோவா பல்கலைக்கழகத்தில் திரைப்படம் மற்றும் காணொளி தயாரிப்பில் பயிற்சி பெற்றார்.[சான்று தேவை]
தொழில்
தொகுதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரித்த மின் பிம்பங்கள் புரொடக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் படைப்பாக்கம் மற்றும் வணிகத் தலைவராக பாலா கைலாசம் இருந்தார்.[2] 2011 முதல் 2013 வரை தமிழில் 24 மணி நேர செய்தி அலைவரிசையான புதிய தலைமுறை தொலைக்காட்சியின் படைப்பாக்கத் தலைவராக இருந்தார்.[3]
திரைப்படவியல்
தொகு- 1987 - The Twice Discriminated
- 1992-வேலி
- 1990-மரபு வாஸ்து
- 1992-Quality, Our own Heritage
- 2009-WritingonWater
- 2009-நீருண்டுநிலமுண்டு
தொலைக்காட்சித் தொடர்கள்
தொகு- 1993-ரகுவம்சம், சன் தொலைக்காட்சி, தமிழ்
- 1994-மர்மதேசம், சன் தொலைக்காட்சி, தமிழ்
- 1995 -
- ரமணி விசஸ் ரமணி (தமிழ் சிட்காம்), சன் தொலைக்காட்சி, தமிழ்
- நய்யாண்டி தர்பார்
- வீட்டுக்கு வீடு லூட்டி
- கதை அல்ல நிஜம்
நினைவு விருது
தொகுஆவணப் படத் தயாரிப்பில் சிறந்து விளங்கிய பாலா கைலாசத்தின் நினைவைப் போற்றும் வகையில் பாலா கைலாசம் நினைவு விருதை சினிமா ரெண்டெஸ்வஸ் அறக்கட்டளை நிறுவியது.[4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "K Balachander's son passes away - Times of India". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/K-Balachanders-son-passes-away/articleshow/40313952.cms.
- ↑ "South Television Industry lost a Visionary B Kailasam". MediaNews4U (in அமெரிக்க ஆங்கிலம்). 2014-08-16. பார்க்கப்பட்ட நாள் 2020-11-27.
- ↑ "Spotlight on Emotions". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-11-27.
- ↑ Staff Reporter (2019-01-20). "Mukul Haloi bags prize for documentary" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/cities/chennai/mukul-haloi-bags-prize-for-documentary/article26041374.ece.
- ↑ "Third edition of Bala Kailasam Memorial Award announced" (in en-IN). The Hindu. 2017-10-26. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/cities/chennai/third-edition-of-bala-kailasam-memorial-award-announced/article19922697.ece.