பாலேல்
பாலேல் (Pallel) என்பது இந்தியாவின் மணிப்பூரின் காச்சிங் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம்.[1] இது டிரான்-ஆசிய சூப்பர் நெடுஞ்சாலையின் நுழைவாயில் ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 39இல், மணிப்பூர் தலைநகர் இம்பாலின் தென்கிழக்கில் 46 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
பாலேல் Pallel | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 24°27′0″N 94°2′0″E / 24.45000°N 94.03333°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மணிப்பூர் |
மாவட்டம் | காக்சிங் |
ஏற்றம் | 830 m (2,720 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 4,193 |
மொழிகள் | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 795135 |
தொலைபேசி எண் | 03848 |
வாகனப் பதிவு | MN |
காலநிலை | 4 to 30 டிகிரி செல்சியசு (கோப்பென்) |
இணையதளம் | manipur |
மக்கள்
தொகுமணிப்பூரின் முதல் ஆளுநரான பிரஜ் குமார் நேரு, "மணிப்பூரின் அனைத்து வகையான மக்களையும் நீங்கள் பார்க்க விரும்பினால், பாலேல் வாயிலுக்குச் செல்லுங்கள்" என்று கூறினார்.[சான்று தேவை] பாலேல், பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் பரந்த அளவில் ஒன்றாக இணக்கமாக நிம்மதியாக வாழும் பகுதியாகும்.[சான்று தேவை] லாம்காங்சு, மாரிங்சு, அய்மோல்சு, குகி மக்கள், மெய்டெயிசு முதலானோர் ஒன்றாக வாழும் பகுதியாக உள்ளது.[சான்று தேவை]
கல்வி
தொகுஇது வணிக மையமாக இருப்பதால், கல்விக்கு உரிய முக்கியத்துவம் இல்லை. உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. அதனால் கல்லூரிகள் இன்னும் நிறுவப்படவில்லை. அருகிலுள்ள கல்லூரி 5 கி.மி. தொலைவில் கொம்லதாபியில் அமைந்துள்ளது. பாலேலில் உள்ள சில பள்ளிகள்
- ஐடியல் உயர்நிலைப் பள்ளி, மோல்னோய்
- எம்.ஜி. எவர்க்ரீன் உயர்நிலைப் பள்ளி, துயிஷிமி
- வி.எம் உயர்நிலைப் பள்ளி, எச். வஜாங்
- பாலேல் உயர்நிலைப் பள்ளி.
- டிரினிட்டி உயர்நிலைப் பள்ளி, மரிங்பாய்
- கார்னர்ஸ்டோன் உயர்நிலைப் பள்ளி, லுன்னஜாங்
- அமிதா நினைவு குழந்தைகள் பள்ளி
- மறுமலர்ச்சி கழகம்
வணிகம்
தொகுபாலேல் மணிப்பூரின் தலைமை வணிக மையத்திலிருந்து (மோரே) 62 கிலோமீட்டர்கள் (39 mi) தொலைவில் அமைந்துள்ளது. இது சர்வதேச அல்லது உள்நாட்டு வணிகத்தைத் தொடங்க நல்ல இடமாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Pallel". 2011 Census of India. இந்திய அரசு. Archived from the original on 6 September 2017. பார்க்கப்பட்ட நாள் 6 September 2017.