பால்சுவா குதிரைலாட வடிவ ஏரி
பால்சுவா குதிரைலாட வடிவ ஏரி (Bhalswa Horseshoe Lake) அல்லது பால்சுவா ஜீல் எனவும் அறியப்படும் இது, இந்தியாவின் தில்லியின் வடமேற்கு தில்லி மாவட்டதிலுள்ள ஒரு ஏரியாகும். இது முதலில் குதிரைலாட வடிவில் இருந்தது. இருப்பினும், பல ஆண்டுகளாக அதன் பாதி நிலப்பரப்பு சிறுது சிறுதாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறாது. இது முகுந்த்பூரின் அருகிலுள்ள பால்சுவா யகாங்கிர் பூரின் விரிவாக்கமான குறைந்த வருமானம் கொண்டோருக்கான வீட்டுக் குடியிருப்புப் பகுதியாகும். இந்த ஏரி ஒரு காலத்தில் சிறந்த ஈரநில சுற்றுச்சூழல் இடமாகவும் வனவிலங்கு வாழ்விடமாகவும் இருந்தது. மேலும், உள்ளூர் மற்றும் புலம்பெயர்ந்த வனவிலங்குகளுக்கு உணவளித்து வந்தது. குறிப்பாக நீர்ப்பறவைகள், நாரைகள் மற்றும் கொக்குகள் உட்பட. அருகில் உள்ள யமுனை ஆறு பல ஆண்டுகளாக அதன் போக்கை மாற்றியபோது அதன் நெளியாறு சுழல்களில் ஒன்றை இங்கே விட்டுச் சென்றது. நவீன டெல்லியை வெள்ளத்திலிருந்து பாதுகாக்க இந்த குதிரைலாட வடிவ ஏரி முதலில் உருவாக்கப்பட்டது.
பால்சுவா குதிரைலாட வடிவ ஏரி | |
---|---|
அமைவிடம் | தில்லி |
ஆள்கூறுகள் | |
வகை | ஏரி |
வடிநில நாடுகள் | இந்தியா |
அதிகபட்ச நீளம் | 4,610 அடிகள் (1,410 m) |
அதிகபட்ச அகலம் | 1,110 அடிகள் (340 m) |
ஏரியின் அழிவு
தொகுஏரியின் மேற்குப் பகுதியில் குப்பை கிடங்கு மீட்கப்பட்ட நிலத்தில் ஒரு குடியிருப்புப் பகுதி உள்ளது. கிழக்குப் பகுதியில் சில ஏக்கர் பரப்பளவிலுள்ள அகாசியா, கருவேலம், கீகர் மரங்களின் தோட்டம், உள்ளூரில் எஞ்சியிருக்கும் வனவிலங்குகளுக்கு சில வாழ்விடங்களை வழங்குகிறது.
தற்போதைய நிலை
தொகுஏரியும் அதைச் சுற்றியுள்ள வயல்வெளிகளும் முதலில் ஒரு சிறந்த ஈரநில சுற்றுச்சூழல் அமைப்பாக இருந்தபோதிலும், இது ஒரு வளமான வனவிலங்கு வாழ்விடத்தை ஆதரித்தது. பிற்காலத்தில் தில்லி அரசாங்கம் ஏரியை மாற்றி அதை நீர் விளையாட்டுகள்/விளையாட்டு வசதியாக மேம்படுத்தத் தொடங்கியது.[1]
இந்தியாவிலுள்ள மற்ற குதிரைலாட ஏரி
தொகுஇந்திய மாநிலமான சார்க்கண்டில் மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் மலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ள அடர்ந்த காடான சரந்தா காடுகளுக்கு அருகில் 16 கிமீ நீளம் கொண்ட அன்சுபா ஏரி என்ற மற்றொரு குதிரைலாட வடிவ ஏரி உள்ளது. இது மாநிலமான ஒடிசாவின் கட்டக் மாவட்டத்தில் உள்ள பங்கி என்ற ஊரில் அமைந்துள்ளது.
இவற்றையும் பார்க்கவும்
தொகு- பால்சுவா யகாங்கிர் பூர், தில்லி
- சாகிபி ஆறுதி
- நஜாப்கர் வடிகால், தில்லி
- நஜாப்கர் வடிகால் பறவைகள் சரணாலயம், தில்லி
- நஜாப்கர் ஏரி, தில்லி
- தேசிய விலங்கியல் பூங்கா, தில்லி
- ஓக்லா சரணாலயம், தில்லியை ஒட்டிய எல்லை மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ளது.
- யமுனை ஆறு
- சுல்தான்பூர் தேசியப் பூங்கா, அரியானா மாநிலம் குர்கான் மாவட்டத்தில் தில்லியின் எல்லையில் உள்ளது
சான்றுகள்
தொகு- ↑ World Tourism Day Dikshit flags off women’s expedition, 27 September 2011, Tribune News Service, The Tribune, Chandigarh, India
- How green was my city: eco-tourism on wheels shows impact of pollution, New Delhi, 14 December 2008, Express News Service, Indian Express Newspaper
- Bhalaswa: once there was a lake by Neha Sinha : New Delhi, Tue 11 August 2009.
- Bhalswa Lake cries for maintenance, DNA India, 25 June 2014[தொடர்பிழந்த இணைப்பு]
வெளி இணைப்புகள் =
தொகு- Groundwater levels improve in the Capital (Archived from the original on 28 December 2010)
- Wateraid.org[தொடர்பிழந்த இணைப்பு]
- Flowers, gardens to cover Delhi's sanitary landfill