பால கிருஷ்ண ஆனந்த்

பால கிருஷ்ண ஆனந்த் (Bal Krishan Anand)(1917-2007) என்பவர் இந்திய உடலியங்கியல் மற்றும் மருந்தியல் நிபுணர் ஆவார். இவர் 1951-ல் ஐப்போத்தலாமசு குறித்த ஆய்விற்காக நன்கு அறியப்பெற்றார்.[1] இவர் இந்தியாவில் நவீன நரம்பியல் இயற்பியலின் நிறுவனராகக் கருதப்படுகிறார்.[2]

பால கிருஷ்ண ஆனந்த்
பிறப்பு(1917-09-18)18 செப்டம்பர் 1917
லாகூர், பிரித்தானிய இந்தியா
இறப்பு2 ஏப்ரல் 2007(2007-04-02) (அகவை 89)
குடியுரிமைஇந்தியா
தேசியம்இந்தியர்
துறைநரம்புசெயலியல்
பணியிடங்கள்லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி,
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம்
கல்வி கற்ற இடங்கள்மன்னர் ஜோர்ஜ் மருத்துவக் கல்லூரி, லக்னோ
விருதுகள்பத்மசிறீ

இளமை & கல்வி

தொகு

இவர் லாகூரில் 1917-ல் பிறந்தார். இவரது இயற்பெயர் பால கிருஷ்ண ஆனந்த் என்பதாகும் இவர் 1940-ல் மன்னர் ஜோர்ஜ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பட்டம் பெற்றார். பின்னர் 1948-ல் முதுநிலை மருத்துவ பட்டமும் பெற்றார்.

மருத்துவ பணி

தொகு

ஆனந்து 1949-ல் லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் உடலியல் பேராசிரியராக பணியில் சேர்ந்தார்.

1950-ல் ராக்பெல்லர் அறக்கட்டளையின் உறுப்பினராக யேல் பல்கலைக்கழகத்திற்குச் சென்று ஜான் ப்ரோபெக்குடன் பணியாற்றினார்.[3] 1951-ல் தங்கள் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டனர். இவர் 1952-ல் இந்தியா திரும்பி, லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.

1956ஆம் ஆண்டு அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் உடலியல் துறையில் பேராசிரியராகச் சேர்ந்தார். இளநிலை மருத்துவம் மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டுதல்களுக்கான பேராசிரியராகச் சிறப்பாகப் பணியாற்றினார். பின்னர் இந்நிறுவனத்தின் முதல்வராகப் பதவி உயர்வுப் பெற்றார்.

1982-ல் ஷெர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் கழகத்தை நிறுவுவதில் முக்கியப் பங்காற்றினார்.

நூல் பட்டியல்

தொகு
  • பி.கே.ஆனந்த் மற்றும் ஜே.ஆர்.ப்ரோபெக்: எலிகள் மற்றும் பூனைகளில் உணவு உட்கொள்ளுதலில் ஐப்போதாலமிசின் கட்டுப்பாடு. யேல் உயிரியல் மருத்துவ ஆய்விதழ், 24:123-40, 1951.
  • பி.கே.ஆனந்த் மற்றும் எஸ். துவா: பிட்யூட்டரி அட்ரினோகார்டிகல் பதிலில் ஹைபோதாலமிக் ஈடுபாடு. உடலியல் ஆய்விதழ், I955. I27, I53-I56.
  • பி.கே.ஆனந்த் மற்றும் எஸ். துவா: லிம்பிக் அமைப்பின் (உள்ளுறுப்பு மூளை) மின் தூண்டுதலால் தூண்டப்பட்ட சுற்றோட்ட மற்றும் சுவாச மாற்றங்கள். நியூரோபிசியாலஜி ஆய்விதழ், 19: 393-400, 1956.
  • பி.கே.ஆனந்த், எஸ்.துவா மற்றும் பல்தேவ் சிங். இரத்த வேதியியல், எலக்ட்ரோ என்செபலோகிராபி மற்றும் மருத்துவ நரம்பியல் இயற்பியல் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களின் விளைவின் கீழ் ஹைபோதாலமிக் உணவூட்ட மையங்களின் மின் செயல்பாடு. தொகுதி 13, வெளியீடு 1, பிப்ரவரி 1961, பக்கங்கள் 54–59.
  • பி.கே.ஆனந்த், ஜி.எஸ்.சினா மற்றும் பல்தேவ் சிங். ஹைபோதாலமிக் "ஊட்ட மையங்கள்" செயல்பாட்டில் குளுக்கோஸின் விளைவு. அறிவியல் 2 நவம்பர் 1962: தொகுதி. 138. எண். 3540, பக். 597 – 598.

விருதுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Obituary, Professor B. K. Anand, by Jayasree Sengupta, Indian Journal of Physiology and Pharmacology, 2007, Vol. 51(2), pp:103-4.
  2. Review of Prof. B.K. Anand's scientific study: fifty years following his discovery of feeding centre. H N Mallick, Indian Journal of Physiology and Pharmacology. 2001, 45(3), pp:269-95.
  3. Anand B K and Brobeck J R. Hypothalamic control of food intake in rats and cats. Yale J. Biol. Med. 24:123-40, 1951.
  4. 4.0 4.1 "INSA Fellow". Indian National Science Academy. 2016. Archived from the original on 13 மே 2021. பார்க்கப்பட்ட நாள் 13 May 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால_கிருஷ்ண_ஆனந்த்&oldid=3668156" இலிருந்து மீள்விக்கப்பட்டது