முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி38

(பிஎஸ்எல்வி-சி38 இலிருந்து வழிமாற்றப்பட்டது)

முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி38 (PSLV-C38) ஏவுகலம், 31 செயற்கைக்கோள்களுடன் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சூன் 23 அன்று விண்ணில் ஏவப்பட்டது.[1] இந்த 31 செயற்கைக்கோள்களில், பாதுகாப்புப் படைகளுக்கு உதவும் கார்டோசாட் - 2 செயற்கைக்கோளுடன், துணைச் செயற்கைக்கோளாக 29 மீநுண் செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டன. இந்த நானோ செயற்கைக்கோள்களில் இந்தியாவுடன் ஆஸ்திரியா, பெல்ஜியம், சிலி, செக் குடியரசு, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், லாத்வியா, லிதுவேனியா, ஸ்லோவாகியா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட 14 நாடுகளின் செயற்கைக்கோள்களும் அடங்கும்.[2] பி.எஸ்.எல்.வி.யைச் செலுத்து வாகனத்தின் மொத்த எடை 955 கிலோகிராம். பூமியைத் துல்லியமாகக் கண்காணிக்கவும், தொலையுணர்வு சேவைகளை வழங்கவும் கார்டோசாட்-2 செயற்கைக்கோளை அனுப்பியிருக்கிறது இஸ்ரோ. இந்தச் செயற்கைக்கோள் ஐந்தாண்டுகளுக்குத் தொலையுணர்வு சேவைகளை வழங்கும்.

முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி38
rocket
திட்ட வகை31 செயற்கைக்கோள்களுடன்
இயக்குபவர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
இணையதளம்ISRO website
விண்கலத்தின் பண்புகள்
விண்கலம்முனைய துணைக்கோள் ஏவுகலம்
விண்கல வகைமீளப்பாவிக்கவியலா ஏவு அமைப்பு
தயாரிப்புஇந்திய விண்வெளி ஆய்வு மையம்
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்09:29:00, 23 சூன் 2017 (2017-06-23T09:29:00) (IST)
ஏவுகலன்முனைய துணைக்கோள் ஏவுகலம்
ஏவலிடம்ஸ்ரீஹரிகோட்டா
ஒப்பந்தக்காரர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
----
Polar Satellite Launch Vehicle missions
← பிஎஸ்எல்வி-சி37 PSLV-C39

பயன்பாடு

தொகு

சாலைப் போக்குவரத்து கண்காணிப்பு, நீர் விநியோகம், நிலத் தகவல் அமைப்பு, புவி சார் தகவல் அமைப்பு உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு இந்தச் செயற்கைக்கோள் உதவும் என்று இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "PSLV-C38 launch live updates: ISRO successfully puts Cartosat-2 Series and 30 other satellites into orbit". Indian Express. 23 June 2017. பார்க்கப்பட்ட நாள் 23 June 2017.
  2. T. K. Rohit (23 June 2017). "PSLV-C38 lobs 31 satellites into orbit". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 28 June 2017.

வெளியிணைப்புக்கள்

தொகு