பிங்கலி (எழுத்தாளர்)
பிங்கலி நாகேந்திரராவ் (Pingali Nagendrarao) (29 திசம்பர் 1901 - 6 மே 1971) இவர் தெலுங்குத் திரைப்படத்துறையில் திரைக்கதை எழுத்தாளரும், பாடலாசிரியரும், நாடக ஆசிரியரும் ஆவார் . [1] நகைச்சுவைப் பாடல்களாலும், காதல் பாடல்களாலும் பிரபலமான இவர் பல படங்களுக்கு வசனங்களையும் எழுதினார். பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா ஆகியவை கதை, திரைக்கதை, பாடல் வரிகளில் இவரது சிறந்த படைப்புகளாகும்.
பிங்கலி நாகேந்திர ராவ் | |
---|---|
பிறப்பு | 1901 திசம்பர் 29 ராஜம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 1971 மே 6 |
தேசியம் | இந்தியர் |
குடியுரிமை | இந்தியர் |
கல்வி நிலையம் | தேசியக் கல்லூரி, மச்சிலிப்பட்டணம் |
வகை | நாடக ஆசிரியர், கவிஞர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர் |
தெலுங்கில், திம்பகா, திங்காரி, கிம்பாலி போன்ற புதிய மற்றும் வேடிக்கையான சொற்களையும் சொற்றொடர்களையும் உருவாக்கியதில் இவர் பிரபலமானவர். இவர் தனது எழுத்துகளால் மந்திரவாதியாக கருதப்பட்டார். இவரது நாடகங்கள் அனைத்தும் சமீபத்தில் பிங்கலேயம் என்ற புத்தகத்தில் மறுபதிப்பு செய்யப்பட்டன.
வாழ்க்கை
தொகுஇவர், ஆந்திரப் பிரதேசத்தின் பொப்பிலி அருகே ராஜம் என்ற ஊரில் ஒரு தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் 1901 திசம்பர் 29 ஆம் தேதி கோபாலகிருஷ்ணையா மற்றும் மகாலட்சுமியம்மா ஆகியோருக்குப் பிறந்தார். இவரது உறவினர்களில் பெரும்பாலோர் மச்சிலிபட்டணத்தில் குடியேறியதால், இவர்களது குடும்பத்தினரும் அங்கு குடியேறினர். மச்சிலிப்பட்டணத்தின் ஆந்திர ஜடேயா கலாசாலையிலிருந்து இயந்திரப் பொறியியல் படிப்பைப் படித்தார்.
பின்னர், இந்திய சுதந்திர இயக்கத்தில் சேர்ந்த இவர், ஜன்மா பூமி என்ற நூலை தனது முதல் இலக்கியப் படைப்பாக எழுதினார். அதற்காக இவர் கைது செய்யப்பட்டார். சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் பின்னர் கரக்பூரில் வங்காள நாக்பூர் இரயில்வேயில் இரண்டு ஆண்டுகள் பணியிலிருந்தார். அங்கு தொழிலாளர் சங்கத்தின் தொழிற்சங்கத் தலைவராகவும் இருந்தார். இந்த காலகட்டத்தில், இவர் திவிஜேந்திரலால் ரே என்பவரின் மேபர் பதான் என்ற நூலை (1922) மேவாடு ராச்சியபட்டணம் என்றும், பாசனி (1923) ஆகியவற்றை வங்காளத்திலிருந்து தெலுங்கு மொழியில் மொழிபெயர்த்தார். அதே நேரத்தில் இவர் ஜெபுன்னிசா என்ற நூலையும் சொந்தமாக எழுதினார். மூன்று நாடகங்களும் கிருஷ்ண பத்திரிக்கா என்பதில் வெளியிடப்பட்டன. பின்னர், இவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்து, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கடைசியாக சபர்மதி ஆசிரமத்தை அடைந்தார்.
இவர் மீண்டும் மச்சிலிபட்டணம் வந்து தேவரகொண்ட வெங்கட சுப்பாராவின் இந்திய நாடக நிறுவனத்தில் 1924 இல் எழுத்தாளராகவும் செயலாளராகவும் சேர்ந்தார். இவர் 1928 ஆம் ஆண்டில் ஆஸ்கார் வைல்டின் டுபோயிஸ் ஆப் படுவா என்ற படைப்பை அடிப்படையாகக் கொண்டு விந்தியாராணி என்ற நாடகம், கிருஷ்ணதேவராயரின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட நா ராஜு என்ற நாடகம், மரோ பிரபஞ்சம் என்ற சமூக நாடகம், இராணி சம்யுக்தா என்ற வரலாற்று நாடகம் ஆகியவற்றை எழுதினார்.
இறப்பு
தொகுஇவர் 6 மே 1971 இல் இறந்தார்.
மேலும் காண்க
தொகு- பிங்கலி வெங்கையா, இந்தியக் கொடியின் வடிவமைப்பாளர்
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- ↑ Sinha (2000). Encyclopaedia of Indian Theatre: South Indian Theatre. Raj Publications.