பிச்சுவா கத்தி

பிச்சுவா கத்தி (Pichuva Kaththi) என்பது ஐயப்பன் எழுதி இயக்கிய 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ் அதிரடித்திரைப்படம் ஆகும். இப்படத்தில் இனிகோ பிரபாகரன் மற்றும் அனிஷா சேவியர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், இதில் யோகி பாபு, ராஜேந்திரன், ரமேஷ் திலக், பாலா சரவணன், மற்றும் காளி வெங்கட் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் உள்ளனர். இந்தப் படத்தின் தயாரிப்பு 2016 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தொடங்கியது. இத்திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனத்தைப் பெற்றது, இத்திரைப்படம் 22 செப்டம்பர் 2017 அன்று வெளியிடப்பட்டது. [1]

பிச்சுவா கத்தி
இயக்கம்ஐயப்பன்
தயாரிப்புசி. மத்தையன்
இசைஎன். ஆர். ரகுநந்தன்
நடிப்புஇனிகோ பிரபாகரன்
ஸ்ரீ பிரியங்கா
ஒளிப்பதிவுகே. ஜி. வெங்கடேஷ்
படத்தொகுப்புஎஸ். பி. ராஜா சேதுபதி
கலையகம்ஸ்ரீ அண்ணாமலையார் மூவீஸ்
வெளியீடு22 செப்டம்பர் 2017 (2017-09-22)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

  • பிரபாவாக இனிகோ பிரபாகரன்
  • ஸ்ரீ பிரியங்கா
  • மீனாவாக அனிஷா சேவியர்
  • சி. எம். செங்குட்டுவன்
  • பாபுவாக யோகி பாபு
  • ரமேஷாக ரமேஷ் திலக்
  • ராஜேந்திரன்
  • பாலா சரவணன்
  • காளி வெங்கட்
  • ஆர். என். ஆர். மனோகர்
  • சுஜாதா சிவகுமார்
  • சேரன்ராஜ்

கதைக்களம் தொகு

கிரிக்கெட், மது என மகிழ்ச்சியாக சுற்றித்திரியும் நண்பர்கள் இனிகோபிரபாகரன், ரமேஷ்திலக், யோகிபாபு. நாயகி ஶ்ரீபிரியங்கா, இனிகோவிடம் காதலைச் சொன்ன உற்சாகத்தில் நண்பர்களான மூவரும் குடிக்கிறார்கள். கூடுதலான மது குடிக்க ஆசைப்பட்டு, ஆடு திருடி மாட்டிக்கொள்கிறார்கள். அருகே இருக்கும் கும்பகோணம் காவல் நிலையத்தில் முப்பது நாட்கள் கையெழுத்து போட வேண்டிய சூழல். இது ஒரு கதை. இரண்டாவது ஹீரோ செங்குட்டுவன் – அனிஷாவின் காதலும், அவர்கள் காதலுக்கு உதவும் பாலசரவணன், அவர்களுக்கு இருக்கும் வாழ்க்கை தனிக்கதையாகும்.

ஆடு திருடி மாட்டிக்கொண்ட நண்பர்கள் இனிகோ, ரமேஷ்திலக், யோகிபாபு மூவரிடம் ’30,000 ரூபாய் பணம் கொடுக்கவேண்டும்’ என மிரட்டுகிறார் காவல் ஆய்வாளர் சேரன்ராஜ். பணம் திரட்ட முடியாத சூழலில், செங்குட்டுவனின் காதலி அனிஷாவின் செயினை அறுக்கத் திட்டம் போட்டு அதிலும் மாட்டிக்கொள்கிறார்கள். பிறகு, காவல்துறையின் கட்டாயத்தால், தவறுமேல் தவறு செய்யவேண்டிய சூழல் வருகிறது. வேறு வழியே இல்லாமல், வில்லன் மனோகரிடம் அடைக்கலம் ஆகவேண்டிய கட்டாயம் வருகிறது. தங்களுடைய இந்த நிலைமைக்குக் காரணமான அனிஷாவைப் பழிவாங்கவேண்டும், ஊருக்குத் திரும்பி காதலியைக் கரம்பிடிக்கவேண்டும் என்று திரியும் இனிகோ மற்றும் அவரது நண்பர்களின் நிலை என்ன ஆனது? ஊருக்குத் திரும்பினார்களா… இல்லையா? என்பதைச் சொல்கிறது, திரைக்கதை.

தயாரிப்பு தொகு

இந்த படம் 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் படமாக்கப்பட்டது, படப்பிடிப்பின் போது மொட்டை ராஜேந்திரன் ஒரு சிறிய காயமடைந்தார். [2] படத்தின் தயாரிப்பாளர் சி. மத்தையன், தனது மகன் சி. எம். செங்குட்டுவனை இரண்டாம் நிலை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். அவருக்கு, இணையாக புதுமுகம் அனிஷா சேவியர் நடித்தார். [3]

ஒலிப்பதிவு தொகு

இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார், அதே நேரத்தில் படத்தின் ஒலி உரிமைகளை ட்ரெண்ட் மியூசிக் வாங்கியது. இத்திரைப்படத்தின் இசைத்தொகுப்பு 16 ஏப்ரல் 2017 அன்று வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தில் ஏழு பாடல்கள் இடம்பெற்றன.

வெளியீடு தொகு

பிச்சுவா கத்தி தமிழகம் முழுவதும் மற்ற எட்டு படங்களுடன் திரையரங்கு வெளியீட்டைக் கொண்டிருந்தது. இது சென்னையில் 2017 ஆம் ஆண்டின் அதிக நெரிசலான வெளியீட்டுத் தேதியாக மாறியது.[4] இந்த திரைப்படம் 22 செப்டம்பர் 2017 அன்று கல[5]வையான விமர்சனங்களுக்கு ஆட்பட்டது. தி டைம்ஸ் ஆப் இந்தியாவின் விமர்சகர் இந்த படத்தை மிகவும் மோசமான கதைக்களமாக இல்லாதபோதிலும், பிச்சுவா கத்தி பார்வையாளர்களைக் கவர்வதில் வெற்றிபெறவில்லை என்று கூறியிருந்தார். நீர்த்துப்போன கதையோட்டம் மற்றும் திறனற்ற காட்சிகள் மற்றும் படத்தின் நம்பமுடியாத இறுதிக்காட்சி போன்றவை இத்திரைப்படத்தின் பலவீனங்கள் என்று கூறப்பட்டிருந்தது. [6]"பலவீனமான கதையும், மிகப் பலவீனமான திரைக்கதையும் படத்தை மொத்தமாகப் பழுதாக்கியிருக்கிறது" என்று ஆனந்த விகடன் இத்திரைப்படத்தின் விமர்சத்தில் குறிப்பிட்டிருந்தது. [5]

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிச்சுவா_கத்தி&oldid=3671762" இருந்து மீள்விக்கப்பட்டது