பினகோலோன்
பினகோலோன் (3,3-டைமெதில்-2-பியூட்டனோன்) கரிம வேதியியலில் ஒரு முக்கியமான கீட்டோன் ஆகும். இது ஒரு நிறமற்ற, புதினா அல்லது கற்பூர வாசனையையுடைய திரவமாகும். பூஞ்சைக் கொல்லி ட்ரைஅடிமெபான் தொகுப்பு மற்றும் களைக்கொல்லி மெட்ரிபுசின் தொகுப்புகளில் கிடைக்கக்கூடிய ட்ரைஅசோலைபினகோலோனின் முன்னோடி சேர்மமாகும். இந்த சேர்மம் ஒரு சீர்மையற்ற கீட்டோன் ஆகும். α-மெதில் தொகுதியானது குறுக்க வினைகளில் ஈடுபடும். கார்போனைல் தொகுதியானது வழக்கமான வினைகளில் (ஐதரசனேற்றம், ஒடுக்கத்தை தொடர்ந்த அமீனேற்றம்) ஈடுபடும். சோமன் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட பினகோலைல் ஆல்ககாலுடன் தொடர்புடைய சேர்மமாக இருப்பதன் காரணமாக இச்சேர்மமானது 1993 ஆம் ஆண்டில் வேதி ஆயுதங்கள் தொடர்பான மாநாட்டின் சாசனத்தின்படி அட்டைவணை 3 இல் சேர்க்கப்பட்டுள்ளது. ஆசுதிரேலியா தொகுதி உறுப்பு மாநிலங்களில் இதன் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. [2]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
3,3-டைமெதில்-2-பியூட்டனோன்
| |
வேறு பெயர்கள்
மூவிணைய பியூடைல் மெதில் கீட்டோன்
1,1,1-மும்மைமெதில்அசிட்டோன் | |
இனங்காட்டிகள் | |
75-97-8 | |
Beilstein Reference
|
1209331 |
ChemSpider | 6176 |
EC number | 200-920-4 |
யேமல் -3D படிமங்கள் | Image |
ம.பா.த | பினகோலோன் |
பப்கெம் | 6416 |
வே.ந.வி.ப எண் | EL7700000 |
| |
UN number | 1224 |
பண்புகள் | |
C6H12O | |
வாய்ப்பாட்டு எடை | 100.16 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற திரவம் |
அடர்த்தி | 0.801 கிராம்.செமீ−3 |
உருகுநிலை | −52[1] °C (−62 °F; 221 K) |
கொதிநிலை | 103 முதல் 106 °C (217 முதல் 223 °F; 376 முதல் 379 K) |
-69.86·10−6 செமீ3/மோல் | |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
ஈயூ வகைப்பாடு | F Xn |
R-சொற்றொடர்கள் | R11, R22 |
S-சொற்றொடர்கள் | S9, S16, S29, S33 |
தீப்பற்றும் வெப்பநிலை | 5 °C (41 °F; 278 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுவகுப்பறைகளில் மட்டுமாவது, மிகவும் பிரபலமான பினகோல் மறு ஒழுங்காக்கும் வினையின்படி பினகோலோன் உருவாக்கப்படுகிறது. இந்த வினையில் பினகோலானது (2,3-டைமெதில்பியூட்டேன்-2,3-டையால்) புரோட்டானேற்றம் அடைந்து பினகோலோன் கிடைக்கிறது.[3]
தொழில்முறையில் பினகோலோன் 4,4,5-ட்ரைமெதில்-1,3-டைஆக்சேனின் நீராற்பகுப்பினால் தயாரிக்கப்படுகிறது. 4,4,5-ட்ரைமெதில்-1,3-டைஆக்சேன் பிரின்சு வினையின்படி ஐசோப்ரீன் மற்றும் பார்மால்டிகைடு இணைந்து கிடைக்கும் விளைபொருளாகும். பினகோலோன் பிவாலிக் அமிலம் மற்றும் அசிட்டிக் அமிலங்கள் அல்லது அசிட்டோன் இவற்றில் ஒன்றை உலோக ஆக்சைடு வினைவேகமாற்றிகளின் மீது செலுத்தி கீட்டோனாக்கம் செய்வதன் மூலமாகவும் தயாரிக்கப்படுகிறது. 3-Methylbutanal is a starting material for 2,3-டைமெதில்-2-பியூட்டீனின் தொடங்கு பொருளாக 3-மெதில்பியூட்டேன்யால் இருக்கிறது. இவ்வாறு கிடைத்த 2,3-டைமெதில்-2-பியூட்டீன் பின்பு பினகோலோனாக மாற்றப்படுகிறது. C5 ஆல்ககால்களுடன் 2-மெதில்-2-பியூட்டனாலுடன் வினைபுரிவதன் மூலமாகவும் பினகோலோனானது தயாரிக்கப்படலாம்.[4]
மருந்தாகப் பயன்பாடு
தொகுபினகோலோன் பூஞ்சைக்கொல்லிகள், களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் ஆகிய பயன்பாட்டிற்காக அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
- விபுனசோலை பின்னோக்கிய பகுப்பாய்வு செய்வதிலிருந்து இது பினகோலோனிிருந்து பெறப்பட்டிருப்பதை அறிய முடிகிறது.
- இச்சேர்மம் பினாசிடில் மற்றும் நாமினிடில் ஆகியவற்றைத் தயாரிப்பதில் பயன்படுகிறது. .
- இஸ்டிரிபென்டால்
- ட்ரைபியூசோன்
- பைவாலோலைல்அசிட்டோநைட்ரைல்,டோராமாபிமோட் தொகுப்பில் பயன்படுகிறது
- ட்ரைஅடிமெபான்
- டைக்ளோபியூட்ரசோல்
- பாக்லோபியூட்ரசோல்
- வால்கனோசோல்
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.chemspider.com/Chemical-Structure.6176.html?rid=b009474b-a0f1-4132-a843-a9137c137689
- ↑ "Export Control List: Chemical Weapons Precursors". australiagroup.net. பார்க்கப்பட்ட நாள் 7 April 2017.
- ↑ G. A. Hill and E. W. Flosdorf (1941). "Pinacolone". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV1P0462.; Collective Volume, vol. 1, p. 462
- ↑ Siegel, H; Eggersdorfer (2012). "Ketones". Ullman's Encyclopedia of Chemistry. 5 20 (6). doi:10.1002/14356007.a15_077.