பினகோல்
பினகோல் (Pinacol) என்பது C6H14O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் ஒரு திண்மப் பொருளாக பினகோல் காணப்படுகிறது. விசினல் எனப்படும் அண்டை கார்பன் அணுக்களில் ஐதராக்சில் குழுக்களைக் கொண்டிருக்கும் ஒரு டையால் என்றும் பினகோல் கருதப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2,3-இருமெத்தில்பியூட்டேன்-2,3-டையால் | |
வேறு பெயர்கள்
2,3-Dimethyl-2,3-butanediol
Tetramethylethylene glycol 1,1,2,2-Tetramethylethylene glycol Pinacone | |
இனங்காட்டிகள் | |
76-09-5 | |
ChEBI | CHEBI:131185 |
ChEMBL | ChEMBL3289669 |
ChemSpider | 21109330 |
EC number | 200-933-5 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 6425 |
| |
UNII | 527QE7I5CO |
பண்புகள் | |
C6H14O2 | |
வாய்ப்பாட்டு எடை | 118.174 கி/மோல் |
தோற்றம் | வெண் திண்மம் |
அடர்த்தி | 0.967 கி/செ.மீ3 |
உருகுநிலை | 40 முதல் 43 °C (104 முதல் 109 °F; 313 முதல் 316 K) |
கொதிநிலை | 171 முதல் 173 °C (340 முதல் 343 °F; 444 முதல் 446 K) |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H228, H315, H319, H335 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 77 °C (171 °F; 350 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஅசிட்டோனிலிருந்து பினகோல் இணைப்பு கரிம வினையின் மூலம் பினகோல் தயாரிக்கப்படுகிறது.:[1]
வினைகள்
தொகுஒரு விசினல்-டையாலாக பினகோல் மறுசீரமைப்பு வினை மூலம் இதை பினாகோலோனுக்கு மறுசீரமைக்க முடியும். எடுத்துக்காட்டாக கந்தக அமிலத்துடன் சேர்த்து சூடாக்குவதன் மூலம் இச்சீரமைப்பு வினை நிகழ்கிறது.:[2]
போரேன் மற்றும் போரான் முக்குளோரைடுடன் சேர்த்து பினகோலைப் பயன்படுத்தலாம். பினகோல்போரேன், பிசு(பினகோலேட்டோ)இருபோரேன் உள்ளிட்ட செயற்கை இடைநிலை வேதிப்பொருள்களை தயாரிக்க பினகோல் பயனாகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Roger Adams and E. W. Adams. "Pinacol Hydrate". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv1p0459.; Collective Volume, vol. 1, p. 459
- ↑ G. A. Hill and E. W. Flosdorf (1941). "Pinacolone". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV1P0462.; Collective Volume, vol. 1, p. 462