பியர்சனின் நீண்டநக மூஞ்சூறு
பியர்சனின் நீண்டநக மூஞ்சூறு Pearson's long-clawed shrew | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | இயுலிபோடைப்ளா
|
குடும்பம்: | சோரிசிடே
|
பேரினம்: | சோலிசோரெக்சு தாமசு, 1924
|
இனம்: | சோ. பியர்சோனி
|
இருசொற் பெயரீடு | |
சோலிசோரெக்சு பியர்சோனி தாமசு, 1924 | |
பியர்சனின் நீண்டநக மூஞ்சூறு பரம்பல் |
பியர்சனின் நீண்டநக மூஞ்சூறு (Pearson's long-clawed shrew) (சோலிசோரெக்சு பியர்சோனி ) என்பது சோரிசிடே குடும்பத்தில் உள்ள பாலூட்டிகளின் ஒரு வகை. இது சோலிசோரெக்சு பேரினத்தினைச் சார்ந்த ஒற்றைச் சிற்றினமாகும்.[சான்று தேவை] இது இலங்கையில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரியாகும். இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட தாழ் நில புல்வெளி. இது வாழ்விடம் இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது. இது சிங்கள மொழியில் ශ්රී ලංකා නියදිගු මා හික් මීයා என அறியப்படுகிறது.
கொழும்பு அருங்காட்சியகத்தின் இயக்குநர் முனைவர் ஜோசப் பியர்சன் எஃப்.ஆர்.எஸ்.இ (1910-1933) நினைவாக இந்த மூஞ்சூறுவிற்கு பெயரிடப்பட்டது. பியர்சன் 1924ஆம் ஆண்டு ஜனவரி 1இல் இதனைக் கண்டுபிடித்தார்.[2]
விளக்கம்
தொகுதலை மற்றும் உடலின் நீளம் 12 முதல் 13 செ.மீ. வரையிலும் வாலின் நீளம் சுமார் 6 முதல் 7 செ.மீ. வரை இருக்கும். உடலின் மேற்பகுதியில் அடர் சாம்பல்-பழுப்பு நிறத்திலும், ஒளிரக்கூடிய முடிகளின் நுனிகளைக் கொண்டது உடலின் கீழ்ப்பகுதி வெளிறிய நிறமுடையது. முன்பாத நகங்கள் நீளமானவை. நடு நகம் 5 மி.மீ. நீளமுடையது. முன்காலின் பாதம் பழுப்பு நிறமுடையது. வால் அடர் பழுப்பு நிறத்தில், அடிப்பகுதியில் வெளிறியும் முடிகளற்றும் காணப்படும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ de A. Goonatilake, W.L.D.P.T.S.; Nameer, P.O.; Molur, S. (2008). "Solisorex pearsoni". IUCN Red List of Threatened Species 2008: e.T20332A88692605. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T20332A9186854.en. https://www.iucnredlist.org/species/20332/88692605.{{cite iucn}}: error: |doi= / |page= mismatch (help)
- ↑ The Eponym Dictionary of Mammals, Bo Beolens
ஆதாரங்கள்
தொகு- பூச்சிஉண்ணி நிபுணர் குழு 1996. சோலிசோரெக்சு பியர்சோனி . 2006 ஐ.யூ.சி.என் அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் சிவப்பு பட்டியல். 30 ஜூலை 2007 அன்று பதிவிறக்கம் செய்யப்பட்டது.