பியர் கிரில்ஸ்

பிரித்தானிய தலைமை சாரணர், சாகசக்காரர், எழுத்தாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்.

எட்வர்டு மைக்கேல் " பியர் " கிரில்ஸ் (Edward Michael "Bear" Grylls பிறப்பு 7 ஜூன் 1974) ஒரு பிரித்தானிய சாகசக்காரர், எழுத்தாளர், தொலைக்காட்சித் தொகுப்பாளர் மற்றும் தொழிலதிபர் ஆவார். பல சாகசங்களில் ஈடுபட்ட பிறகு பரவலாக கவனத்தை ஈர்த்தார், பின்னர் தொலைக்காட்சி தொடரான மேன் vs. ஒயில்டு (2006–2011, ரன்னிங் வைல்ட் வித் பியர் கிரில்ஸ் மற்றும் தி ஐலேண்ட் வித் பியர் கிரில்ஸ் போன்ற பல வனவிலங்கு உயிர்வாழும் தொலைக்காட்சித் தொடர்களிலும் ஈடுபட்டுள்ளார். ஜூலை 2009 இல், கிரில்ஸ் 35 வயதில் யுனைடெட் கிங்டம் மற்றும் வெளிநாட்டுப் பிரதேசங்களின் இளைய தலைமை சாரணராக நியமிக்கப்பட்டார், [1] இந்தப் பதவியை 2015 முதல் இரண்டாவது முறையாக வகித்துள்ளார்.

பியர் கிரில்ஸ்
Coventry Scouts groups have a visit from Bear Grylls.jpg
2012இல் கவெண்ட்ரி சாரண இயக்க சந்திப்பில் கிரில்ஸ்
பிறப்புஎட்வர்டு மைக்கேல் கிரில்ஸ்
7 சூன் 1974 (1974-06-07) (அகவை 48)
இலண்டன், இங்கிலாந்து
கல்விஈடன் கல்லூரி
படித்த கல்வி நிறுவனங்கள்
 • இங்கிலாந்தின் மேற்குப் பல்கலைக்கழகம், பிரிஸ்டால்
 • பிர்பெக் கல்லூரி
பணி
வாழ்க்கைத்
துணை
சாரா கேனிங்சு நைட் (தி. 2000)
பிள்ளைகள்3
உறவினர்கள்
 • மைக்கேல் கிரில்சு (தந்தை)
இராணுவப் பணி
சார்புஐக்கிய இராச்சியம்ஐக்கிய இராச்சியம்
சேவை/கிளைFlag of the British Army.svg British Army
சேவைக்காலம்1994–1997
வலைத்தளம்
beargrylls.com

தனிப்பட்ட வாழ்க்கைதொகு

எட்வர்டு மைக்கேல் கிரில்ஸ் ஜூன் 7,1974 இல் இலண்டனில் பிறந்தார் [2] வலுவான துடுப்பாட்டப் பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர்.இவரது தாத்தா நெவில் ஃபோர்டு மற்றும் கொள்ளு தாத்தா வில்லியம் அகஸ்டஸ் ஃபோர்டு இருவரும் முதல் தரத் துடுப்பாட்ட வீரர்கள் .நான்கு வயது வரை வடக்கு அயர்லாந்தின் இடோனகடீயில் வளர்ந்தார், அவருடைய குடும்பம் வைட்டுத் தீவில் உள்ள பெம்பிரிட்ஜுக்கு குடிபெயர்ந்தது. [3] [4]

இவர் கன்சர்வேட்டிவ் கட்சி (ஐக்கிய இராச்சியம்) அரசியல்வாதியான சர் மைக்கேல் கிரில்ஸ் மற்றும் அவரது மனைவி சாரா "சாலி" ( நீ ஃபோர்டு) ஆகியோரின் மகனாகப் பிறந்தார். [5] கிரில்சுக்கு லாரா ஃபாசெட் எனும் சகோதரி உள்ளார். இவர் தான் கிரில்சுக்கு ஒரு வாரமாக இருந்தபோது பியர் எனும் புனைப் பெயரினை வைத்தார்.[6]

சிறுவயதிலிருந்தே, புகழ்பெற்ற ராயல் படகுப் படைப்பிரிவில் உறுப்பினராக இருந்த தனது தந்தையுடன் மலை ஏறுதல் மற்றும் பயணம் செய்யக் கற்றுக்கொண்டார். இளைஞனாக இருந்தபோது விண்வீழ் விளையாட்டினைக் கற்றுக்கொண்டார் மற்றும் சோடோகான் கராத்தேவில் இரண்டாவது டான் பிளாக் பெல்ட்டைப் பெற்றார். [7] ஆங்கிலம், எசுப்பானியம் மற்றும் பிரான்சிய மொழி ஆகிய மொழிகளைப் பேசுகிறார். [8] இவர் ஒரு இங்கிலாந்து திருச்சபையினைச் சேர்ந்தவர் ஆவார். [9] கிறிஸ்தவ நம்பிக்கை தனது"முதுகெலும்பு" என்று விவரித்தார்: [10] "நாம் கேட்பதற்குத் தயாராக இருந்தால் கடவுள் நம்மைச் சுற்றி இருப்பார்" எனக் கூறியுள்ளார்.[11]

கிரில்ஸ் 2000 ஆம் ஆண்டில் சாரா கேனிங்ஸ் நைட்டை மணந்தார் [12] இவர்களுக்கு ஜெஸ்ஸி (பிறப்பு 2003), மர்மடுகே (பிறப்பு 2006) மற்றும் ஹக்கிள்பெர்ரி (பிறப்பு 2009) என்ற மூன்று மகன்கள் உள்ளனர். [13] [14]

கல்விதொகு

கிரில்ஸ் ஈடன் ஹவுஸ், லுட்கிரோவ் பள்ளி மற்றும் ஈடன் கல்லூரியில் கல்வி பயின்றார், அங்கு முதல் மலையேறும் சங்கத்தினைத் தொடங்க உதவினார். இங்கிலாந்தின் மேற்கு பல்கலைக்கழகம் [15] மற்றும் பிர்க்பெக் கல்லூரிகளில் எசுப்பானியம் மற்றும் ஜெர்மன் ஆகிய மொழிகளைப் பயின்றார். [16] [17]

இராணுவ சேவைதொகு

பள்ளியை விட்டு வெளியேறிய பிறகு, சிக்கிம் மற்றும் மேற்கு வங்கத்தின் மலைகளில் மலையேற்றம் செய்தார்.[18] 1994 – 1997 வரை, பிராந்திய இராணுவத்தில் 21 SAS உடன் ஒரு துருப்புப் படையில் பணியாற்றினார். நிராயுதபாணியான போர், பாலைவன மற்றும் குளிர்காலப் போர், உயிர்வாழ்வு, மலை ஏறுதல், பாராசூட்டிங் மற்றும் வெடிபொருட்கள் ஆகியவற்றில் பயிற்சி பெற்றார். உயிர்வாழும் பயிற்றுவிப்பாளராக ஆனார், அவர் இரண்டு முறை வட ஆப்பிரிக்காவிற்கு அனுப்பப்பட்டார். 1996 இல் கென்யாவில் நிகழ்ந்த வான்குடை மிதவை விபத்திற்குப் பிறகு இரானுவத்தில் இருந்து விலகினார்.[19] [20] இந்த விபத்தில் மூன்று முதுகெலும்புகள் உடைந்தன . [20]

2004 ஆம் ஆண்டில், கிரில்ஸுக்கு ராயல் நேவல் ரிசர்வ் துணைநிலை கட்டளையாளர் பதவி வழங்கப்பட்டது. [21] பின்னர் 2013 இல் அவருக்கு ராயல் மரைன் ரிசர்வ், [22] கௌரவ துணைநிலை படையணித் தலைவர் பதவி வழங்கப்பட்டது மற்றும் ஜூன் 2021 இல் கெளரவ கட்டளையாளராகப் பதவி உயர்வு வழங்கப்பட்டது.

தொலைக்காட்சிதொகு

கிரில்ஸ் இராணுவத்தின் போதைப்பொருள் எதிர்ப்பு தொலைக்காட்சி பிரச்சாரத்திற்கு தலைமை தாங்குவதற்கு இலண்டன் பாதுகாப்பு அமைச்சகத்தால் பயன்படுத்தப்பட்டார், மேலும் பிரித்தானிய வணிக நிறுவனத்திற்கான விளம்பர பிரச்சாரத்தில் இடம்பெற்றார். ஃப்ரைடே நைட் வித் ஜொனாதன் ராஸ், தி ஓப்ரா வின்ஃப்ரே ஷோ, லேட் நைட் வித் கோனன் ஓ பிரையன், தி டுநைட் ஷோ வித் ஜே லெனோ, அட்டாக் ஆஃப் தி ஷோ , லேட் ஷோ வித் டேவிட் லெட்டர்மேன், ஜிம்மி கிம்மல் லைவ்! மற்றும் ஹாரி ஹில்லின் டிவி பர்ப் உள்ளிட்ட பல பேச்சு நிகழ்ச்சிகளில் கிரில்ஸ் விருந்தினராக இருந்துள்ளார்.

எஸ்கேப் டூ தி லீஜியன்தொகு

2005 ஆம் ஆண்டில், எஸ்கேப் டு தி லெஜியன் என்ற நான்கு-பகுதி கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியை கிரில்ஸ் படமாக்கினார், இது கிரில்ஸ் மற்றும் பதினொரு "சேர்க்கையாளர்கள்" சஹாராவில் பிரெஞ்சு வெளிநாட்டு படையணியின் அடிப்படை பாலைவனப் பயிற்சி பெறுவது தொடர்பானது. இந்த நிகழ்ச்சி முதலில் இங்கிலாந்தில் சேனல் 4லும், [23] அமெரிக்காவில் இராணுவ சேனலில் ஒளிபரப்பப்பட்டது . [24]

சான்றுகள்தொகு

 1. Quinn, Ben, "Survivalist Bear Grylls named as new Chief Scout" Guardian.co.uk, 17 May 2009.
 2. "Edward Michael Grylls in the England & Wales, Civil Registration Birth Index, 1916–2007". Ancestry.com. Ancestry. 16 June 2019 அன்று பார்க்கப்பட்டது.
 3. "Sunday Life reclaims the celebs with Ulster ties". http://www.belfasttelegraph.co.uk/sunday-life/sunday-life-reclaims-the-celebs-with-ulster-ties-14547046.html. 
 4. "My Life In Travel: Bear Grylls", Independent.co.uk, 17 April 2004.
 5. "Obituary: Sir Michael Grylls", Telegraph.co.uk, 13 February 2001.
 6. Dudman, Jane (12 January 2011). "Leading questions: Bear Grylls, chief Scout". The Guardian (London). https://www.theguardian.com/society/2011/jan/12/bear-grylls-scout-association-chief-scout. 
 7. "Bear Grylls: 'I'm 40, and fitter than I've ever been'" (in en-GB). https://www.telegraph.co.uk/men/active/11600282/Bear-Grylls-Im-40-and-fitter-than-Ive-ever-been.html. 
 8. "Ask Bear Your Questions", BearGrylls.com; accessed 3 August 2015.
 9. "Beauty is not enough for the Church – CatholicHerald.co.uk". catholicherald.co.uk (ஆங்கிலம்). 5 February 2017 அன்று பார்க்கப்பட்டது.
 10. Greig, Pete (2016). "Foreword". Dirty Glory: Go Where Your Best Prayers Take You. Hodder. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-63146-616-8. https://books.google.com/books?id=L_a8CwAAQBAJ. 
 11. Grylls, Bear (2004). Facing the Frozen Ocean: One Man's Dream to Lead a Team Across the Treacherous North Atlantic. London: Pan Macmillan. பக். 151. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4472-2778-6. https://books.google.com/books?id=zqt6stF-aSAC. 
 12. "Out of the Wild: Bear Grylls survives the urban jungle". mensvogue.com. 16 March 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. 14 July 2008 அன்று பார்க்கப்பட்டது.
 13. Bear Grylls Welcomes Son Huckleberry Celebrity Baby Blog, 15 January 2009
 14. "Biography". BearGrylls.com. 7 February 2012 அன்று பார்க்கப்பட்டது.
 15. . 
 16. "History of Birkbeck: 1900s". Birkbeck. 3 December 2007 அன்று பார்க்கப்பட்டது.
 17. "Notable alumni". Birkbeck. 3 December 2007 அன்று பார்க்கப்பட்டது.
 18. "Bear Grylls". hmforces.co.uk. 7 July 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 January 2012 அன்று பார்க்கப்பட்டது.
 19. Bear Grylls பரணிடப்பட்டது 5 பெப்ரவரி 2019 at the வந்தவழி இயந்திரம் at sasspecialairservice.com
 20. 20.0 20.1 . 
 21. "Bear Grylls (Edward Michael Grylls): A lifetime of adventure" (PDF). The Scout Association. 6 July 2016 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 21 July 2013 அன்று பார்க்கப்பட்டது.
 22. "Royals' Bear Force as Adventurer Joins Cadets at Lympstone and Dartmouth". News & Events. Royal Navy. 14 November 2013. 15 April 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
 23. "Escape to the Legion" Channel4.com
 24. "Military Channel: TV Listings: Escape to the Legion". The Military Channel. 2007. 26 May 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 May 2007 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பியர்_கிரில்ஸ்&oldid=3583108" இருந்து மீள்விக்கப்பட்டது