பிரசாந்த் செல்லத்துரை
பிரசாந்த் செல்லத்துரை (Prashanth Sellathurai, பிறப்பு: 1 அக்டோபர் 1986) ஓர் ஆத்திரேலிய சீருடற்பயிற்சி வீரர் ஆவார்.[1][2] இவர் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
தனித் தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
நாடு | ஆத்திரேலியா | ||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 1 அக்டோபர் 1986 | ||||||||||||||||||||||||||||||||||||||
பிறந்த இடம் | ஓபர்ன், நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா | ||||||||||||||||||||||||||||||||||||||
நகரம் | சிட்னி, ஆத்திரேலியா | ||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 1.50 மீ | ||||||||||||||||||||||||||||||||||||||
வகை | ஆண்கள் கலையாற்றல் | ||||||||||||||||||||||||||||||||||||||
நிலை | மூத்தவர் | ||||||||||||||||||||||||||||||||||||||
|
இலங்கைத் தமிழ் வம்சாவளியினரான இவரது பெற்றோர் 1980களின் முற்பகுதியில் இலங்கையிலிருந்து ஆத்திரேலியாவிற்கு குடிபெயர்ந்தனர். பிரசாந்த் ஆத்திரேலியாவில் பிறந்தார். சிட்னியில் உள்ள திரித்துவ இலக்கணப் பாடசாலையில் கல்வி கற்றார்.
2010 ஆம் ஆண்டு புது தில்லியில் நடைபெற்ற 2010 பொதுநலவாயப் போட்டிகளில் தமது முதலாவது பொதுநலவாயத் தங்கப் பதக்கத்தை வென்ற ஆத்திரேலிய ஆடவர் அணியில் செல்லத்துரை இடம் பெற்றிருந்தார், இது அவரது நிலைத்த வளையங்களில் சிறப்பாக செயல்பட்டதால் உறுதி செய்யப்பட்டது.[3][4] தில்லியில் நடந்த குதிரைக் கரடு பொதுநலவாயப் போட்டியில் தங்கம் வென்றார்.
பிரசாந்த் உலக வாகையாளர் போட்டிகளில் குதிரையில் இரண்டு வெண்கலங்கள் (2006 ஆர்கசு, 2009 இலண்டன்), ஒரு வெள்ளி (2010 உரொட்டர்டாம்) என மூன்று பதக்கங்களைப் பெற்றார்.
செல்லத்துரை 2019 ஆம் ஆண்டு பக்கிங்காம் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்று மருத்துவராகப் பணியாற்றுகிறார். அத்துடன் இங்கிலாந்தின் மில்ட்டன் கெயின்சு ஜிம்னாஸ்டிக்சில் தன்னார்வலராகவும் பணியாற்றுகிறார்.
நியூ சவுத் வேல்சு மாநில சிறப்புத் தகுதி
தொகு2022 அக்டோபரில் ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்சு மாநில அரசு மாநில வாகையாளர் மண்டபத்தில் பிரசாந்த் செல்லத்துரையின் பெயரை இணைத்தது.[4][5][6] ஆத்திரேலியாவில் இப்படியான ஒரு பெருமையைப் பெறும் முதல் தமிழர் என்ற பெருமையும் இவரைச் சாரும்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ Prashanth Sellathurai பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Kosmidis sparkles to capture gold in floor exercise பரணிடப்பட்டது 14 செப்டெம்பர் 2012 at the வந்தவழி இயந்திரம், Gulf Times
- ↑ Australian men's gymnastics team win first ever Commonwealth gold, தி ஆத்திரேலியன், அக்டோபர் 5, 2010
- ↑ 4.0 4.1 SIX NEW INDUCTEES FOR NSW HALL OF CHAMPIONS, ausleisure, 24 அக்டோபர் 2022
- ↑ Sellathurai Inducted to NSW HALL OF CHAMPIONS, commonwealthgames.com.au, 25 அக்டோபர் 2022
- ↑ NSW HALL OF CHAMPIONS Announces Six New Inductees, SportsNSW, 20 அக்டோபர் 2022
- ↑ NSW Hall of Champions இல் சேர்க்கப்பட்ட முதல் தமிழர்!, சிறப்பு ஒலிபரப்புச் சேவை