பிரதம மந்திரி ஏழைகளுக்கான உணவுப் பாதுகாப்பு திட்டம்

வார்ப்புரு:பார்வையிட

பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா ( ஆங்:PMGKAY)பிரதம மந்திரியின் ஏழைகளுக்கான உணவுப் பாதுகாப்புத் திட்டம் ) என்பது இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோய்களின் போது, மார்ச் 26, 2020 அன்று இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட உணவுப் பாதுகாப்பு நலத் திட்டமாகும். [1] இந்தத் திட்டம் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் உணவு மற்றும் பொது விநியோகத் துறையால் இயக்கப்படுகிறது. ஆனால் நோடல் அமைச்சகம் நிதி அமைச்சகம் ஆகும்.

அனைத்து முன்னுரிமை குடும்பங்களுக்கும் (குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் ஏழைகளுக்கான உணவுத் திட்டத்தால் அடையாளம் காணப்பட்டவர்கள்) பொது விநியோக முறை மூலம் தானியங்களை வழங்குவதன் மூலம் இந்தியாவின் ஏழை குடிமக்களுக்கு உணவளிப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்படி, ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை (பிராந்திய உணவு விருப்பங்களின்படி) மற்றும் குடும்ப அட்டை வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கிலோ பருப்பு வழங்கப்படுகிறது. [2] வழக்கமாக வாங்கும் தானியங்களுடன் இந்த கூடுதல் அளவு இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கான மொத்த செலவையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது.[3] இந்த நலத்திட்டத்தின் அளவானது, உலகின் மிகப்பெரிய உணவுப் பாதுகாப்புத் திட்டமாக அமைகிறது. [4]

புள்ளிவிவரம்[5][6][7]

தொகு
கட்டம் மாதம்-வருடம் திட்ட நிதி ஓதுக்கீடு (கோடி) வழங்க திட்டமிடப்பட்ட உணவின் அளவு (இலட்சம் மெட்ரிக் டன்) வழங்கப்பட்ட உணவின் அளவு இலட்சம் மெட்ரிக் டன்) பயனாளிகள் விவரம் (கோடி)
I ஏப்ரல்-ஜீன் 2020 106000 321 298.8 75
II ஜீலை-நவம்பர் 2020
III[8][9] மே-ஜீன் 2021 25000 79.46 75.2 75.18
IV[10] ஜீலை-நவம்பர் 2021 62380 198.78 186.72
  • ஜீலை 2021ல், 74.93
  • ஆகஸ் 2021ல், 74.95
  • செப் 2021ல், 75.01
  • அக் 2021ல், 74.55
  • நவ 2021ல், 74.04
V[11] [12] டிசம்பர் 21 - மார்ச் 22 53342 159 115.03
  • டிச 2021ல், 73.60
  • ஜன 2022ல், 74.50
  • பிப் 2022ல், 63.10
  • மார் 2022ல், 19.57
VI[13] ஏப்ரல் 22 - செப்டம்பர் 22 80000 244 தோரயமாக 80கோடி
VII[14] அக்டோபர் - திசம்பர் 22 44762 122.76[15]

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013ன் கீழ் அந்த்யோதயா விநியோக அட்டை வைத்திருக்கும் குடும்பத்தினருக்கு 35கி உணவு தானியங்கள் மற்றும் முன்னூரிமை விநியோக அட்டை வைத்திருக்கும் குடும்பத்தினருக்கு ஒரு நபருக்கு 5கிலோ உணவு தானியங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வந்தன.[16]

கோவி-19 தொற்றுநோய் காலத்தில், பிரதமர் நரேந்திரமோதி வழக்கமாக வழங்கும் உணவு தானியங்களுடன் பிரதம மந்திரி ஏழைகளுக்கான உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அந்த்யோதயா மற்றும் முன்னூரிமை விநியோக அட்டை வைத்திருக்கும் குடும்பத்திலுள்ள ஒவ்வொரு நபருக்கும் கூடுதல் 5கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் ஏப்ரல் 2020 முதல் திசம்பர் 2022 வரை ஏழு கட்டங்களாக, 1121 மெட்ரிட் டன் உணவு தானியங்கள், 3.9இலட்சம் கோடி செலவில் விநியோகிக்ப்பட்டன.[17]

1 ஜனவரி 2023 முதல், பிரதம மந்திரி ஏழைகளுக்கான உணவுப் பாதுகாப்பு திட்டம் நீட்டிக்கப்படவில்லை, இருப்பினும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் அந்த்யோதயா மற்றும் முன்னூரிமை விநியோக அட்டை வைத்திருக்கும் குடும்பத்தினர் வாங்கும் வழக்கமான உணவு தானியங்கள் நாடு முழுவதும் மத்திய அரசினால் இலவசமாக வழங்கப்படும் திட்டம் துவங்கப்பட்டது. இதன்மூலம் "ஒரே நாடு ஒரே ரேசன்" விநியோகத்திலுள்ள மாநிலங்களுக்கிடையேயான விலை வித்தியாசங்கள் களையப்பட்டு எளிமைப்படுத்தப்படுகின்றது. இதனால் மத்திய அரசிற்கு உணவு பாதுகாப்பு பட்ஜெடாக, இரண்டு இலட்சம் கோடி ஆகின்றது.[18]

கண்ணோட்டம்

தொகு

இந்தத் திட்டம் ஆரம்பத்தில் 2020 மார்ச் 26 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்புடன் தொடங்கப்பட்டது, அவர் கோவிட்-19 நோய் பரவலின் போது தேசத்திற்கு ஆற்றிய தனது முதல் உரையில் தற்போதுள்ள பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டத்தை அறிவித்தார். கோவிட்-19 ஆரம்பத்தில், இந்தத் திட்டம் 2020 ஏப்ரல்-ஜூன் மாதங்களூக்காக கருவூலத்திலிருந்து 1.70 இலட்சம் கோடி செலவில் முதன்முதலாகத தொடங்கப்பட்டது.[19]

பின்னர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இத்திட்டம் நவம்பர் 2020 வரை நீட்டிக்கப்பட்டது. மே 2020 இறுதிக்குள், இந்த திட்டம் 74 கோடி பயனாளிகளை எட்டியதாக உணவு அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது.திட்டத்தைப் பாராட்டிய ஒரு அரசாங்க அதிகாரி, இந்த நலத்திட்டத்தின் கீழ் மக்களுக்கு உணவு வழங்குவது "சுவாரசியமானது" என்று குறிப்பிட்டார். [20] மற்றொரு மத்திய அமைச்சர் இந்தத் திட்டம் குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டில் யாரும் பசியுடன் தூங்க செல்லாமலிருக்க இது உறுதி செய்யும். என்றார்." [21]

இந்த முயற்சி ஜூன் 2020 இறுதிக்குள் காலாவதியாகவிருந்ததால், நாட்டின் பத்து மாநிலங்கள் திட்டத்தின் காலக்கெடுவை நீட்டிக்கக் கோரின. [22] இந்தியாவில் கோவிட்-19 தொடங்கியதில் இருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய ஆறாவது உரையில் மோடி இத்திட்டத்னை நீடிக்கும் வண்ணம், இந்தியாவில் வரவிருக்கும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, PMGKAY-ஐ நவம்பர் 2020 வரை நீட்டிப்பதாக அறிவித்தார், இது அரசாங்க மதிப்பீட்டின்படி 80கோடி பயனாளிகள் பயனடைவர் என்றும், இந்த திட்டத்திற்கு 90,000 கோடி (US$11 பில்லியன்) கூடுதல் செலவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தத் திட்டத்தின் அளவின் காரணமாக, உலகின் மிகப்பெரிய உணவுப் பாதுகாப்புத் திட்டமாகத் திகழ்கிறது. [4] மோடியின் உரையைப் பற்றி அறிக்கையிடும் பைனான்சியல் எக்ஸ்பிரஸ், இந்தத் திட்டத்தின் மூலம் "அமெரிக்க மக்கள் தொகையை விட 2.5 மடங்கும், இங்கிலாந்தின் மக்கள்தொகையை விட 12 மடங்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்கள்தொகையை விட இரண்டு மடங்கும் உணவளிக்க முடியும்" என்று கூறியது. [23] இத்திட்டத்தின் வெற்றிக்காக மோடி தனது உரையில் "கடின உழைப்பாளிகளான விவசாயிகள் மற்றும் நேர்மையான வரி செலுத்துபவர்களுக்கும்" நன்றி தெரிவித்தார். [24] மோடியின் அறிவிப்புக்குப் பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தத் திட்டத்தைச் சீராகச் செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக அமைச்சர்கள் குழுவின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். [25]

உணவு பாதுகாப்பு திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்ற மாநிலங்களின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், உணவு வழங்கல் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மேலும் கூறியதாவது: அரசு மற்றொரு முக்கிய திட்டமான "ஒரே நாடு - ஒரே குடும்ப அட்டை " திட்டத்தினை மார்ச் 2021 இல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார். புதிய முன்மொழியப்பட்ட திட்டம், குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நாடு முழுவதும் உள்ள எந்த "நியாய விலை" கடைகளிலிருந்தும் மானிய விலையில் தானியங்களைப் பெற உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. [22]

கிடை மட்டத்தில் ஊழல் காரணமாக விநியோகம் தோல்வி

தொகு

நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்திலிருந்து பிரதமர் மோடியின் உரைக்குப் பிறகு வெளியிடப்பட்ட தரவு, உணவு விநியோகஸ்தர்கள் மற்றும் கிராம சபை உறுப்பினர்களிடையே நிலவும் ஊழலால் பெரும்பாலான இலவச தானியங்கள் தகுந்த பயனாளிகளுக்கு விநியோகிக்கப்படவில்லை என்பதை வெளிப்படுத்தியது. 2020 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோவா மற்றும் தெலுங்கானா இரண்டும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் 1% க்கும் குறைவாக விநியோகித்தது, மேலும் 11 மாநிலங்கள்(ஆந்திரப் பிரதேசம், குஜராத், ஜார்கண்ட், லடாக், மகாராஷ்டிரா, மேகாலயா, ஒடிசா, சிக்கிம், தமிழ்நாடு மற்றும் திரிபுரா) தானியங்களை விநியோகிக்கவில்லை. மேலும் ஆறு மாநிலங்கள் (பீகார், குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, சிக்கிம் மற்றும் லடாக்) ஜூன் 2020 இல் பூஜ்ஜிய தானியத்தை விநியோகித்தன [26]


மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், “சில மாநிலங்கள் ஏழைகளுக்கு தானியங்களை விநியோகிப்பதில்லை. மாநிலங்களுக்கு உணவு தானியம் வழங்குவதில் சிக்கல் உள்ளது, எனவே அதை இலவசமாக வழங்கும்போது, விநியோகத்தில் உள்ள சிக்கல் எனக்குப் புரியவில்லை என்றார். இந்த பிரச்னையை நாங்கள் தீவிரமாக எடுத்து வருகிறோம்,'' என்றார். உணவுத் துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இல்லாததே தானியங்களை விநியோகிக்கத் தவறியதற்குக் காரணமாக குற்றம் சாட்டினார். ஆக்ஸ்பாம் இந்தியாவின் இயக்குனர் ராணு போகல், உணவு வியாபாரிகள் மற்றும் கிராம சபை உறுப்பினர்களிடையேயுள்ள ஊழல் மோசடிகளை குற்றம் சாட்டினார். [26]


திட்டத்தின் வெற்றி

தொகு

சர்வதேச நாணய நிதியத்தால் நடத்தப்பட்ட ஆய்வின்படி, ஏப்ரல் 5, 2020 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையொன்று இந்தியாவில் தீவிர வறுமை (ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 1.9 பிபிபி அமெரிக்க டாலர்கள்) 2019 இல் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளதும், இந்த நிலை கோவிட்-19 தொற்றுநோய் ஆண்டு 2020 வரையும் நீடித்தது என்றும் கண்டறிந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் உணவுப் பாதுகாப்புத் திட்டமான பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா, கோவிட்-19 தொற்றுநோய்களின் போது இந்தியாவில் தீவிர வறுமை நிலைகள் அதிகரிப்பதைத் தடுப்பதில் முக்கியமானதாகும். புதிய IMF ஆய்வறிக்கையான, "தொற்றுநோய், வறுமை மற்றும் சமத்துவமின்மை": இந்தியாவில் இருந்து சான்றுகள்மூலமாக, 2004-2005 ஆம் ஆண்டு முதல் 2020-2021 ஆம் ஆண்டு தொற்றுநோய் ஆண்டு வரை இந்தியாவில் வறுமை (அதிக வறுமை PPP USD 1.9 மற்றும் PPP USD3.2) மற்றும் நுகர்வு சமத்துவமின்மை பற்றிய மதிப்பீடுகளை முன்வைத்தது. இந்த மதிப்பீடுகளில், முதல் முறையாக, வறுமை மற்றும் சமத்துவமின்மை மீதான உணவு மானியங்களின் விளைவு அடங்கும். 2019 ஆம் ஆண்டு தொற்றுநோய்க்கு முந்தைய ஆண்டில் தீவிர வறுமை 0.8 சதவீதமாக இருந்தது, மேலும் 2020 ஆம் ஆண்டு தொற்றுநோய் ஆண்டிலும் அது குறைந்த மட்டத்தில் இருப்பதை உறுதி செய்வதில் உணவுப் பரிமாற்றங்கள் கருவியாக இருந்தன. உணவு மானியத்துக்குப் பிந்தைய ஏற்றத்தாழ்வு 0.294 இருந்தது, இது1993/94 இல் காணப்பட்ட 0.284 என்ற மிகக் குறைந்த மட்டத்திற்கு மிக அருகில் உள்ளது. தொற்றுநோய் காலமாக இருந்தபோதிலும், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில் இருந்த குறைந்த அளவிலான தீவிர வறுமை என்பது தீவிர வறுமையை ஒழிப்பதாகக் கருதலாம். இந்தியாவில் கடுமையான வறுமை நிலைகள் அதிகரிப்பதைத் தடுப்பதில் PMGKAY முக்கியமானது மற்றும் ஏழைகள் மீதான COVID-19 காரணமாக தூண்டப்பட்ட வருமான அதிர்ச்சிகளை உறிஞ்சுவதில் உணவு மானியம் கணிசமாக வேலை செய்தது என்று IMF அறிக்கை கூறியது. இதற்கிடையில், PMGKAY ஐ 2022 செப்டம்பர் வரை நீட்டிப்பதாக பிரதமர் மோடி கடந்த மாதம் அறிவித்தார். PMGKAY இன் கீழ், தேவைப்படுபவர்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மார்ச் 2020 இல் நாட்டில் COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில் தொடங்கப்பட்டது, மேலும் இது கடந்த ஆண்டு நவம்பரில் நான்கு மாதங்களுக்கு (டிசம்பர் 2021-மார்ச் 2022) மார்ச் 2022 வரை நீட்டிக்கப்பட்டது. வழக்கமான மாதாந்திர NFSA உணவு தானியங்களுக்கு மேல், ஒரு நபருக்கு மாதம் ஒன்றுக்கு 5 கிலோ உணவு தானியங்களை வழங்குவதை இந்தத் திட்டம் உள்ளடக்குகிறது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) [அந்தோதயா அன்ன யோஜனா மற்றும் முன்னுரிமைக் குடும்பங்கள்] கீழ் உள்ளவர்களுக்கு, நேரடிப் பலன் பரிமாற்றத்தின் (DBT) கீழ் உள்ளவர்களுக்கும் இந்த நன்மை வழங்கப்படுகிறது. COVID-19 ஆல் உருவாக்கப்பட்ட சூழ்நிலையை அடுத்து, குடும்பங்கள் போதிய உணவு தானியங்கள் கிடைக்காமல் அவதிப்பட வேண்டாம் என்று சுமார் 80 கோடி தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (NFSA) பயனாளிகளுக்கு கூடுதல் விலையில்லா உணவு தானியங்களை (அரிசி/கோதுமை) விநியோகிப்பதாக மார்ச் 2020 இல் அரசாங்கம் அறிவித்தது. தொற்றுநோய் அதிர்ச்சி பெரும்பாலும் ஒரு தற்காலிக வருமான அதிர்ச்சி, என்று IMF அறிக்கை கூறியது, அதிர்ச்சியின் பெரும்பகுதியை உறிஞ்சுவதற்கு ஒரு தற்காலிக நிதிக் கொள்கை தலையீடு நிதி ரீதியாக பொருத்தமான வழியாகும். 2004-2011 இல் காணப்பட்ட வலுவான வளர்ச்சியை விட நுகர்வு வளர்ச்சி (வறுமையின் முக்கிய நிர்ணயம்) 2014-19 இல் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. 2017-18 ஆம் ஆண்டின் என்எஸ்எஸ் நுகர்வோர் செலவினக் கணக்கெடுப்பில் உள்ள முடிவுகளின் நம்பகத்தன்மையை ஓரளவு விரிவாக ஆய்வுசெய்தது.[27][28]

வெளி இணைப்புகள்

தொகு

சான்றுகள்

தொகு
  1. "कैबिनेट का अहम फैसला: गरीबों को मार्च 2022 तक मिलेगा मुफ्त राशन, कृषि कानून वापसी का प्रस्ताव भी मंजूर". Amar Ujala. பார்க்கப்பட்ட நாள் 24 November 2021.
  2. "What is Pradhan Mantri Gareeb Kalyan Anna Yojana? How Will it Help 80 Crore Migrant Workers?". Archived from the original on 6 July 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-07-04.
  3. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780091
  4. 4.0 4.1 "Modi govt's largest ration subsidy scheme for 80 Cr Indians; check full details of govt plan - The Financial Express". பார்க்கப்பட்ட நாள் 2020-07-29."Modi govt's largest ration subsidy scheme for 80 Cr Indians; check full details of govt plan - The Financial Express". Retrieved 29 July 2020.
  5. https://govtschemes.in/pradhan-mantri-garib-kalyan-anna-yojana#gsc.tab=0
  6. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780091
  7. https://www.ibef.org/news/centre-extends-pradhan-mantri-garib-kalyan-ann-yojana-pmgkay-for-another-three-months-october-december-2022
  8. https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1716090
  9. https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1716090
  10. https://www.pmindia.gov.in/en/news_updates/cabinet-approves-further-allocation-of-additional-foodgrain-to-nfsa-beneficiaries-under-pradhan-mantri-garib-kalyan-yojana-phase-iv-for-another-period-of-five-months-i-e-july-to-november/
  11. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1774586
  12. https://static.pib.gov.in/writereaddata/userfiles/pmgkay_backgrounder.pdf
  13. https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2022/sep/doc2022916105301.pdf
  14. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1862944
  15. https://www.businesstoday.in/latest/economy/story/govt-makes-foodgrain-free-of-cost-for-8135-cr-people-under-nfsa-for-1-year-357620-2022-12-23
  16. https://www.businesstoday.in/latest/economy/story/govt-makes-foodgrain-free-of-cost-for-8135-cr-people-under-nfsa-for-1-year-357620-2022-12-23
  17. "உணவுப்பாதுகாப்பு திட்டம்".
  18. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1890272
  19. "Coronavirus in India: FM Nirmala Sitharaman announces economic relief package - Business News". Archived from the original on 26 March 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-07-14.
  20. "Centre tells states to pace up distribution of grains to migrants - The Economic Times". Archived from the original on 9 June 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-07-04.
  21. "PM has ensured no one sleeps hungry in country: Prakash Javadekar on extension of Garib Kalyan Anna Yojana | India News - Times of India". Archived from the original on 12 July 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-07-04.
  22. 22.0 22.1 "10 states seek extension of free grains scheme - The Economic Times". Archived from the original on 30 June 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-07-04."10 states seek extension of free grains scheme - The Economic Times". Archived from the original on 30 June 2020. Retrieved 4 July 2020.
  23. "PM Modi extends Pradhan Mantri Garib Kalyan Anna Yojana till Diwali, Chhath, end of November - The Financial Express". Archived from the original on 1 July 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-07-04.
  24. "PM Modi announces free food grain scheme extension, urges people to wear masks - india news - Hindustan Times". Archived from the original on 1 July 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-07-04.
  25. "Soon after PM Modi's announcement, Amit Shah chairs meeting of GoM over PMGKAY". Archived from the original on 30 June 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-07-04.
  26. 26.0 26.1 "India's COVID-19 free food rations: Government's 'compassionate' gesture blighted by inefficiencies". Food Navigator Asia. பார்க்கப்பட்ட நாள் 7 August 2020.
  27. "IMF lauds PM Modi's food security scheme, says PMGKAY averted rise in extreme poverty during COVID-19 pandemic – Firstpost". 28 July 2015.
  28. "Pandemic, Poverty, and Inequality: Evidence from India". International Monetary Fund. சர்வதேச நாணய நிதியம். <nowiki>