பிராக்கிபோடியசு

பிராக்கிபோடியசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பிராக்கிபோடியசு
மாதிரி இனம்
லேனியசு மெலனோசெப்பாலசு
(கருந்தலை சின்னான்)
ஜெமிலின், 1788

பிராக்கிபோடியசு (Brachypodius) என்பது சின்னான் குடும்பமான பைக்னோனோடிடே பறவைப் பேரினமாகும்.

வகைப்பாட்டியல்

தொகு

பிராக்கிபோடியசு பேரினமானது 1845ஆம் ஆண்டு இங்கிலாந்து விலங்கியல் வல்லுநரான எட்வர்ட் ப்ளைத் என்பவரால் கருப்புத் தலை சின்னானை வகைப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டது.[1] பிராக்கிபோடியசு என்ற சொல்லானது பண்டைக் கிரேக்க பிராகுசு என்ற "குறுகிய" என்று பொருள்படும் சொல்லிலிருந்தும் பௌசு, போடோசு என்றால் "கால்" என்று பொருள்படும் சொல்லிருந்தும் தோன்றியது.

2017-ல் வெளியிடப்பட்ட கொண்டைக்குருவி குடும்பத்தின் மூலக்கூறு இனவரலாற்று ஆய்வில் பைக்னோனோடசு பலதொகுதிமரபு உயிரினத் தோற்றம் உடையதாகக் கண்டறியப்பட்டது.[2] முன்னர் பைக்னோனோடசில் வகைப்படுத்தப்பட்ட நான்கு சிற்றினங்கள் பிராச்சிபோடியசில் வகைப்பிரிக்கப்பட்டது.[3]

இந்த பேரினத்தில் நான்கு சிற்றினங்கள் உள்ளன. அவை:[3]

  • சாம்பல்-தலை சின்னான் (பிராக்கிபோடியசு பிரியோசெபாலசு)
  • கருப்புத் தலை சின்னான் (பிராக்கிபோடியசு மெலனோசெபலோசு)
  • அந்தமான் சின்னான் (பிராக்கிபோடியசு பசுகோபிளாவென்சென்சு)
  • நீலத்தாடைச் சின்னான் (பிராக்கிபோடியசு நியுவென்ஹுயிசி)

மேற்கோள்கள்

தொகு
  1. Edward Blyth (1845). "Notices and descriptions of various new or little known species of birds (continued)". Journal of the Asiatic Society of Bengal 14, Part 2 (164): 546–602 [576]. https://www.biodiversitylibrary.org/page/40127351. 
  2. Shakya, Subir B.; Sheldon, Frederick H. (2017). "The phylogeny of the world's bulbuls (Pycnonotidae) inferred using a supermatrix approach". Ibis 159 (3): 498-509. doi:10.1111/ibi.12464. 
  3. 3.0 3.1 Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (January 2021). "Bulbuls". IOC World Bird List Version 11.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 27 June 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராக்கிபோடியசு&oldid=3614678" இலிருந்து மீள்விக்கப்பட்டது