பிராசீலியா பேராலயம்
பிராசீலியா பேராலயம் (Cathedral of Brasília), பிரேசில் நாட்டின் தலைநகரமான பிராசீலியாவில் உள்ள ரோமன் கத்தோலிக்கப் பேராலயம் ஆகும். இது பிராசீலியா உயர் மறைமாவட்டத்தின் முதன்மைப்பேராலயமாகவும் உள்ளது. ஒசுக்கார் நிமேயெர் என்னும் புகழ் பெற்ற கட்டிடக் கலைஞரால் வடிவமைக்கப்பட்ட இப் பேராலயம் 1970 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டது. அதிபரவளைவு அமைப்புக் கொண்ட இக் கட்டிடம் 16 காங்கிறீட்டுத் தூண்களால் தாங்கப்படுகின்றது. இந்த ஒவ்வொரு தூணும் 90 தொன்கள் எடை கொண்டது.
பிராசீலியா பேராலயம் | |
---|---|
நான்கு நற்செய்தியாளர்கள் சிலைகள் வாயிலில் உள்ளன. | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | பிரசிலியா, பிரேசில் |
புவியியல் ஆள்கூறுகள் | 15°47′54″S 47°52′32″W / 15.79833°S 47.87556°W |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
மாவட்டம் | பிராசீலியா மறைமாவட்டம் |
நிலை | பேராலயம் |
இப்பேராலயத்தின் வெளிப்புறம் லிவர்பூல் பேராலயத்தின் வட்ட வடிவத் தள அமைப்பையும், தோற்றத்தையும் ஒத்துள்ளது. எனினும் ஒளிபுகாப் பொருட்களினால் முழுவதுமாக மூடப்பட்ட லிவர்பூல் பேராலயம் போலன்றி, பிராசீலியாப் பேராலயத்தில் ஏறத்தாழ முழு உயரத்துக்குமே சூரிய ஒளி உள்ளே வருமாறு அமைக்கப்பட்டுள்ளது.