பிரியம்வதா நடராஜன்

இந்திய வானியற்பியலாளரும் அண்டவியலாளரும்
(பிரியா நடராஜன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிரியம்வதா நடராஜன் (பிரியா நடராஜன், Priyamvatha Natarajan), வானியற்பியலாளரும் அண்டவியலாளரும் ஆவார். யேல் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

பிரியம்வதா நடராஜன்
Priya Natarajan
பிரியம்வதா நடராஜனின் ஒளிப்படம், சாந்தா பார்பாரா
துறைஅண்டவியல், கோட்பாட்டு வானியற்பியல்
பணியிடங்கள்யேல் பல்கலைக்கழகப் பேராசிரியர்
கல்வி கற்ற இடங்கள்கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், டிரினிட்டி கல்லூரி, வானியல் நிறுவனம்

வாழ்க்கைக் குறிப்பு தொகு

பிரியம்வதா என்ற இயற்பெயரைக் கொண்ட பிரியா தில்லியில் பிறந்து வளர்ந்தவர். இவரது தந்தையார் வெங்கடேச நடராஜன் ஒரு பொறியாளர். தாயார் லலிதா ஒரு சமூகவியல் பட்டதாரி. இரு சகோதரருடன் பிறந்த பிரியா எல்லாருக்கும் மூத்தவர். தில்லியில் இயற்பியலில் இளம் அறிவியல் பட்டம் பெற்று இயற்பியல், கணிதம் ஆகிய துறைகளை விரும்பி மேற்படிப்புக்கு மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையத்தில் இணைந்தார். பிறகு கோட்பாடு வானியற்பியலில் (Theoretical Astrophysics) முனைவர் பட்டம் பெற இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும், டிரினிட்டி கல்லூரியிலும் (1997 முதல் 2003 வரை) முனைவர் சர் மார்ட்டின் ரீசு மேற்பார்வையில் பயின்றார்.

இவரது விருப்பப் பிரிவுகள் அண்டவியல் (Cosmology), ஈர்ப்பாற்றல் வில்லையாக்கம் (Gravitational Lensing), கருந்துளை இயற்பியல் (Black Hole Physics) என்பனவாகும். இவர் தன்னுடைய ஆய்வுக் கட்டுரைக்கு ”அண்டத்தில் கரும்பொருண்மம் , கருந்துளைகள் தோற்றம், படிமலர்ச்சி, ஸ்டீவன் ஹாக்கிங்கின் புடவிப் புனைவு ஒன்றில் வரும் கரும்பொருண்ம குறுணைகள் (Granularity of Dark Matter) ஆகியவை குறித்து ஆராய்ந்தார். இவர் முனைவர் ஆய்வுப் பயிற்சி முடிவதற்குள் டிரினிட்டி கல்லூரி ஐசாக் நியூட்டன் மாணவத் தகைமை ஆராய்ச்சி - வானியற்பியல் ஆய்வுநல்கையைப் பெற்றார்.

இப்போது யேல் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். அதற்கு முன்னர் கனடாவில் டொரான்டோவில் கோட்பாட்டு வானியற்பியலுக்கான கனடியக் கல்விக்கழகத்தில் (Canadian Institute for Theoretical Astrophysics, Toronto) சில மாதங்கள் முனைவர் முன்னோடிப் பயிற்சி பெற்றார். இதற்கிடையில் ஆர்வார்டு இராட்கிளிப் உயராய்வு நிறுவனத்தில் ஓர் ஆய்வாளராகவும் பணியாற்றுகிறார். அத்துடன் டென்மார்க்கில் உள்ள கோப்பனேகன் பல்கலைக்கழக்த்தின் நீல்சு போர் கருமை அண்டவியல் மையத்தில் இணை ஆய்வாளராக இருந்து வருகிறார்.

பிரியா நடராஜன் தனது வானியற்பியல் ஆய்வுகளை ஆராய்ச்சி இதழ்களில் அடிக்கடி எழுதியும், மேடைகளில் உரையாற்றியும், கருத்தரங்குகளை ஏற்படுத்தி விவாதித்தும் பங்கெடுத்து வருகிறார். இவரது ஆய்வுக் கட்டுரைகள் சயன்ஸ், டிஸ்கவர் இதழ், இயற்கை, வெளிநாட்டு இந்தியா வார இதழ், ஹானலூலூ டைம்ஸ், டச் பாப்புளர் சையன்ஸ், ஹார்டேர்டு காஸெட், யேல் தினத் தகவல் ஆகியவற்றில் வெளி வந்துள்ளன. இவருக்கு 2010-2011 ஆம் ஆண்டுக்கான கூகன்ஹைம் ஆய்வுநல்கை விருது கிடைத்துள்ளது[1].

மேற்கோள்கள் தொகு

  1. "John Simon Guggenheim Memorial Foundation". Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2010-09-03.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியம்வதா_நடராஜன்&oldid=3782046" இலிருந்து மீள்விக்கப்பட்டது