ஸ்டீவன் ஹாக்கிங்
ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking, ஜனவரி 8 , 1942 -14 மார்ச்சு 2018)[3] ஆங்கிலேய கோட்பாட்டு அறிவியலாளரும், அண்டவியலாளரும், நூலாசிரியரும் ஆவார். இவர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் கோட்பாட்டு அண்டவியல் மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.[4][5] இவர் உரோசர் பென்ரோசுடன் இணைந்து பொதுச் சார்புக் கோட்பாட்டில் புவியீர்ப்பு அருநிலைத் தேற்றங்களை நிறுவியமை, ஆக்கிங்கு கதிரியக்கம் என அழைக்கப்படும் கருந்துளைகளின் கதிர்வீச்சு உமிழ்தலை எதிர்வுகூறியமை போன்ற அறிவியல் ஆய்வுகளுக்காகப் பெரிதும் அறியப்படுகிறார். இவரே முதன் முதலில் அண்டவியலுக்கான கோட்பாட்டை உருவாக்கி, பொதுச் சார்புக் கோட்பாடு, குவாண்டம் இயங்கியல் ஆகியவற்றின் மூலம் விளங்கப்படுத்தினார். குவாண்டம் இயங்கியலின் பல-உலகங்களுக்கான விளக்கத்திற்குத் தீவிர ஆதரவாளராக விளங்கினார்.[6][7]
ஸ்டீவன் ஹாக்கிங் Stephen Hawking | |
---|---|
பிறப்பு | இசுடீவன் வில்லியம் ஹாக்கிங் 8 சனவரி 1942 ஆக்சுபோர்டு, இங்கிலாந்து |
இறப்பு | 14 மார்ச்சு 2018 கேம்பிரிட்ச், இங்கிலாந்து | (அகவை 76)
துறை |
|
பணியிடங்கள் |
|
கல்வி | செயிண்ட் அல்பான்சு பள்ளி, எர்ட்ஃபோட்சயர் |
கல்வி கற்ற இடங்கள் | ஆக்சுபோர்டு பல்கலைக்கழகக் கல்லூரி (இளங்கலை) டிரினிட்டி மண்டபம், கேம்பிரிட்ச் (முதுகலை, முனைவர்) |
ஆய்வேடு | விரிவடையும் அண்டங்களின் இயல்புகள் (1966) |
ஆய்வு நெறியாளர் | டெனிசு இசுகியாமா[1] |
ஏனைய கற்கை ஆலோசகர்கள் | இராபர்ட் பெர்மன்[2] |
அறியப்படுவது |
|
விருதுகள் |
|
துணைவர் |
|
பிள்ளைகள் | 3 |
கையொப்பம் | |
இணையதளம் அதிகாரபூர்வ இணையதளம் |
ஆக்கிங்கு ஐக்கிய அமெரிக்காவின் உயர்ந்த குடிமகனுக்கான விருதைப் பெற்றார். 2002 ஆம் ஆண்டில், பிபிசி நடத்திய பிரித்தானியாவின் 100 பெரும் புள்ளிகள் கணிப்பில் 25வதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1979 முதல் 2009 வரை கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் தான் உருவாக்கிய கோட்பாடுகளைப் பற்றியும், அண்டவியல் தொடர்பிலும் பிரபலமான அறிவியல் கட்டுரைகளை எழுதிப் புகழ் பெற்றார். இவரது காலத்தின் ஒரு வரலாற்றுச் சுருக்கம் என்ற புகழ்பெற்ற கட்டுரைத் தொடர் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் சண்டே டைம்சு இதழில் 237 வாரங்களாக வெளிவந்து சாதனை புரிந்தது. சாதாரண மக்களும் வாசித்துப் பயனடையும் வகையில் இலகுவான மொழியில், அறிவியற் சமன்பாடுகளைத் தவிர்த்து எழுதப்பட்ட இவரது அறிவியல் நூல்கள் பலரையும் கவர்ந்தன.
21 வயதிலேயே, முதலாவது திருமணத்துக்குச் சற்றுமுன்னர் தசையூட்டமற்ற பக்க மரப்பு நோய் எனவும் அழைக்கப்படும் இயக்கு நரம்பணு நோயால் தாக்குண்டார். இக் குணப்படுத்த முடியாத நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, படிப்படியாகக் கை, கால் முதலிய உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்த நிலையில்,[8][9] கணினியூடாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் கட்டாயத்துக்குள்ளான இவர், இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும், பொதுவாழ்விலும் மிகவும் ஈடுபாடு உள்ளவராகவே இருந்தார். இவர் 2018 மார்ச் 14 இல் தனது 76-வது அகவையில் காலமானார்.[10][11]
அமெரிக்காவில் உள்ள அனென்பெர்க் அறக்கட்டளை இயற்பியல் கணிதத்தை மாணவர்களுக்கு எளிய நடையில் புதிய கோணத்தில் வடிவமைப்பவர்களுக்கு 6 மில்லியன் டாலர் பரிசு என 1986-ல் அறிவித்தது. இந்தச் சவாலை ஏற்று, இயற்பியல் அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் அரை மணி நேரத்திற்கு ஒரு காட்சி விளக்கம் வீதம் 26 மணி நேரம் ஓடக் கூடிய ‘காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ என்ற பாடத் திட்டத்தை உருவாக்கிக் கொடுத்துப் பரிசு பெற்றார். இந்தச் சிறந்த படைப்பு உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையால் 2000 ஆண்டு ஒரு கோடி ரூபாய் செலவில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது.[12]
ஆரம்ப வாழ்வும் கல்வியும்
ஆரம்ப வாழ்வு
இங்கிலாந்தில் மருத்துவமனை ஒன்றில் 1963 ஆம் ஆண்டு 21 வயது இளைஞர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவத்திற்குப் பின் அவர் இன்னும் ஒரு சில தினங்களை உயிர் வாழ்வார் என்றும் விரைவில் இறந்து விடுவார் எனவும் மருத்துவர்கள் அறிக்கை தந்தனர். பக்கவாதம் (ameotropic lateral sclerosis) என்னும் நரம்பு நோய் பாதிப்புடன் அவர் மருத்துவ உலகே மிரண்டு போகும் அளவுக்கு 53 ஆண்டுகள் வாழ்ந்து காட்டினார். 1985இல் மூச்சு குழாய் தடங்கலால் பேசும் திறனை இழந்தார் .இறுதியாக எஞ்சியது கன்னத்தின் தசையசைவும் கண் சிமிட்டலும் மட்டுமே. உடலில் மீதியுள்ள அத்தனை உறுப்புகளும் செயலிழந்து விட்டன. தசையளவு மூலம் தன் கருத்தை கணினியில் தட்டச்சு செய்து வெளிப்படுத்தினார். அவரின் ஆய்வுகளுக்கு துணையாக செயற்கை நுண்ணறிவு கணினி செயல்பட்டது.[13][14]
.[15]
ஆரம்பக் கல்வி
1950 இல், அவரது தகப்பனார், தேசிய மருத்துவ ஆய்வு நிலையத்தில், ஒட்டுண்ணியியல் பிரிவின் தலைவராகப் பொறுப்பேற்றதனால், அவரது குடும்பத்தினர் அனைவரும் செயிண்ட் அல்பான்சு என்ற இடத்திற்குச் சென்று வாழ்ந்தனர்.[16][17] அவரது குடும்பத்தினர் படிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தனர்.[16] அவரது தகப்பனார், ஆக்கிங்கை பிரபலமான Westminster School இல் சேர்ப்பதற்கு ஆசைப்பட்டார். ஆனால் புலமைப் பரிசிலுக்கான பரீட்சைக்குப் போக முடியாமல் ஆக்கிங் நோயுற்றிருந்தமையாலும், அந்தப் பாடசாலைக்கான செலவை உதவித்தொகையின்றி குடும்பத்தினரால் சமாளிக்க முடியாதென்பதனாலும், ஆக்கிங் செயிண்ட் அல்பான்சு பள்ளியிலேயே தனது கல்வியைத் தொடர்ந்தார்.[18][19] ஆனாலும் அவருக்கு அதில் நேர்மறையான விளைவும் கிடைத்தது. அவருடன் சேர்ந்து அவருக்குப் பிடித்தமான விளையாட்டுகளில் பங்கெடுக்கக் கூடிய, வான்வெடிகள் / விமான மற்றும் படகு ஒப்புருக்கள் உற்பத்தியில் சேர்ந்து பங்களிக்கக் கூடிய, கிறிஸ்தவம் மற்றும் புலன் புறத்தெரிவு போன்றவை பற்றி நீண்ட உரையாடல்களை நிகழ்த்தக்கூடிய நெருங்கிய நண்பர்கள் அவருக்குக் கிடைத்தார்கள்.[20] 1958 இல், அவர்களது கணித ஆசிரியரின் உதவியுடன், கடிகாரத்தின் பகுதிகள், பழைய தொலைபேசி ஒன்றின் மின்தொடர்பு இணைப்புப் பலகை, மற்றும் மீளுருவாக்கப் பாகங்களைக் கொண்டு ஒரு கணினியை உருவாக்கினார்கள்.[21][22]
பட்டப்படிப்பு
பாடசாலையில் அவர் ஐன்ஸ்டைன் என்று மற்றவர்களால் அழைக்கப்பட்டிருந்தாலும், ஆரம்பத்தில் அவர் வெற்றி பெற்றவராக இருக்கவில்லை.[23] ஆனால் பின்னர் நாட் செல்லச் செல்ல, அறிவியல் பாடங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமடைந்து, அவரது கணித ஆசிரியரால் உந்தப்பட்டு, பல்கலைக்கழகத்தில் கணிதத்தைத் தெரிவு செய்தார்.[24][25][26] அவரது தந்தையார், கணித்துறையில் மிகக் குறைந்தளவே வாய்ப்புக்கள் இருப்பதனால், ஆக்கிங் மருத்துவத் துறையைத் தெரிவு செய்ய வேண்டும் என்றும், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் கற்க வேண்டும் என்றும் விரும்பினார். அந்த நேரத்தில் கணிதவியல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் இல்லாதபடியால், அவர் இயற்பியலையும், வேதியியலையும் தெரிவு செய்தார். மார்ச் 1959 இல், புலமைப் பரிசிலில் சித்தியடைந்து, தனது 17 ஆவது வயதில், அக்டோபர் 1959 இல், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் படிப்பை ஆரம்பித்தார்.[27][28][29]
முதல் 18 மாதங்கள் அவருக்குப் படிப்பு மிகவும் இலகுவானதாக இருந்தமையால், அது சலிப்பூட்டுவதாகவும், தனிமைப்படுத்துவதாகவும் அமைந்தது.[30][31] அவரது இயற்பியல் ஆசிரியரின் கூற்றுப்படி, இரண்டாம், மூன்றாம் ஆண்டுகளில், அவர் ஏனையோருடன் இணைந்து கொண்டார். பழம்பெரும் இசை, அறிவியல் புனைவு போன்றவற்றில் ஈடுபாட்டைக் காட்டி, கல்லூரியின் உற்சாகமூட்டும், பிரபலமான ஒரு உறுப்பினராக மாறினார்.[29] அவரது ஒரு மகுதி மாற்றத்துக்குக் காரணமாக அவர் கல்லூரியின் படகுக் குழு, படகு வலித்தல் குழுமம் போன்றவற்றில் தன்னை இணைத்துக் கொண்டமை அமைந்தது.[32][33]
அவர் ஆக்சுபோர்டு பல்கலைகழகத்தில் படித்த 3 ஆண்டுகளில், தான் 1000 மணித்தியாலங்கள் படித்திருப்பதாகக் கணித்ததுடன், இதனால் தனக்கு இறுதிப் பரீட்சை, சவாலானதாக அமையும் என்றும் கணித்து, தான் நிகழ்வுசார் அறிவைவிட, கோட்பாட்டு இயற்பியல் பகுதியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்தார். அவர் விரும்பியவாறு, கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில், அண்டவியல் துறையில் பட்டப் படிப்பைத் தொடர வேண்டுமெனின், அதற்கு முதலாம் பிரிவில் நன்மதிப்பு பெற்றிருக்க வேண்டும்.[34][35] அந்தக் கவலையினால், அவரால் முதல்நாள் இரவு சரியாகத் தூங்க முடியாமல், அவரது இறுதிப் பரீட்சை முடிவு முதலாம், இரண்டாம் நிலைகளுக்கு இடையில் வந்திருந்ததனால், அவர் ஒரு நேர்முகப் பரீட்சைக்குத் தோற்ற வேண்டியிருந்தது.[35][36] நேர்முகப் பரீட்சையில், அவரது திட்டத்தைக் கூறும்படி கேட்கப்பட்டபோது, 'முதலாம் பிரிவு கிடைத்தால் தான் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் போக எண்ணியிருப்பதாகவும், இரண்டாவது நிலையானால், ஆக்சுபோர்ட்டிலேயே தொடர்ந்து படிப்பதாகவும், அதனால் நீங்கள் முதலாவது பிரிவை அளிப்பீர்கள் என நினைக்கிறேன்' என்றும் பதிலளித்தார். நேர்முகப் பரீட்சையில் இருந்தவர்களுக்கு ஆக்கிங் மிகுந்த அறிவாளி என்பதனை உணர முடிந்ததனால், அவருக்கு முதலாம் பிரிவு நன்மதிப்பை அளித்தார்கள்.[35][37] இயற்கை அறிவியலில் தனது முதல்நிலை பட்டப்படிப்பை முடித்த அவர், தனது ஒரு நண்பருடன் ஈரானுக்குப் போய்விட்டு வந்து, ஒக்டோபர் 1962 இல் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் படிப்பைத் தொடர்ந்தார்.[13][38][39]
அங்கு அவருக்கு முதலாவது ஆண்டு சிறிது கடுமையாக அமைந்தது. அவருக்கான மேற்பார்வையாளராக, பரவலாக அனைவராலும் அறியப்பட்ட வானியல் வல்லுநர் பிரெட் ஆயில் என்பவர் அல்லாமல், நவீன அண்டவியல் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான Dennis William Sciama என்பவர் கிடைத்ததில், ஆக்கிங் ஏமாற்றமடைந்தார்.[40] [41] அத்துடன், பொதுச் சார்புக் கோட்பாடு மற்றும் அண்டவியல் தொடர்பான வேலைகளுக்குத் தனக்கு அங்கு கிடைக்கும் கணிதவியல் பயிற்சி போதாது என்று நினைத்தார்.[42] அவருக்கு இயக்க நரம்பணு நோய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டபோது, மருத்துவர்கள் அவர் தொடர்ந்து படிக்கலாம் என்று கூறினால், இனிப் படிப்பதில் என்ன பயன் என்றெண்ணி மனத் தளர்ச்சிக்கு உள்ளானார்.[43] மருத்துவர்கள் எதிர்வு கூறியதைவிட மிக மெதுவாகவே அவரது நோய் கூடிக்கொண்டு சென்றது. அவருக்கு உதவியின்றி நடப்பதில் சிரமம், மற்றும் சரியாகப் பேசுவதில் சிரமம் என்பன இருந்தாலும், அவர் இன்னும் இரு ஆண்டுகளுக்கே உயிர் வாழ்வார் என்ற கூற்று சரியானதாக இருக்கவில்லை. 1964 ஜூனில் ஒரு விரிவுரையின்போது, பிரெட் ஆயில் மற்றும் அவரது ஒரு மாணவர் இருவரினதும் வேலை தொடர்பில் ஆக்கிங் பகிரங்கமாக சவால் விட்டபோது, அவரது அறிவு தொடர்பான நன்மதிப்பு கூடிக்கொண்டு போனது.[44][45]
ஆக்கிங் தனது பட்டப்படிப்பில் இருந்த சூழ்நிலையில், இயக்கவியல் சமூகத்தில், அண்டத் தோற்றப்பாட்டில் அப்போதிருந்த பெரு வெடிப்புக் கோட்பாடு, போன்ற கோட்பாடுகள் தொடர்பில் பெரிய விவாதங்கள் நிகழ்ந்தன.[46] உரோசர் பென்ரோசு என்பவரின் கருந்துளை]]யின் மையத்திலுள்ள, [[வெளிநேர சிறப்பொருமை (singularity) தொடர்பான கோட்பாட்டால் உந்தப்பட்டு, அதே கோட்பாட்டை முழு அண்டத்திற்கும் பயன்படுத்தி அது தொடர்பான தனது ஆய்வுக்கட்டுரையை 1965 இல் எழுதினார்.[47][48] அந்தக் கட்டுரை 1966 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.[49] பின்னர் Gonville and Caius College, Cambridge இல் ஒரு சக ஆய்வாளராக இணைந்தார்.[50] பின்னர், மார்ச் 1966 இல், செயல்முறைக் கணிதவியல், இயக்கவியல் கோட்பாடுகளில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். அதில் பொதுச் சார்புக் கோட்பாடு, அண்டவியலை முக்கிய பிரிவாகக் கொண்டிருந்தார்.[51]
தொழில் வாழ்க்கை
1966–1975
1975–1990
1990–2000
2000–2018
ஆக்கிங் பொது மக்கள் புரிந்துகொள்ளக்கூடிய வகையில், இலகு நடையில்[52], பரவலாக அதிகமானோருக்குக் கிடைப்பதற்காக முதலே வெளியிடப்பட்டிருந்த காலத்தின் ஒரு வரலாற்றுச் சுருக்கம் என்ற நூலின் மேம்படுத்திய பதிப்பு என்னும் நூல்களை [53] முறையே 2001, 2005, 2016 ஆம் ஆண்டுகளில் வெளியிட்டார். ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் இருக்கும் Thomas Hertog, மற்றும் Jim Hartle உடன் இணைந்து, 'மேலிருந்து-கீழான அண்டவியல்' கொள்கை ஒன்றை 2006 ஆம் ஆண்டிலிருந்து உருவாக்கி வந்தார். அந்தக் கொள்கையானது பேரண்டமானது ஒரு தனித்துவமான ஆரம்ப நிலையை மட்டுமே கொண்டதாக இராமல், பல்வேறு நிலைகளைக் கொண்டிருப்பதனால், தற்போதைய பேரண்டத்தின் வடிவமைப்பை, ஒரு தனியான ஆரம்ப நிலையை வைத்து எதிர்வுகூறல் பொருத்தமானதல்ல என்கின்றது. மேலும் இக்கொள்கை கடந்தகாலத்தின் பல மேல்நிலையிலுள்ள வரலாறுகளை அடிப்படையாகக் கொண்டு, தற்போதைய அமைப்பைத் தெரிவு செய்வதனால், துல்லிய ஒத்தியைவு பேரண்டம் என்ற சாத்தியமான நுணுக்கத்தை அறிவுறுத்துகிறது. [54][55][56]
ஆக்கிங் தனது தொழில்சார் தேவைகளுக்காகவும், விருதுகளைப் பெறிவதற்காகவும் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து வந்தார்.[57] [58][59][60] அவரது உடலியக்கப் பாதிப்புக் காரணமாக அவரது பயணங்கள் தனிப்பட்ட தாரை வானூர்தி மூலமாகவே நிகழ்ந்தன. 2011 ஆம் ஆண்டுக்குப் பின்னர், அது மட்டுமே அவரது வெளிநாடுகளுக்கான பயண முறையாக அமைந்தது.[61]
2003 ஆம் ஆண்டளவில், கருந்துளைத் தகவல் இழப்புத் தொடர்பாக ஆக்கிங்கின் கருத்துக்கள் ஏற்கத்தக்கவையல்ல என்ற கருத்து பல இயற்பியலாளர்களிடையே அதிகரித்து வந்தது.[62] 2004 இல் டப்லின் செய்த விரிவுரை ஒன்றில் இதனை ஆக்கிங் ஏற்றுக்கொண்டார். தான் 1997 இல் செய்திருந்த பந்தயத்திலிருந்த முரண்பாட்டையும் ஏற்றுக்கொண்டார். ஆனாலும், தகவல் இழப்பு தொடர்பான பிரச்சனைக்கு, கருந்துளைகள் ஒன்றுக்கு மேற்பட்ட இடவியலைக் கொண்டிருப்பதற்கான சாத்தியமுண்டு என்பதனை உட்படுத்தித், தனது சொந்தத் தீர்வொன்றையே முன்வைத்தார்.[63] [64] 2005 இல் ஆக்கிங் வெளியிட்ட இந்த விடயம் தொடர்பான ஆய்வுக் கட்டுரையொன்றில், பேரண்டம் தொடர்பான மாற்று வரலாறுகள் அனைத்தையும் ஆய்வுக்குட்படுத்தியதன் மூலம் தகவல் முரண்பாடு விளக்கப்பட்டுள்ளதாக விவாதித்துள்ளார்.[65][66] 2014 இல் தன்னுடைய கருந்துளையில் தகவல் இழப்புத் தொடர்பான தனது கருத்து தவறென ஒத்துக்கொண்டார்.[67]
இன்னுமொரு நீண்ட காலமாக நடந்து வந்த அறிவியல் சர்ச்சையின் பகுதியாக, ஆக்கிங் ஹிக்ஸ் போசான் என்ற ஒரு துகள் எப்போதும் கண்டுபிடிக்கப்படப் போவதில்லை என்று அழுத்தமாக விவாதித்தும், பந்தயம் செய்தும் வந்துள்ளார்.[68] 1964 இல், பீட்டர் ஹிக்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்ட கொள்கையின்படி, இவ்வாறான ஒரு துகள் இருக்கலாம் என்று முன்மொழியப்பட்டது. இது தொடர்பில் 2002 இலும், மீண்டும் 2008 இலும் இது தொடர்பாக ஆக்கிங், ஹிக்ஸ் ஆகிய இருவருக்குமிடையில் மிகவும் சூடான விவாதம் நிகழ்ந்தது. அப்போது பெரும்புகழ் கொண்டவராக ஆக்கிங் இருப்பதனால், ஏனையோருக்குக் கிடைக்காத நம்பகத்தன்மை, அவரது கருத்துக்களுக்கு உடனடியாகக் கிடைப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.[69] 2012 இல், ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் பெரிய ஆட்ரான் மோதுவி அமைக்கப்பட்ட பின்னர், இந்தத் துகள் கண்டறியப்பட்டது. தான் தனது பந்தயத்தில் தோற்றுவிட்டதாக ஆக்கிங் விரைவாகவே ஒத்துக்கொண்டதுடன்[70][71] ஹிக்ஸ்சிற்கு இயற்பியலாளருக்கான நோபல் பரிசு கிடைக்க வேண்டும் எனக் கூறினார்.[72] 2013 இல் ஜிக்ஸ்சிற்கு இந்த நோபல் பரிசு கிடைத்தது.[73]
2007 இல் ஆக்கிங்கும், அவரது மகள் லூசியும் இணைந்து சிறுவர் நூலை வெளியிட்டார்கள். அதில் ஆக்கிங் குடும்பத்தினரை ஒத்த கதாபாத்திரங்கள் கொண்ட தோற்றங்களை அமைத்து, அணுகக்கூடிய வகையில் இயற்பியல் கொள்கைகளை விளக்கி, அந்த நூலை வடிவமைத்தார்கள்.[74] 2009, 2011, 2014, 2016 ஆண்டுகளில் இதன் தொடர் நூல்கள் வெளியிடப்பட்டன.[75]
2002 இல் ஐக்கிய இராச்சிய மட்டத்தில் நிகழ்ந்த வாக்கெடுப்பின் அடிப்படையில், ஆக்கிங், 100 சிறந்த பிரித்தானியர்கள் பட்டியலில் இடம்பெற்றார்.[76] 2006 இல் அரச கழகத்திடமிருந்து கொப்லே பதக்கத்தையும் (கோப்ளி பதக்கம்)[77], 2009 இல் அமெரிக்காவின் மிகவும் மதிப்புள்ள என்ற விருதையும் [78], 2013 இல் உருசியாவின் விருதையும் பெற்றார்.[79]
சான் சல்வடோரில் உள்ள ஸ்டீவன் ஹாக்கிங் அறிவியல் அருங்காட்சியகம்,[80] கேம்பிரிட்ச்சில் உள்ள ஸ்டீவன் ஹாக்கிங் கட்டடம்,[81] கனடாவிலுள்ள ஸ்டீவன் ஹாக்கிங் நிலையம்,[82] ஆகிய கட்டடங்கள் உட்பட ஆக்கிங்கின் பெயரில் பல கட்டடங்கள் அமைந்துள்ளன. நேரம் தொடர்பில் ஆக்கிங் கொண்டுள்ள கருத்துக்கள் காரணமாக, கேம்பிரிட்ச்சில் திறந்து வைத்தார்.[83][84]
விண்வெளிப் பயண அறிவிப்பு
2006 இல், பி.பி.சி க்கு அளித்த பேட்டியொன்றில், விண்வெளிக்குச் செல்வது தனது நிறைவேறாத ஆசைகளில் ஒன்று என்று கூறினார்.[85] இதைக் கேட்ட ரிச்சர்டு பிரான்சன், இலவசமாக விண்வெளிப்பயணம் ஒன்றை ஒழுங்கு செய்ய முடியும் என்று கூறியபோது ஆக்கிங் அதனை உடனடியாக ஏற்றுக் கொண்டார். தன்னுடைய தனிப்பட்ட ஆசையுடன், விண்வெளிப் பயணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், உடற்குறை உள்ளவர்களுடைய ஆற்றலை எடுத்துக்காட்டவும் விரும்பினார்.[86] 26 ஏப்ரல் 2007-இல், இவருக்கென்று வடிவமைக்கப்பட்ட Boeing 727–200 தாரை வானூர்தியில், புளோரிடாவின் கரையோரப் பகுதியில் எடையற்ற நிலையை அனுபவத்தில் கண்டார். ஜனவரி 8, 2007-இல் இவருடைய 65-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் அன்று, தான் விண்வெளிப் பயணம் செய்யப் போவதாக அறிவித்தார். பெருஞ்செல்வர் ரிச்சர்டு பிரான்சன் அவர்களுடைய செலவில் வர்ஜின் காலாக்டிக் விண்வெளிப் போக்குவரத்துச் சேவையின் துணையால், 2009-ஆம் ஆண்டு ஈர்ப்பற்ற வெளியில்(அதாவது, புவி ஈர்ப்பு இல்லாத இடத்தில்) நிலவுருண்டையைச் சுற்றி வர இருப்பதாகக் கூறினார்.[87] இறக்கும் வரையிலும் என்றாவது ஒருநாள் விண்வெளிக்குப் பயணம் செய்துவிடும் நம்பிக்கையோடுதான் இருந்தார்.[88]
மறைவு
ஸ்டீபன் ஹோக்கிங் 14 மார்ச்சு 2018 அன்று தனது 76 ஆவது வயதில் காலமானார்.[89] அதிகாலையில் கேம்பிரிட்ஜில் உள்ள அவரது வீட்டில் மரணம் நிகழ்ந்தது.[90][91] அவரது குடும்பத்தினர் அவர் அமைதியாக உயிர் துறந்ததாக அறிவித்துள்ளனர்.[92][93][94]
மேற்கோள்கள்
- ↑ கணித மரபியல் திட்டத்தில் ஸ்டீவன் ஹாக்கிங்
- ↑ Ferguson 2011, ப. 29.
- ↑ "பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் மரணம்".
{{cite web}}
: Unknown parameter|access date=
ignored (|access-date=
suggested) (help) ஒன் இந்தியா தமிழ். பார்த்த நாள் (மார்ச்சு 14, 2018) - ↑ "Centre for Theoretical Cosmology: Outreach Stephen Hawking". Ctc.cam.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 23 June 2013.
- ↑ "About Stephen – Stephen Hawking". Stephen Hawking Official Website. Archived from the original on 30 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 23 சூன் 2013.
- ↑ Gardner, Martin (September/October 2001). "Multiverses and Blackberries". "Notes of a Fringe-Watcher". Skeptical Inquirer. Volume 25, No. 5.
- ↑ Price, Michael Clive (February 1995). "THE EVERETT FAQ" பரணிடப்பட்டது 2016-04-20 at the வந்தவழி இயந்திரம். Department of Physics, Washington University in St. Louis. Retrieved 17 December 2014.
- ↑ "Mind over matter: How Stephen Hawking defied Motor Neurone Disease for 50 years". Independent.co.uk. 26-11-2015. https://www.independent.co.uk/news/science/mind-over-matter-how-stephen-hawking-defied-motor-neurone-disease-for-50-years-6286313.html.
- ↑ "How Has Stephen Hawking Lived to 70 with ALS?". சயன்டிஃபிக் அமெரிக்கன். 7 சனவரி 2012. http://www.scientificamerican.com/article/stephen-hawking-als/.
- ↑ Dennis Overbye (14 மார்ச் 2018). "Stephen Hawking Dies at 76; His Mind Roamed the Cosmos". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2018/03/14/obituaries/stephen-hawking-dead.html.
- ↑ Henry, David (14 மார்ச் 2018). ""Stephen Hawking, physicist who reshaped cosmology, passes away at 76"". தி எகனாமிக் டைம்ஸ். https://economictimes.indiatimes.com/magazines/panache/physicist-stephen-hawking-passes-away/articleshow/63294700.cms. பார்த்த நாள்: 15-03-2018.
- ↑ "காட்சி வழி குறுந்தகடு வழங்கல்". தினமணி. 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 6 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ 13.0 13.1 HAWKING, Prof. Stephen William. Who's Who. Vol. 2015 (online ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் ed.). A & C Black, an imprint of Bloomsbury Publishing plc. (subscription required)
- ↑ "Mind over matter Stephen Hawking". தி எரால்டு. Glasgow.
- ↑ Ferguson, Kitty (6 January 2012). "Stephen Hawking, "Equal to Anything!" [Excerpt]". Scientific American.
- ↑ 16.0 16.1 Ferguson 2011, ப. 22.
- ↑ Larsen 2005, ப. xiii.
- ↑ White & Gribbin 2002, ப. 7–8.
- ↑ Larsen 2005, ப. 4.
- ↑ White & Gribbin 2002, ப. 14–16.
- ↑ Ferguson 2011, ப. 26.
- ↑ White & Gribbin 2002, ப. 19–20.
- ↑ Ferguson 2011, ப. 25.
- ↑ White & Gribbin 2002, ப. 17–18.
- ↑ Ferguson 2011, ப. 27.
- ↑ Hoare, Geoffrey; Love, Eric (5 January 2007). "Dick Tahta". The Guardian (London). https://www.theguardian.com/news/2007/jan/05/guardianobituaries.obituaries.
- ↑ Ferguson 2011, ப. 27–28.
- ↑ White & Gribbin 2002, ப. 42–43.
- ↑ 29.0 29.1 Ferguson 2011, ப. 28.
- ↑ Ferguson 2011, ப. 28–29.
- ↑ White & Gribbin 2002, ப. 46–47, 51.
- ↑ Ferguson 2011, ப. 30–31.
- ↑ Hawking 1992, p. 44.
- ↑ White & Gribbin 2002, ப. 53.
- ↑ 35.0 35.1 35.2 Ferguson 2011, ப. 31.
- ↑ White & Gribbin 2002, ப. 54.
- ↑ White & Gribbin 2002, ப. 54–55.
- ↑ White & Gribbin 2002, ப. 56.
- ↑ Ferguson 2011, ப. 31–32.
- ↑ Ferguson 2011, ப. 33.
- ↑ White & Gribbin 2002, ப. 58.
- ↑ Ferguson 2011, ப. 33–34.
- ↑ White & Gribbin 2002, ப. 61–63.
- ↑ Ferguson 2011, ப. 42.
- ↑ White & Gribbin 2002, ப. 68–69.
- ↑ Ferguson 2011, ப. 34.
- ↑ "Stephen Hawking's PhD thesis, explained simply".
- ↑ White & Gribbin 2002, ப. 71–72.
- ↑ Hawking, Stephen William (1966). Properties of Expanding Universes (PhD thesis). University of Cambridge. எண்ணிம ஆவணச் சுட்டி:10.17863/CAM.11283. இணையக் கணினி நூலக மைய எண் 62793673. வார்ப்புரு:EThOS வார்ப்புரு:Free access
- ↑ Ferguson 2011, ப. 43–44.
- ↑ Ferguson 2011, ப. 47.
- ↑ Ferguson 2011, ப. 199–200.
- ↑ Ferguson 2011, ப. 222–23.
- ↑ Highfield, Roger (26 June 2008). "Stephen Hawking's explosive new theory". The Daily Telegraph. https://www.telegraph.co.uk/news/science/science-news/3345641/Stephen-Hawkings-explosive-new-theory.html.
- ↑ Highfield, Roger (3 January 2012). "Stephen Hawking: driven by a cosmic force of will". The Daily Telegraph (London). https://www.telegraph.co.uk/news/science/stephen-hawking/8989060/Stephen-Hawking-driven-by-a-cosmic-force-of-will.html.
- ↑ Hawking, S.W.; Hertog, T. (2006). "Populating the landscape: A top-down approach". Physical Review D 73 (12): 123527. doi:10.1103/PhysRevD.73.123527. Bibcode: 2006PhRvD..73l3527H.
- ↑ Ferguson 2011, ப. 233.
- ↑ "Fonseca Prize 2008". University of Santiago de Compostela. பார்க்கப்பட்ட நாள் 7 August 2009.
- ↑ Ferguson 2011, ப. 239.
- ↑ Ferguson 2011, ப. 269.
- ↑ Ferguson 2011, ப. 197,269.
- ↑ Ferguson 2011, ப. 216–17.
- ↑ Ferguson 2011, ப. 217–20.
- ↑ Preskill, John. "John Preskill's comments about Stephen Hawking's concession". பார்க்கப்பட்ட நாள் 29 February 2012.
- ↑ Hawking, S.W. (2005). "Information loss in black holes". Physical Review D 72 (8): 084013. doi:10.1103/PhysRevD.72.084013. Bibcode: 2005PhRvD..72h4013H.
- ↑ Ferguson 2011, ப. 223–24.
- ↑ Kwong, Matt (28 January 2014). "Stephen Hawking's black holes 'blunder' stirs debate". CBC News. http://www.cbc.ca/news/technology/stephen-hawking-s-black-holes-blunder-stirs-debate-1.2514299.
- ↑ Ferguson 2011, ப. 95, 236.
- ↑ Ferguson 2011, ப. 94–95, 236.
- ↑ Wright, Robert (17 July 2012). "Why Some Physicists Bet Against the Higgs Boson". The Atlantic. https://www.theatlantic.com/technology/archive/2012/07/why-some-physicists-bet-against-the-higgs-boson/259977/.
- ↑ "Stephen Hawking loses Higgs boson particle bet – Video". தி கார்டியன் (London). 5 July 2012. https://www.theguardian.com/science/video/2012/jul/05/stephen-hawking-higgs-boson-bet-video.
- ↑ "Higgs boson breakthrough should earn physicist behind search Nobel Prize: Stephen Hawking". National Post. Agence France-Presse. 4 July 2012. http://nationalpost.com/news/higgs-boson-stephen-hawking.
- ↑ Amos, Jonathan (8 October 2013). "Higgs: Five decades of noble endeavour". BBC News. http://www.bbc.co.uk/news/science-environment-24445325.
- ↑ Ferguson 2011, ப. 230–231.
- ↑ "Books". Stephen Hawking Official Website. பார்க்கப்பட்ட நாள் 28 February 2012.
- ↑ "100 great British heroes". BBC News. 21 August 2002. பார்க்கப்பட்ட நாள் 10 May 2016.
- ↑ "Oldest, space-travelled, science prize awarded to Hawking". The Royal Society. 24 August 2006. பார்க்கப்பட்ட நாள் 29 August 2008.
- ↑ MacAskill, Ewen (13 August 2009). "Obama presents presidential medal of freedom to 16 recipients". The Guardian (London). https://www.theguardian.com/world/2009/aug/13/obama-hawking-medal-freedom.
- ↑ "2013 Fundamental Physics Prize Awarded to Alexander Polyakov". Fundamental Physics Prize. பார்க்கப்பட்ட நாள் 11 December 2012.
- ↑ Komar, Oliver; Buechner, Linda (October 2000). "The Stephen W. Hawking Science Museum in San Salvador Central America Honours the Fortitude of a Great Living Scientist". Journal of College Science Teaching XXX (2) இம் மூலத்தில் இருந்து 30 July 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090730162105/http://geocities.com/CapeCanaveral/Hall/5046/article.html. பார்த்த நாள்: 28 September 2008.
- ↑ "The Stephen Hawking Building". BBC News. 18 April 2007. http://www.bbc.co.uk/cambridgeshire/content/articles/2007/04/18/hawking_building_feature.shtml.
- ↑ Perimeter Institute. "Grand Opening of the Stephen Hawking Centre at Perimeter Institute". செய்திக் குறிப்பு. பரணிடப்பட்டது 2012-12-29 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Ferguson 2011, ப. 237–38.
- ↑ "Time to unveil Corpus Clock". Cambridgenetwork.co.uk. 22 September 2008. Archived from the original on 25 ஜனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 10 September 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Hawking takes zero-gravity flight". BBC News. 27 April 2007. http://news.bbc.co.uk/2/hi/science/nature/6594821.stm.
- ↑ Overbye, Dennis (1 March 2007). "Stephen Hawking Plans Prelude to the Ride of His Life". த நியூயார்க் டைம்ஸ் (New York: NYTC). https://www.nytimes.com/2007/03/01/science/01hawking.html?ref=stephenwhawking.
- ↑ டெய்லி டெலிகிராஃவ், இங்கிலாந்து
- ↑ ஸ்டீபன் ஹாக்கிங்
- ↑ "Stephen Hawking dies aged 76". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 14 மார்ச் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Penrose, Roger (14 March 2018). "Stephen Hawking obituary". The Guardian. https://www.theguardian.com/science/2018/mar/14/stephen-hawking-obituary.
- ↑ Overbye, Dennis (14 March 2018). "Stephen Hawking, Who Examined the Universe and Explained Black Holes, Dies at 76". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2018/03/14/obituaries/stephen-hawking-dead.html. பார்த்த நாள்: 14 March 2018.
- ↑ "Physicist Stephen Hawking dies aged 76". பிபிசி. 14 March 2018. http://www.bbc.com/news/uk-43396008. பார்த்த நாள்: 14 March 2018.
- ↑ News, A. B. C. (2018-03-14). "Stephen Hawking, author of 'A Brief History of Time,' dies at 76". ABC News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-03-14.
{{cite web}}
:|last=
has generic name (help) - ↑ "Physicist Stephen Hawking dies after living with ALS for 50-plus years". SFGate. https://www.sfgate.com/world/article/Physicist-Stephen-Hawking-dies-after-living-with-12751523.php.
மூலங்கள்
- Hawking, Stephen (2013). My Brief History. Bantam. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-345-53528-3. பார்க்கப்பட்ட நாள் 9 September 2013.
- Baird, Eric (2007). Relativity in Curved Spacetime: Life Without Special Relativity. Chocolate Tree Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9557068-0-6.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Boslough, John (1989). Stephen Hawking's universe: an introduction to the most remarkable scientist of our time. Avon Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-380-70763-8. பார்க்கப்பட்ட நாள் 4 March 2012.
- Ferguson, Kitty (2011). Stephen Hawking: His Life and Work. Transworld. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4481-1047-6.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Gibbons, Gary W.; Hawking, Stephen W.; Siklos, S.T.C., eds. (1983). The Very early universe: proceedings of the Nuffield workshop, Cambridge, 21 June to 9 July, 1982. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-31677-4.
- Hawking, Jane (2007). Travelling to Infinity: My Life With Stephen. Alma. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84688-115-2.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Hawking, Stephen W. (1994). Black holes and baby universes and other essays. Bantam Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-553-37411-7.
- Hawking, Stephen W.; Ellis, George F.R. (1973). The Large Scale Structure of Space-Time. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-09906-6.
- Hawking, Stephen W. (1992). Stephen Hawking's A brief history of time: a reader's companion. Bantam Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-553-07772-8.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Hawking, Stephen W.; Israel, Werner (1989). Three Hundred Years of Gravitation. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-37976-2.
- Larsen, Kristine (2005). Stephen Hawking: a biography. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-32392-8.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Mialet, Hélène (2003). "Is the end in sight for the Lucasian chair? Stephen Hawking as Millennium Professor". From Newton to Hawking: A History of Cambridge University's Lucasian Professors of Mathematics. Cambridge University Press. pp. 425–460. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-66310-6.
{{cite book}}
: Invalid|ref=harv
(help); Unknown parameter|editors=
ignored (help) - Mialet, Hélène (2012). Hawking Incorporated: Stephen Hawking and the Anthropology of the Knowing Subject. University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-52226-5.
- Okuda, Michael; Okuda, Denise (1999). The Star trek encyclopedia: a reference guide to the future. Pocket Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-671-53609-1.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Pickover, Clifford A. (2008). Archimedes to Hawking: laws of science and the great minds behind them. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-533611-5. பார்க்கப்பட்ட நாள் 4 March 2012.
- White, Michael; Gribbin, John (2002). Stephen Hawking: A Life in Science (2nd ed.). National Academies Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-309-08410-9.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Yulsman, Tom (2003). Origins: the quest for our cosmic roots. CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7503-0765-9.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)