பிருந்தாவனம் வேணுகோபாலன்

இந்திய எழுத்தாளர்

பிருந்தாவனம் வேணுகோபாலன் (Vrindavanam Venugopalan) (24 அக்டோபர் 1935-25 டிசம்பர் 2009) மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதிய இந்திய பத்திரிகையாளரும், கல்வியாளரும் மற்றும் எழுத்தாளரும் ஆவார். வேணுகோபாலன் ‘விசுவகேரளம்’ நாளிதழின் ஆசிரியராகவும், புகழ்பெற்ற வாழ்க்கை வரலாற்றாசிரியராகவும் இருந்தார். 1957 ஆம் ஆண்டில் கேரளாவில் குடும்பக் கட்டுப்பாடு இயக்கத்தின் தொடக்கத்திலிருந்து அதன் முன்னோடியாகவும் இவர் அறியப்பட்டார். பல்வேறு தலைப்புகளில் முன்னணி செய்தித்தாள்களில் கட்டுரைகளை வெளியிட்டார்.

பிருந்தாவனம் வேணுகோபாலன்
பிறப்பு(1935-10-24)24 அக்டோபர் 1935
கொல்லம், திருவிதாங்கூர்
இறப்பு25 திசம்பர் 2009(2009-12-25) (அகவை 74)
கொல்லம்
கல்வி(மலையாளம்), ஆங்கிலம், சமூகவியல் போன்றவற்ரில் முதுகலை, முது கல்வியியல்.
வாழ்க்கைத்
துணை
எம். கே. சுகுணா பாய்
பிள்ளைகள்1 மகள் மற்றும் 4 மகன்கள்.

கல்வி பின்னணி

தொகு

வேணுகோபாலன் கொல்லம் சிறீ நாராயணா கல்லூரியில் இடைநிலைப் படிப்பை முடித்து, திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் சேர்ந்து 1960 இல் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர், கேரளப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் சமூகவியலில் முதுகலைப் பட்டமும், திருவனந்தபுரம் அரசுப் பயிற்சி கல்லூரியில் தங்கப் பதக்கத்துடன் இளம் கல்வியியல் பட்டமும், கேரள பல்கலைக்கழகத்தில் முது கல்வியியல் பட்டமும் பெற்றார். விரிவாக்கக் கல்வி, ஒலி-ஒளிக் கல்வி, மக்கள் தகவல் தொடர்பியல், முதியோர் கல்வி, குடும்பக் கட்டுப்பாடு ஆகியவற்றில் பயிற்சி பெற்றார்.

பத்திரிகையாளராக

தொகு

1950களிலிருந்து பல நாளிதழ்களில் அடிக்கடி பங்களிப்பாளராக இருந்தார். 1952 ஆம் ஆண்டில் ‘பிருந்தாவனம்’ என்ற மாதாந்திர கையெழுத்துப் பிரதியைத் தொடங்கிய இவர், “பிருந்தாவனம் வேணுகோபாலன்” என்ற புனைப்பெயரில் எழுதினார். அதே ஆண்டில் இவர் ‘வித்யார்த்திலோகம்’ என்ற மற்றொரு வார இதழைத் தொடங்கினார். பின்னர் 1911-ல் தொடங்கப்பட்ட கேரளகௌமுதி மலையாள நாளேடு மற்றும் ‘புதுஜனம் ஈவ்’ நாளிதழில் பணியாற்றினார். ‘பிரதிச்சாயா’வின் தலைமை ஆசிரியராகவும் 1980 முதல் 1990 வரை ‘விசுவகேரளம்’ நாளிதழின் தலைமை ஆசிரியராகவும் இருந்தார். அகில இந்திய சிறு செய்தித்தாள்கள் சங்கத்தின் கேரள ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துள்ளார்.

அரசு சேவை

தொகு

வேணுகோபாலன் சுகாதாரத் துறையில் எழுத்தராகவும், உள்துறை செயலகத்தில் உதவியாளராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தேசிய வேலைவாய்ப்புத் துறையில் மொழிபெயர்ப்பாளராகவும், உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகவும்,

ஈட்டுறுதி காப்பீட்டு நிறுவனத்தில் விரிவாக்க கல்வியாளர், திருச்சூர், குடும்பக் கட்டுப்பாடு கல்வி அதிகாரி (இந்தியக் குடும்பக் கட்டுப்பாடு சங்கம்) , சமூக சுகாதாரம் மற்றும் ஒழுக்க சுகாதாரத்திற்கான சங்கத்தின் மாநில அமைப்பாளர், பாலக்காடு அரசு விக்டோரியா கல்லூரியில் ஆசிரியராகவும் இருந்தார். மேலும் ,1965 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் திருவனந்தபுரம் I சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக மாநில சட்டமன்றத்திற்குப் போட்டியிட்டார். இதற்காக இவர் கேரளப் பல்கலைக்கழகத்தில் குடும்பக் கட்டுப்பாடு தகவல்தொடர்பு ஆராய்ச்சியின் மாநில சுகாதார கல்வியாளர் பதவியை விட்டு விலகினார்.

எழுத்தாளர்

தொகு

வேணுகோபாலன் மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் பல்வேறு தலைப்புகளில் புத்தகங்களை வெளியிட்டுள்ளார். குடும்பக் கட்டுப்பாடு குறித்த இவரது புத்தகங்கள் இத்துறையில் நிபுணர்களால் பெரிதும் பாராட்டப்பட்டன. இவரது வாழ்க்கை வரலாறுகள் இலக்கியத் துறைக்கு புதிய கதை வடிவத்தைக் கொண்டிருந்தன. இவரது சில புத்தகங்கள் இலக்கியவாதி முனைவர் சூரநாட்டு குஞ்சன் பிள்ளை, முனைவர் பி. கே. நாராயண பிள்ளை (துணைவேந்தர், சிறீ சங்கரா பல்கலைக்கழகம், காலடி), முனைவர் சி. ஓ. கருணாகரன், ஆர். ராமச்சந்திரன் நாயர் (இ.ஆ.ப) ஆகியோரின் முன்னுரைகளுடன் வெளியிடப்பட்டன. குடும்பக் கட்டுப்பாடு குறித்த இவரது புத்தகம் ஒன்று, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் முன்னுரையுடன் வெளிவந்தது. கே. கருணாகரன் பற்றிய இவரது வாழ்க்கை வரலாறு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேற்கோள்கள்

தொகு