பிலிப்பீனிய பருந்து கழுகு

பிலிப்பீனிய பருந்து கழுகு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
நிசேட்டசு
இனம்:
நி. பிலிப்பென்சிசு
இருசொற் பெயரீடு
நிசேட்டசு பிலிப்பென்சிசு
வேறு பெயர்கள்

பைசேயடசு பிலிப்பென்சிசு

பிலிப்பீனிய பருந்து கழுகு (Philippine hawk-eagle) அல்லது வடக்கு பிலிப்பீனிய பறவை கழுகு (Nissetus philippensis-நிசேட்டசு பிலிப்பென்சிசு) என்பது அசிபிட்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினமாகும்.[2] பல வகைப்பாட்டியல் வல்லுநர்கள் பின்சுகர் பருந்து கழுகு எனும் துணையினத்தைச் சிற்றின நிலைக்கு உயர்த்தியதாகக் கருதுகின்றனர்.[3][4][5] இது பிலிப்பீன்சில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இதன் இயற்கையான வாழிடம் வெப்ப மண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும். இது வாழிட இழப்பு மற்றும் வேட்டையாடல் ஆகியவற்றால் அச்சுறுத்தப்படுகிறது.[1]

விளக்கம்

தொகு

பிலிப்பீனிய பருந்து கழுகு என்பது அடர் பழுப்பு நிற மேல் இறகுகள் மற்றும் வெளிர் பழுப்பு வயிறு கொண்ட ஒரு பெரிய கொன்றுண்ணிப் பறவை ஆகும். தலை மற்றும் மார்பு பகுதிகள் கோடுகளும் கீழ் வயிற்றுப் பகுதியில் பட்டையும் காணப்படும். இந்தச் சிற்றினம் ஒரு வெளிப்படையான பின்னோக்கிய முகட்டினைக் கொண்டுள்ளன. இளம் பருவப் பருந்துகள் வெளிர் நிறத்தில் உள்ளன. "வீக் விக்!" அல்லது "வீக்!" என்று உச்சத்தில் குரல் எழுப்பும்.[6]

வாழிடம்

தொகு

பிலிப்பீனிய பருந்து கழுகு முதன்மை மற்றும் இரண்டாம் நிலை காடுகளில் வாழ்கிறது. அவ்வப்போது தாழ் நிலங்களிலிருந்து மலைச் சரிவுகள் மற்றும் சாகுபடி நிலங்களில் காணப்படும். பெரும்பாலான பதிவுகள் கடல் மட்டத்திலிருந்து 1,000 மீட்டருக்கும் கீழான இடங்களில் இருப்பதாகக் கூறுகின்றன.[1]

பாதுகாப்பு

தொகு

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் பிலிப்பீனிய பருந்து கழுகு அருகிய இனமாக மதிப்பிட்டுள்ளது. இதன் எண்ணிக்கை 400 முதல் 600 முதிர்ச்சியடைந்த பறவைகள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் எண்ணிக்கை இன்னும் குறைந்து வருகிறது. இந்தச் சிற்றினத்தின் முக்கிய அச்சுறுத்தல், மரங்களை வெட்டுதல், விவசாய மாற்றம் மற்றும் சுரங்க நடவடிக்கைகள் ஆகியவற்றின் விளைவாக வன வாழ்விடங்களை மொத்தமாக அகற்றுவதன் மூலம் ஏற்படும் வாழ்விட இழப்பு ஆகும். இது உணவு மற்றும் செல்லப்பிராணி வர்த்தகத்திற்காக வேட்டையாடப்படுகிறது.

இது மகிலிங் மலைத் தேசியப் பூங்கா, இசாரோக் மலைத் தேசியப் பூங்கா, கல்பாரியோ-படபாத் இயற்கை பூங்கா, வடக்கு சியரா மாட்ரே இயற்கை பூங்கா மற்றும் பதான் தேசியப் பூங்கா உள்ளிட்ட சில பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் காணப்படுகிறது. இருப்பினும், பிலிப்பீன்சின் பெரும்பாலான பகுதிகளைப் போலவே, மரம் வெட்டுதல் மற்றும் வேட்டையாடுதல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு மற்றும் அமலாக்கம் குறைவாக உள்ளது.

முன்மொழியப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் இனங்கள் அறியப்பட்ட பகுதியில் ஆய்வுகள் மற்றும் முறையான பாதுகாப்பை முன்மொழிவது அடங்கும். உயிரினங்களின் சூழலியல், குறிப்பாக வரம்பின் அளவு மற்றும் உலகளாவிய எண்ணிக்கை மதிப்பீட்டைத் தெரிவிக்கவும், வாழ்விட துண்டாக்கத்தின் தாக்கத்தை மதிப்பிடவும் உதவும் சிதறல் திறனைப் பற்றி ஆய்வு தேவைப்படுகின்றது. வேட்டையாடுதல் மற்றும் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்ட சட்டங்களை மிகவும் திறம்பட அமல்படுத்துவதை ஊக்குவித்தல். பிலிப்பீன்சில் காடுகளின் இழப்பை மதிப்பீடு செய்து, இனங்களின் வீழ்ச்சியின் விகிதம் மற்றும் இதன் மக்கள்தொகையினை அளவிடவும், உள்ளூர் மக்களை நேர்காணல் செய்வதன் மூலமும் வனவிலங்கு சந்தைகளுக்குச் செல்வதன் மூலமும் வேட்டை மற்றும் வர்த்தகத்தை ஆராய்ச்சியினை மேற்கொள்ள முன்மொழிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 BirdLife International (2016). "Nisaetus philippensis". IUCN Red List of Threatened Species 2016: e.T45015567A95139313. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T45015567A95139313.en. https://www.iucnredlist.org/species/45015567/95139313. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. Helbig, Andreas J.; Kocum, Annett; Seibold, Ingrid; Braun, Michael J. (April 2005). "A multi-gene phylogeny of aquiline eagles (Aves: Accipitriformes) reveals extensive paraphyly at the genus level" (in en). Molecular Phylogenetics and Evolution 35 (1): 147–164. doi:10.1016/j.ympev.2004.10.003. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S1055790304002921. 
  3. "Species or subspecies? The dilemma of taxonomic ranking of some South-East Asian hawk-eagles (genus Spizaetus)". Bird Conservation International 15: 99–117. 2005. doi:10.1017/S0959270905000080. 
  4. "Distribution and field identification of Philippine birds of prey: 1. Philippine Hawk-Eagle (Spizaetus philippensis) and Changeable Hawk Eagle (Spizaetus cirrhatus)". Forktail 14: 1–11. 1998. http://www.orientalbirdclub.org/publications/forktail/14pdfs/Gamauf-Philippines.pdf. 
  5. Preleuthner, M.; Gamauf, A. (1998). "A possible new subspecies of the Philippine Hawk-eagle (Spizaetus philippensis) and its future prospects.". J. Raptor Res. 32 (2): 126–135. http://www.nhm-wien.ac.at/Content.Node/forschung/1zoo/vogelsammlung/mitarbeiter/preleuthner_and_gamauf_1998_jrr.pdf. 
  6. "Philippine Hawk-Eagle". Ebird.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nisaetus philippensis
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: