பிலிப்பீன்சு கரிச்சான் குயில்

பிலிப்பீன்சு கரிச்சான் குயில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குக்குலிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
இனம்:
ச. வெலுடினசு
இருசொற் பெயரீடு
சர்னிகுலசு வெலுடினசு
சார்ப்பி, 1877

பிலிப்பீன்சு கரிச்சான் குயில் (Philippine drongo-cuckoo)(சுர்னிகுலசு வெலுடினசு) என்பது பிலிப்பீன்சில் மட்டுமே காணப்படும் குயில் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இது சர்னிகுலசு பேரினத்தினைச் சார்ந்தது. ச. லுகுப்ரிசுடன் சுர்னிகுலசு பேரினத்தின் கீழ் ஒரே சிற்றினமாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போது பெரும்பாலும் அழைப்புகள் மற்றும் இளவயது இறகுகளில் உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.

விளக்கம்

தொகு

பிலிப்பீன்சு கரிச்சான் குயில் 23 சென்டிமீட்டர்கள் (9.1 அங்) நீளமானது. கருப்பு நிற அலகானது மெல்லியதாகவும் வளைந்ததாகவும் உள்ளது. வால் மிகவும் நீளமாகவும் முட்கரண்டி போலச் சிறிது பிளவுபட்டுக் காணப்படும். இறகுகள் பெரும்பாலும் பளபளப்பான நீலம்-கருப்பு நிறத்தில் உள்ளன. இவை கீழ் இறக்கையில் ஒரு வெள்ளை பட்டை மற்றும் தொடை இறகுகள் மற்றும் வால் அடிப்பகுதியில் வெள்ளை அடையாளங்களுடன் உள்ளன. இளம் பறவைகள் பெரியவர்களை விட மந்தமானவை; ஆனால் வெள்ளை நிறத்தில் காணப்படும். இதன் இனப்பெருக்கம் பற்றி அதிகம் அறியப்படவில்லை. இது மற்ற பறவைகளின் கூடுகளில் முட்டையிடும் ஒரு குஞ்சு ஒட்டுண்ணியாக இருக்கலாம் ஆனால் அதன் புரவலன் இனம் தெரியவில்லை.

வாழிடம்

தொகு

பிலிப்பீன்சு கரிச்சான் குயில் தாழ் நிலக் காடுகளின் விதானம் மற்றும் இடைப்பகுதியில் வாழ்கிறது.

துணையினங்கள்

தொகு

பிலிப்பீன்சு கரிச்சான் குயில் சிற்றினத்தின் கீழ் இரண்டு துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவை. ச. வெ. வெலுடினசு (மிண்டனாவோ, சமர், லேயட், போகொல், சூகு தீவுக்கூட்டம்) மற்றும் ச. வெ. சாலேபேயசு (லூசோன், மிண்டனாவோ, நீக்ரோசு).

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Surniculus velutinus". IUCN Red List of Threatened Species 2016: e.T22736098A95124668. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22736098A95124668.en. https://www.iucnredlist.org/species/22736098/95124668. பார்த்த நாள்: 20 November 2021. 

வெளி இணைப்புகள்

தொகு