பிலிப்பீன்சு மாங்குயில்

பிலிப்பீன்சு மாங்குயில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
ஓ. இசுடெர்ரீ
இருசொற் பெயரீடு
ஓரியோலசு இசுடெர்ரீ
சார்ப்பி, 1877
வேறு பெயர்கள்
  • புரோடெரிபசு அக்ரோரிஞ்சசு[2]
  • ஓரியோலசு அக்ரோரிஞ்சசு[2]
  • ஓரியோலசு சாந்தோனோடசு இசுடெர்ரீ
  • சாந்தோனோடசு இசுடெர்ரீ'

பிலிப்பீன்சு மாங்குயில் (ஓரியோலசு இசுடெர்ரீ) அல்லது சாம்பல்-தொண்டை மாங்குயில் என்பது ஓரியோலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது பிலிப்பீன்சு நாட்டில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.

இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும். இதன் வரம்பில் மிகவும் பொதுவானவை, ஆனால் செபு துணையினம் (ஓ. டெ. அசிமிலிசு) கடைசியாக 1906 இல் காணப்பட்டது, இப்போது அற்றுவிட்ட இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

வகைப்பாட்டியல் தொகு

1877ஆம் ஆண்டில் ரிச்சர்ட் பவுட்லர் சார்ப்பி என்பவரால் முதலில் விவரிக்கப்பட்டது, பிலிப்பைபீன்சு மாங்குயில் ஓரியோலசு பேரினத்தைச் சேர்ந்தது. சில வகைப்பாட்டியலாளர்கள் இது கருந்தொண்டை மாங்குயிலுடன் ஒரு துணையினமாகக் கருதுகின்றனர். இந்த இரண்டு இனங்களும் இசபெலா மாங்குயிலுடன் ஒரு பெரும் சிற்றினத்தை உருவாக்கலாம்.[3]

துணையினங்கள் தொகு

ஐந்து துணையினங்கள் இச்சிற்றினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[4]

  • ஓ.இசு. சமரென்சிசு - இசுடீயர், 1890 : சமர், லெய்டே, போகொல் மற்றும் கிழக்கு மிண்டனாவோ
  • செபு கருந் தொண்டை மாங்குயில் (ஓ. இசு. அசிமிலிசு) - துவீடேல், 1878 : முதலில் ஒரு தனிச் சிற்றினமாக விவரிக்கப்பட்டது. முன்பு செபுவில் காணப்பட்டது
  • ஓ. இசு. இசுடெர்ரி - சார்ப், 1877: மஸ்பேட் மற்றும் நீக்ரோசில் காணப்பட்டது
  • ஓ. இசு. பேசிலானிகசு - ஓகில்வி-கிராண்ட், 1896 : பசிலன் மற்றும் மேற்கு மிண்டானாவோ
  • ஓ. இசு. சினெரோஜெனிசு - பெளர்ன்சு & வொர்செசுடர், 1894 : சுலு தீவுக்கூட்டம்

விளக்கம் தொகு

பிலிப்பீன்சு மாங்குயில் மஞ்சள்-பழுப்பு நிற பறவையாகும். இதன் உடலின் மேற்புறத்தில் முக்கியமாக மெல்லிய இறகுகள், சிவப்பு அலகு மற்றும் சிவப்பு கண்கள் உள்ளன.

வாழிடம் தொகு

பிலிப்பீன்சில் மட்டுமே காணப்படும், பிலிப்பீன்சு மாங்குயில் காடு, வன விளிம்பு மற்றும் மஸ்பேட், சமர், லெய்டே, செமிராரா தீவு, நீக்ரோஸ், போஹோல், மிண்டனாவ், பசிலன் மற்றும் சுலு தீவுக்கூட்டத்தின் தாழ் நிலங்களில் காணப்படுகிறது.[5]

நடத்தை மற்றும் சூழலியல் தொகு

பிலிப்பீன்சு மாங்குயில் மற்ற மாங்குயில்களைப் போலவே, முக்கியமாகப் புல், பூக்கள் மற்றும் ஒத்த உணவைக் கொண்டிருக்கின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Oriolus steerii". IUCN Red List of Threatened Species 2016: e.T22706372A94066348. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22706372A94066348.en. https://www.iucnredlist.org/species/22706372/94066348. பார்த்த நாள்: 17 November 2021. 
  2. 2.0 2.1 Arthur, Marquis of Tweedale (1877). "Contribution to the Ornithology of the Philippines, No. II". Proceedings of the Scientific Meetings of the Zoological Society of London for the Year 1877. London, England: Zoological Society of London. பக். 760. https://books.google.com/books?id=EfAKAAAAIAAJ&pg=PA760. 
  3. "Dark-throated Oriole (Oriolus xanthonotus)". www.hbw.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-02-24.
  4. "IOC World Bird List 7.1". IOC World Bird List Datasets. doi:10.14344/ioc.ml.7.1. http://www.worldbirdnames.org/ioc-lists/crossref. 
  5. Sibley, Charles Gald; Monroe, Burt Leavelle (1990). Distribution and Taxonomy of Birds of the World. New Haven, CT, USA: Yale University Press. பக். 478. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-300-04969-5. https://books.google.com/books?id=Wk-vyrNVAccC&pg=PA478.