பிலேஃபாரிசு மதராசுபாடென்சிசு

பிலேஃபாரிசு மதராசுபாடென்சிசு (தாவர வகைப்பாட்டியல்: Blepharis maderaspatensis)[1] என்பது முண்மூலிகைக் குடும்பம் குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 207 பேரினங்கள்[2]மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு பேரினமான, "பிலேஃபாரிசு" பேரினத்தில், 128 இனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.[3] அவற்றில் ஒரு இனமாக இத்தாவரம் உள்ளது. 1821 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டுள்ளது.

பிலேஃபாரிசு மதராசுபாடென்சிசு
Blepharis maderaspatensis at Kambalakonda Wildlife Sanctuary
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
B. maderaspatensis
இருசொற் பெயரீடு
Blepharis maderaspatensis
(L.) B.Heyne ex Roth, Nov. Pl. Sp. 320. (1821)
வேறு பெயர்கள்
பட்டியல்
    • Acanthodium procumbens Nees
    • Acanthus ciliaris Burm. fil.
    • Acanthus maderaspatensis L.
    • Acanthus procumbens Herb. Madr. ex Wall.
    • Blepharis abyssinica Hochst. ex A. Rich.
    • Blepharis boerhaaviifolia Pers.
    • Blepharis boerhaviifolia var. maderaspatensis (L.) Nees
    • Blepharis breviciliata Fiori
    • Blepharis maderaspatensis var. abyssinica Fiori
    • Blepharis maderaspatensis subsp. rubiifolia (Schumach.) Napper
    • Blepharis procumbens Heyne ex Roth
    • Blepharis procurrens Nees
    • Blepharis rubiifolia Schum.
    • Blepharis teaguei Oberm.
    • Blepharis togodelia Solms ex Schweinf.

வாழிடங்கள்

தொகு

பல ஆப்பிரிக்க நாடுகளிலும், இந்தியாவிலும் இவ்வினம் காணப்படுகிறது. இத்தாவரம் மூலிகையாக முன்னிற்கும் சுரப்பி மருத்துவத்தில் பயனாகிறது.[4] Blepharis maderaspatensis Subsp. maderaspatensis Var. maderaspatensis என்பது இதன் துணையினமாகவும், வகையாகவும் உள்ளது.

வளர் இயல்புகள்

தொகு

இந்த இனம் ஒழுங்கற்ற, அடித்தண்டு மட்டும் பல்லாண்டு வாழும் தாவரம் ஆகும். உகந்த சூழ்நிலையில், அத்தண்டில் இருந்து பிற பாகங்கள் உயிர்த்தெழும். இதன் தண்டு 2.5 மீட்டர் உயரம் வரை வளரும். இலைகள் மயிர்களுடன் தண்டினைச் சுற்றி அமைந்துள்ளது. இலைகளின் வடிவம் பிறை போல இருக்கிறது. இலையின் அளவு 2–9(–12.5) × 0.8–3.5(–5) செண்டி மீட்டர் வரை, ஒவ்வொரு தண்டு முடிச்சிலும் அமைந்துள்ளன. பூக்கள் மஞ்சரியாக உள்ளன. ஒவ்வொரு வெள்ளைநிறப் பூவும் 1/2 அங்குலம் நீளமுடன் கொத்தாக அமைந்துள்ளன.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Blepharis maderaspatensis". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 10 ஏப்பிரல் 2024.
    "Blepharis maderaspatensis". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 10 ஏப்பிரல் 2024.
  2. "முண்மூலிகைக் குடும்பம்". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 10 ஏப்பிரல் 2024.
    "முண்மூலிகைக் குடும்பம்". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 10 ஏப்பிரல் 2024.
  3. "Blepharis". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 10 ஏப்பிரல் 2024.
    "Blepharis". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 10 ஏப்பிரல் 2024.
  4. https://efloraofindia.com/2011/02/10/blepharis-maderaspatensis/
  5. Al-Asmari, Abdulrahman Khazim; Abbasmanthiri, Rajamohamed; Osman, Nasreddien Mohammed Abdo; Al-Asmari, Byan Abdulrahman (July 29, 2020). "Endangered Saudi Arabian plants having ethnobotanical evidence as antidotes for scorpion envenoming". Clinical Phytoscience 6 (1): 53. doi:10.1186/s40816-020-00196-7. https://doi.org/10.1186/s40816-020-00196-7. 

இதையும் காணவும்

தொகு