பில்லா (2009 திரைப்படம்)
மெஹர் ரமேஷ் இயக்கி 2009 ஆம் ஆண்டு இந்தியவின் தெலுங்கு- மொழி அதிரடித் திரைப்படம் பில்லா . இப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, நமிதா கபூர் ஆகியோர் நடித்துள்ளனர்.[1] அக்டோபர் 2008 இல் படப்பிடிப்பைத் தொடங்கிய இப்படம் 3 ஏப்ரல் 2009 இல் வெளியிடப்பட்டது.[2] இதே பெயரில் 2007ல் வெளியான தமிழ் திரைப்படத்தின் மறு ஆக்கம் இப்படமாகும். இது 1978 ஆம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படமான டானின் மறு ஆக்கம் ஆகும். என்.டி.ஆர் நடித்து 1979 ஆம் ஆண்டு வெளியான யுகந்தர் திரைப்படத்திற்குப் பிறகு 1978 ஆம் ஆண்டு இந்தி திரைப்படமான டானின் இரண்டாவது தெலுங்கு மறு ஆக்கம் இதுவாகும். நடிகை ஜெயசுதா இந்த படத்தில் ஜானகியாக சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். யுகந்தரில் இவர் அனுஷ்கா ஷெட்டி நடித்த கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
கதை
தொகுபன்னாட்டு காவல் துறையின் சர்வதேச குற்றப் பட்டியலில் உள்ள டான் பில்லா(பிரபாஸ்) மலேசியாவில் மறைந்து கொண்டு செயல்படுகிறார். பன்னாட்டு காவல் துறையில் பணிபுரியும் ஏ.சி.பி கிருஷ்ணமூர்த்தி ( கிருஷ்ணம் ராஜு ) கடந்த சில ஆண்டுகளாக பில்லாவைத் தேடுகிறார்.
காவல்துறையினரால் துரத்தப்பட்டபோது, ஒரு விபத்துக்குப் பிறகு பில்லா பலத்த காயமடைந்து இறந்து விடுகிறார். ஏ.சி.பி கிருஷ்ணமூர்த்தி இரகசியமாக பில்லாவுக்கு இறுதி சடங்கு நடத்துகிறார். பில்லாவின் மரணம் குறித்து யாருக்கும் தெரியாததால் பில்லாவைப் பிடிக்க ஏ.சி.பி கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து பணியாற்ற பன்னாட்டு காவல் துறை அதிகாரி தர்மேந்திரா ( ரஹ்மான் ) நியமிக்கப்பட்டுள்ளார். இச்சமயத்தில் இறந்த பில்லாவைப் போன்ற உருவத்தில் உள்ள விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஒரு குட்டி திருடன் சுவாமி ரங்காவிடம் (பிரபாஸ்) பில்லாவாக நடித்து பில்லாவின் கும்பலுக்குள் ஊடுருவுமாறு ஏ.சி.பி கிருஷ்ணமூர்த்தி கேட்கிறார். பதிலுக்கு அவர் ரங்கா தத்தெடுத்த குழந்தைகள், லட்சுமி மற்றும் ஸ்ரீனு ஆகியோரை ஹைதராபாத்தில் முறையான கல்வியைப் பெற உதவி செய்கிறார்.
ஏ.சி.பி கிருஷ்ணமூர்த்தி ரங்காவுக்கு பயிற்சி அளித்து, நினைவாற்றலை இழந்த ஒரு நபராக அவரை பில்லா கும்பலுக்கு திருப்பி அனுப்புகிறார். மெதுவாக ரங்கா பில்லாவின் கும்பலைப் பற்றி அறியத் தொடங்குகிறார். மேலும் பில்லாவின் முதலாளியான டெவில் உடன் தொலைபேசியில் பேசுகிறார். ஒரு விருந்தில் பில்லாவின் கும்பல் சந்திப்பது குறித்து ரங்கா ரகசியமாக ஏ.சி.பி கிருஷ்ணமூர்த்திக்கு தகவல்களை அளிக்கிறார். விருந்தில் துப்பாக்கிச் சூடு நிகழ்கிறது மற்றும் ஏ.சி.பி கிருஷ்ணமூர்த்தி கொல்லப்படுகிறார். அதன் பின்னர் ரங்காவின் நிலை மற்றும் பில்லா கும்பலை காவல் துறையினர் கைது செய்தனரா என்றவாறு கதை செல்கிறது.
தயாரிப்பு
தொகுதிரு. ஜீவிக்கு மெஹர் ரமேஷ் ஐடியல்பிரைன்.காம் தளத்தில் அளித்த பேட்டியை அடிப்படையாகக் கொண்டது பின்வருமாறு.
வளர்ச்சி
தொகுராமோஜி பிலிம் சிட்டியில் காந்த்ரிக்கு வயசுநாமி பாடல் படப்பிடிப்பின் போது, நடிகர் என்.டி.ஆர் என்னிடம் அவருக்கு சென்னையிலிருந்து அனுப்பப்பட்ட தமிழ் பில்லா படம் பார்க்க ஆர்வமாக இருக்கிறீர்களா என்று கேட்டார். படம் நமக்கு பிடித்திருந்தால், காந்திரி படத்திற்குப் பிறகு உடனடியாக தெலுங்கில் மறு ஆக்கம் செய்யலாம் என்று அவர் கூறினார். நான் படத்தை நேசித்தேன், ஆனால் என்.டி.ஆர் தனது வாழ்க்கையின் இந்த கட்டத்தில் பாத்திரத்திற்கு பொருந்தாது என்று கருதி, அதைப் பற்றி வெளிப்படையாக அவரிடம் கூறினார்.
பில்லாவை மறு ஆக்கம் (மறு ஆக்கம்) செய்யும் எண்ணம் எனக்கு இன்னும் இருந்தது. அதே தயாரிப்பாளர் ரவி தேஜா கதாநாயகனாக நடித்து மறு ஆக்கம் செய்யும் திட்டத்தை கொண்டு வந்தார். ரவி தேஜாவை மனதில் கொண்டு மீண்டும் படம் பார்த்தேன். அவருக்கு ஏற்றவாறு சில காட்சிகளை மாற்றியமைத்தேன். ரவி தேஜா கதாநாயகனாக அதிக செலவால் படம் இயங்காது என்று நான் கருதினேன். எனவே நாங்கள் திரைப்படத்தை உருவாக்க வேண்டாம் என்று கூட்டாக முடிவு செய்தோம்.
குறிப்புகள்
தொகு- ↑ Prabhas Billa in panache – Telugu Movie News. Indiaglitz.com (30 September 2008). Retrieved on 2015-08-03.
- ↑ Prabhass Billa starts rolling – Telugu Movie News. Indiaglitz.com (10 October 2008). Retrieved on 2015-08-03.