பிழை

2020இல் வெளியான தமிழ் திரைப்படம்

பிழை (Pizhai) என்பது ராஜவேல் கிருஷ்ணாவின் அறிமுக இயக்கத்தில் 2020ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி திரைப்படமாகும்.[1] இந்த படத்தில் ரமேஷ், அப்பா நசாத், புதுமுகம் கோகுல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிழை
இயக்கம்இராஜவேல் கிருஷ்ணா
தயாரிப்புஆர். தாமோதரன்
இசைஎப். எஸ். பைசல்
நடிப்புரமேஷ்
அப்பா நசாத்
கோகுல்
ஒளிப்பதிவுபாக்கி
படத்தொகுப்புஇராம் கோபால்
கலையகம்டர்னிங் பாயின்ட் புரொக்டன்ஷன்ஸ்
வெளியீடு3 சனவரி 2020 (2020-01-03)
ஓட்டம்115 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச் சுருக்கம் தொகு

பாடம் படிக்க விரும்பாத மூன்று சிறுவர்கள் தங்கள் வீடுகளை விட்டு ஓடிவிடுவது பற்றிய படம். வெளி உலகில் அவர்களின் அனுபவங்கள் அவர்களின் தவறுகளை உணர்த்துகின்றன. ஒரு மனிதன் அவர்களை அணுகி வேலை செய்யச் சொல்கிறான். அவர்கள் தவறாக நடத்தப்படுவதாக கருதுகிறார்கள். தப்பிக்க முயற்சிக்கும்போது, அவர்கள் பிரிந்து விடுகின்றனர். அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் இதே போன்ற துன்பங்களை அனுபவிக்கிறார்கள். இரண்டு சிறுவர்களை காவலர்கள் கண்டுபிடிக்கும் போது மூன்றாவது சிறுவனின் வாழ்க்கை முடிவுற்றதை அறிகிறார்கள்.[2]

நடிப்பு தொகு

தயாரிப்பு தொகு

இந்த படத்தில் ரமேஷ், நசாத், கோகுல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[2] சார்லி, மைம் கோபி, ஜார்ஜ் மரியன் ஆகியோர் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க முடியாத பெற்றோர்களாக படத்தில் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சித்தூர், திருத்தணியில் நடந்தது.[3][4] படத்துக்கு எஃப் எஸ் பைசல் இசையமைத்திருந்தார்.[5]

வெளியீடு தொகு

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஐந்து நட்சத்திரங்களில் ஒரு நட்சத்திரைத்தை மட்டுமே கொடுத்தது. மேலும், "புதிய காட்சிகளின் பற்றாக்குறையும், தேவையற்ற துணைக் கதைகளின் எண்ணிக்கையும் பார்வையாளர்களிடம் எந்த ஆர்வத்தையும் ஏற்படுத்தாது" என்று கூறியது.[6] தி டெக்கன் குரோனிக்கள் படத்துக்கு ஐந்து நட்சத்திரங்களில் இரண்டரையை கொடுத்து.[7]

சான்றுகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிழை&oldid=3709510" இருந்து மீள்விக்கப்பட்டது