பி. சந்தியா

இந்தியக் காவல் அதிகாரி

பி. சந்தியா (B. Sandhya; பிறப்பு 25 மே 1963) இந்தியக் காவல் பணி அதிகாரியாவார். தற்போது கேரளா தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள், வீட்டு காவலர் மற்றும் பாதுகாப்புத் துறையின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.[1] [2] 2007 ஆம் ஆண்டில் எடச்சேரி விருது உட்பட பல விருதுகளை வென்ற இலக்கியப் பங்களிப்புகளுக்காகவும் இவர் அறியப்படுகிறார்.[3]

பி. சந்தியா
பிறப்பு25 மே 1963 (1963-05-25) (அகவை 61)
பாலை, கோட்டயம், கேரளம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிகாவல்துறை அதிகாரி
செயற்பாட்டுக்
காலம்
1988 – தற்போது வரை
பெற்றோர்
  • எஸ். பாரத்ததாஸ்
  • கார்த்தியாயினி அம்மா
வாழ்க்கைத்
துணை
மது குமார்
பிள்ளைகள்1


சொந்த வாழ்க்கை

தொகு

சந்தியா, எஸ். பாரததாஸ்-வி.எல். கார்த்தியாயினி அம்மா ஆகியோருக்கு கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலையில் பிறந்தார். கேரளப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் கே.மதுக்குமாரை மணந்தார். இவர்களுக்கு ஹேமா என்ற மகள் உள்ளார்.

கல்வி

தொகு

விலங்கியலில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றார். ஆத்திரேலியாவின் வல்லங்கொங் பல்கலைக்கழகத்தில் மனித வள மேலாண்மை பயிற்சியையும்,புதுவைப் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலை பட்டயப்படிப்பிலும் தேர்ச்சி பெற்றார். பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகத்தில் தனது முனைவர் ஆராய்சியை முடித்தார்.[4] இவரது ஆய்வுக் கட்டுரை "குற்றவியல் நீதி அமைப்புக்கு பெண்களின் அணுகல் மற்றும் பெண்களை நோக்கிய காவல் பணியாளர்களின் வாடிக்கையாளர் நோக்குநிலை" என்ற தலைப்பில் இருந்தது.

தொழில்

தொகு

சந்தியா, 1988 இல் இந்தியக் குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, கேரள மாநில கூட்டுறவு மீன்வள கூட்டமைப்பின் திட்ட அலுவலராக தனது பணியைத் தொடங்கினார். இவர் உதவி காவல் கண்காணிப்பாளர், ஷொர்ணூர், இணை காவல் கண்காணிப்பாளர், ஆலத்தூர், காவல்துறைக் கண்காணிப்பாளர், குற்றப் புலனாய்வுத் துறை, கண்ணூர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கொல்லம் மற்றும் திருச்சூர், உதவிக் காவல் தலைமை இயக்குநர், திருவனந்தபுரம், துணை காவல் தலைமை இயக்குநர், குற்ற விசாரணை, தெற்கு சரகம், திருவனந்தபுரம், காவல் துறை தலைமை இயக்குநர் மத்திய மண்டலம், எர்ணாகுளம் போன்ற பதவிகளை வகித்தார். 2013 முதல் சந்தியா காவல்துறை கூடுதல் இயக்குநர் பதவியை வகிக்கிறார்.[5]

விசாரணை அதிகாரி

தொகு

2006ஆம் ஆண்டில், முன்னாள் கேரள பொதுப்பணித்துறை அமைச்சர் பி. ஜே ஜோசப் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஏற்பட்ட குற்றச்சாட்டின் விசாரணையில் ஈடுபட்டார். 2009இல், சந்தியா சமூகக் கொள்கையின் வெற்றிகரமான மாதிரியான ஜனமைத்திரி சுரக்சா திட்டத்தை (கேரளாவின் சமூகக் காவல் திட்டம்) செயல்படுத்தினார்.[6]இவர் காவலர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் 'மைக்ரோ மிஷன் 02' திட்டத்தின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.[7] 2016 இல், இவர் ஜிசா கொலை வழக்கில் விசாரணை குழுவை வழிநடத்தினார்.[8]

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

தொகு

2010 ஆம் ஆண்டில், அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச மகளிர் காலர்கள் சங்கம் (IAWP), சந்தியாவுக்கு சர்வதேச சிறப்பு உதவித்தொகையை வழங்கியது. 2006 ஆம் ஆண்டில், கேரளா காவல்துறையினர் சந்தியாவுக்கு புகழ்பெற்ற சேவைக்காக ஜனாதிபதி போலீஸ் பதக்கத்தை வழங்கினர். [9] இவரது புதினமான நீலகொடுவெளியின் காவல்காரி 2007இல் எடச்சேரி விருதை வென்றது. கோபாலகிருஷ்ணன் கோலாழி விருது- 2001, அபுதாபி சக்தி விருது -2012, குஞ்சுண்ணி புரஸ்காரம் -2013,[10] ஈ.வி.கிருஷ்ணபிள்ளை சாகித்ய புரஸ்காரம் -2019, புனலூர் பாலன் புரஸ்காரம்- 2019 ஆகியவற்றையும் இவர் பெற்றுள்ளார். 

இலக்கியப் பணி

தொகு

சந்தியா பல இலக்கிய புத்தகங்களையும், பல அறிவியல் கட்டுரைகளையும் 'போலீஸ் சயின்ஸ்' என்ற பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளார். கூடுதலாக, கேரள காவல்துறையின் தலைமை இயக்குநர் வெளியிட்ட கேரளா காவல்துறையின் சுருக்கமான வரலாறு என்ற நூலை திருத்தி வெளியிட்டார்.[11] 'கேரள காவல்துறையினரின் வரலாறு' என்ற என்ற இணையதளத்தையும் இவர் வடிவமைத்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "ADG P B. Sandhya's poem lands her in trouble". Madhyamam. 3 May 2013. பார்க்கப்பட்ட நாள் 15 June 2015.
  2. "Mudhol hound is as good as a Belgian Malinois - Kochi News - Times of India". https://timesofindia.indiatimes.com/city/kochi/mudhol-is-as-good-as-a-belgian-malinois/articleshow/78005130.cms. 
  3. "Edasseri award". www.edasseri.org. Archived from the original on 2020-02-19. பார்க்கப்பட்ட நாள் 2020-09-09.
  4. "Dr. B Sandhya IPS - Google Scholar". scholar.google.com. பார்க்கப்பட்ட நாள் 2020-09-09.
  5. Staff, TNM. "ADGP Sandhya transferred, officer dealing with high profile cases including Dileep's". www.thenewsminute.com. பார்க்கப்பட்ட நாள் 2019-05-25.
  6. "2010 Award Recipients". International Association of Women Police. Archived from the original on 11 November 2012. பார்க்கப்பட்ட நாள் 5 March 2013.
  7. "MM 02 members" (PDF). Bureau of Police Research & Development. 2020-09-09.
  8. "Jisha rape and murder: ADGP B Sandhya to head investigation team". The News Minute (in ஆங்கிலம்). 2016-05-26. பார்க்கப்பட்ட நாள் 2020-10-19.
  9. "Police Medal Winners". Kerala Police. Archived from the original on 15 February 2013. பார்க்கப்பட்ட நாள் 5 March 2013.
  10. "Award for B Sandhya". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-09-09.
  11. "KPA expects changes in police force" இம் மூலத்தில் இருந்து 2006-06-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060621123343/http://www.hindu.com/2006/06/14/stories/2006061423130300.htm. 

வெளி இணைப்புகள்

தொகு

big>* ""Dr. B.Sandhya IPS Interview"-Kma news". Kma news.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._சந்தியா&oldid=3935101" இலிருந்து மீள்விக்கப்பட்டது