பீசாங் தீவு
பீசாங் தீவு அல்லது வாழைப்பழத் தீவு (மலாய்: Pulau Pisang Johor; ஆங்கிலம்:Johor Pisang Island; சீனம்: 香蕉屿; சாவி: باڤولاو ڤيسڠ) என்பது மலேசியா, ஜொகூர், பொந்தியான் மாவட்டம், பொந்தியான் கிச்சில், ஜொகூர் நீரிணையில் உள்ள ஒரு தீவாகும்.
ஜொகூர் பீசாங் தீவு | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | மலாக்கா நீரிணை பொந்தியான் கிச்சில், பொந்தியான் மாவட்டம் ஜொகூர் மலேசியா |
ஆள்கூறுகள் | 1°29′03″N 103°13′17″E / 1.48417°N 103.22139°E |
தீவுக்கூட்டம் | தீபகற்ப மலேசியா; மலேசியா |
மொத்தத் தீவுகள் | 1 |
பரப்பளவு | 0.3 km2 (0.12 sq mi) |
நீளம் | 1.78 km (1.106 mi) |
உயர்ந்த ஏற்றம் | 80 m (260 ft) |
நிர்வாகம் | |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் |
பொந்தியான் கிச்சில் நகரத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், பெனுட் நகரத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இங்கு ஒரு கலங்கரை விளக்கம் உள்ளது. அதன் பெயர் புலாவ் பீசாங் கலங்கரை விளக்கம். பரபரப்பான சிங்கப்பூர் நீரிணையின் மேற்கு நுழைவாயிலில் கப்பல்களை வழிநடத்தும் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது.[1]
பொது
தொகுமலேசியாவிற்குச் சொந்தமான அந்தத் தீவின் கலங்கரை விளக்கத்தை, தற்போது சிங்கப்பூர் அரசாங்கம் பராமரித்து வருகிறது. இருப்பினும் அந்த தீவு, மலேசியப் பிரதேசம் என்பதை சிங்கப்பூர் அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்துள்ளது.[2]
1900-ஆம் ஆண்டில் அப்போதைய ஜொகூர் சுல்தானான, சுல்தான் இப்ராகிமிற்கும் பிரித்தானிய சிங்கப்பூர் அரசாங்கத்திற்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தை தொடர்ந்து புலாவ் பீசாங் கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது.[3]
புலாவ் பீசாங் கலங்கரை விளக்கம்
தொகு2003-ஆம் ஆண்டில், சிங்கப்பூரின் அப்போதைய வெளியுறவு அமைச்சர் சண்முகம் ஜெயக்குமார், புலாவ் பீசாங்கின் இறையாண்மை மலேசியாவிடம் உள்ளது என்பதை ஒப்புக்கொண்டார். அந்த இறையாண்மையை அவர் மறுக்கவில்லை. இருப்பினும், புலாவ் பிசாங் கலங்கரை விளக்கத்தின் நிர்வாகம் சிங்கப்பூருடன் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.[4][5]
2010-ஆம் ஆண்டில், பீசாங் தீவு என்பது ஜொகூர் சுல்தானகத்தின் ஒரு பகுதி என்றும், அது ஜொகூர் அரசிதழில் வெளியிடப்படும் என்றும் ஜொகூர் அரசாங்கம் அறிவித்தது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ ISA, MOHD HAIKAL (28 January 2023). "The small island is located not far from Pontian, which is about 12 kilometers (km)". Kosmo Digital. பார்க்கப்பட்ட நாள் 17 March 2024.
- ↑ "Pulau Pisang won't be another Batu Puteh". New Straits Times. 27 May 2008. பார்க்கப்பட்ட நாள் 16 May 2014.
- ↑ Pulau Pisang: Persekutuan runding dengan kerajaan Johor, mSTAR Online.
- ↑ Rusli, Mohd Hazmi Mohd (10 July 2019). "Singapore lighthouse on a Malaysian island - New Straits Times". NST Online (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
- ↑ "BILATERAL RELATIONS WITH MALAYSIA: WATER AND OTHER ISSUES".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Pulau Pisang to be gazetted as part of Johor". www.asiaone.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-08.