பீனைல் ஐசோதயோசயனேட்டு
பீனைல் ஐசோதயோசயனேட்டு (Phenyl isothiocyanate) என்பது C7H5NS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். உயர்திற நீர்ம வண்ணப் பிரிகையின் தலைகீழ் கட்டத்தில் இச்சேர்மம் வினைப்பொருளாகப் பயன்படுகிறது. ஆர்த்தோ-பிதாலால்டிகைடைக் காட்டிலும் பீனைல் ஐசோதயோசயனேட்டு குறைவான உணர்திறன் கொண்டது ஆகும். முழுவதுமாக இதை தானியக்கமாக்க செயல்படுத்த முடியாது. மேலும், பீனைல் ஐசோதயோசயனேட்டை ஆர்த்தோ-பிதாலால்டிகைடைப் போலன்றி இரண்டாம் நிலை அமீன்களை பகுப்பாய்வு செய்ய பயன்படுத்தலாம்.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
ஐசோதயோசயனேட்டோபென்சீன்[1] | |||
வேறு பெயர்கள்
பீனைல் ஐசோதயோசயனேட்டு[1]
தயோகார்பானில் | |||
இனங்காட்டிகள் | |||
103-72-0 | |||
ChemSpider | 7390 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 7673 | ||
| |||
UNII | 0D58F84LSU | ||
பண்புகள் | |||
C7H5NS | |||
வாய்ப்பாட்டு எடை | 135.19 கி/மோல் | ||
தோற்றம் | நிறமற்ற நீர்மம், கார நெடி[2] | ||
அடர்த்தி | 1.1288 கி/செ.மீ3[2] | ||
உருகுநிலை | −21 °C (−6 °F; 252 K)[3] | ||
கொதிநிலை | 221[3] °C (430 °F; 494 K)[3] | ||
மிகக்குறைவு [2] | |||
கரைதிறன் | எத்தனால், ஈதர்[3] | ||
-86.0•10−6செ.மீ3/மோல் | |||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | நச்சு, தீப்பிடித்து எரியும்[2] | ||
GHS pictograms | [3] | ||
GHS signal word | அபாயம்[3] | ||
H331, H311, H301, H314, H317, H334, H361[3] | |||
P301+310, P280, P312, P302+350, P301+330+331, P305+351+338, P310, P261, P304+341, P342+311, P280[3] | |||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
எட்மான் வினைப்பொருள் என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் எட்மான் தரமிறக்க வினையில் பயன்படுத்தப்படுகிறது. வணிக ரீதியாகவும் இச்சேர்மம் கிடைக்கிறது. அனிலினுடன் கார்பன் டைசல்பைடையும் அடர் அமோனியாவையும் சேர்த்து வினைபுரியச் செய்தால் முதல் படிநிலையில் அனிலினுடைய அமோனியம் டைதயோகார்பமேட்டு உப்பு உருவாகிறது. மேலும் இது காரீய(II) நைட்ரேட்டுடன் வினைபுரிந்து பீனைல் ஐசோதயோசயனேட்டு உருவாகிறது :[4].
அனிலின், சோடியம் நைத்திரைட்டு, தாமிர(I) தயோசயனேட்டு ஆகிய வேதிச் சேர்மங்களைப் பயன்படுத்தி சேண்டுமேயர் வினையின் வழியாகவும் இதைத் தயாரிக்கலாம்.
லினோகிளரைடு தயாரிக்கும் வினையில் பீனைல் ஐசோதயோசயனேட்டு பயன்படுத்தப்படுகிறது. [5]
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. p. 665. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069-FP001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4.
- ↑ 2.0 2.1 2.2 2.3 http://www.caslab.com/Phenyl_isothiocyanate_CAS_103-72-0/
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 http://www.chemexper.com/cheminfo/servlet/org.dbcreator.MainServlet?query=entry._entryID%3D1288243&target=entry&action=PowerSearch&format=google2008
- ↑ F. B. Dains, R. Q. Brewster, and C. P. Olander. "Phenyl isothiocyanate". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV1P0447.; Collective Volume, vol. 1, p. 447
- ↑ U.S. Patent 42,11,867A