புக்கிட் பாயோங்

புக்கிட் பாயோங் (ஆங்கிலம்: Bukit Payong; மலாய்: Bukit Payong) என்பது மலேசியா, திராங்கானு மாநிலத்தில், மாராங் மாவட்டத்தில் (Marang District) உள்ள ஒரு கிராமப்புற நகரம். திராங்கானு மாநிலத்தின் தலைநகரான கோலா திராங்கானு (Kuala Terengganu) மாநகரில் இருந்து 48 கி.மீ.; டுங்குன் (Bandar Dungun) நகரில் இருந்து 12 கி.மீ.; தொலைவில் உள்ளது. கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை இந்த கிராமப்புற நகரத்தின் வழியாகச் செல்கிறது.[2]

புக்கிட் பாயோங்
Bukit Payong
 திராங்கானு
புக்கிட் பாயோங் பள்ளிவாசல்
புக்கிட் பாயோங் பள்ளிவாசல்
Map
புக்கிட் பாயோங் is located in மலேசியா
புக்கிட் பாயோங்
      புக்கிட் பாயோங்
ஆள்கூறுகள்: 4°46′0″N 103°12′0″E / 4.76667°N 103.20000°E / 4.76667; 103.20000
நாடு மலேசியா
மாநிலம் திராங்கானு
மாவட்டம் மாராங்
பரப்பளவு
 • மொத்தம்87 km2 (34 sq mi)
மக்கள்தொகை
 (2015)[1]
 • மொத்தம்28,557
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மஅஞ்சல் குறியீடு
21400
தொலைபேசி+6-09-6
போக்குவரத்து எண்T

இந்த நகரம் கோலா திராங்கானு மாவட்டத்தின் எல்லையில் உள்ளது. இங்கு அரசு வேளாண் நிறுவனம் (Jabatan Pertanian); விலங்கு பாதுகாப்பு நிறுவனம் (Jabatan Haiwan); பயிர்தொழில் உற்பத்தி நிறுவனம் (Jabatan Peladang); அஞ்சலகம் (Pejabat Pos); போன்ற பல அரசாங்கத் துறை நிறுவனங்கள் உள்ளன.

பொது

தொகு

கம்போங் செபராங் சுங்கை பெசுட்

தொகு

புக்கிட் பாயோங் பகுதியில் ஓர் உயரமான குன்றின் உச்சியில் குடை போன்ற வடிவிலான பெரிய நிழல் மரம் இருந்ததாகவும்; அதனால் இந்தக் கிராமம் அதன் பெயரைப் பெற்றது எனவும் இங்குள்ள கிராமவாசிகள் கூறுகின்றனர்.[3]

கம்போங் புக்கிட் பாயோங் (Kampung Bukit Payong) எனும் பாயோங் கிராமம் 1960-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. முன்பு அப்பகுதியில் கம்போங் செபராங் சுங்கை பெசுட் (Seberang Sungai Besut) எனும் பழைய பெரும் கிராமத்தில் கம்போங் டெங்கர் (Kampung Denger), கம்போங் குளுகோர் (Kampung Gelugur), கம்போங் கோபெக் (Kampung Gobek), கம்போங் தெனாங் (Kampung Tenang), கம்போங் டூசுன் பூபு (Dusun Bubu) மற்றும் கம்போங் தெலுக் (Kampung Teluk) எனும் சிறு கிராமங்கள் இருந்தன.[4]

நடுத்தர அளவிலான கிராமம்

தொகு

இந்தச் சிறு கிராமங்களின் கிராமவாசிகள் இடம் பெயர்ந்ததால் புக்கிட் பாயோங் எனும் ஒரு புதிய குடியேற்றம் உருவானது. புக்கிட் பாயோங் ஒரு சிறிய மக்கள் தொகை கொண்ட ஒரு நடுத்தர அளவிலான கிராமமாகும். இங்கு வசிக்கும் சராசரி மக்கள் தங்கள் குடும்பங்களைக் காப்பாற்ற ரப்பர் மரங்களைப் பயிரிட்டு வருகின்றனர்.[4]

புக்கிட் பாயோங்கின் மொத்த மக்கள் தொகையில் 30 விழுக்காட்டு பேர் அரசு ஊழியர்களாகவும், தனியார்த் துறை தொழிலாளர்களாகவும் மற்றும் சிறு வணிகர்களாகவும் பணிபுரிகின்றனர்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Bukit Payong is a town in the Marang district of Terengganu, on the east coast of peninsular Malaysia. The population comprises 95.85% Malays, 4% Chinese and 0.15% of other races". பார்க்கப்பட்ட நாள் 1 July 2023.
  2. "Directions from Kuala Terengganu to Bukit Payong". www.distancesfrom.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 July 2023.
  3. 3.0 3.1 Saya, Profile. "The village takes its name from a hill that is the highest in the area with a large and shady tree shaped like an umbrella at its peak. So the residents have agreed to give the name "Bukit Payong"". பார்க்கப்பட்ட நாள் 1 July 2023.
  4. 4.0 4.1 "The town is located to the southwest of Kuala Terengganu on Route 14. The name Bukit Payong means "Umbrella Hill"". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 July 2023.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புக்கிட்_பாயோங்&oldid=4034323" இலிருந்து மீள்விக்கப்பட்டது