புங்கந்துறை

புங்கந்துறை கொங்கு நாட்டில் உள்ள திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர்.[1] இதில் இரு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன அவை தாராபுரம் மற்றும் காங்கயம் சட்டமன்றத் தொகுதி ஆகியவை ஆகும்.

இதில் அடுக்கல் கொத்தனூர், மண்யதிட்டுபாளையம், செல்லாண்டியம்மன் நகர், கரைப்பாளையம், புங்கந்துறை, சல்லிமேட்டுபுதூர், அடுக்கல்பாளையம், வெங்கிக்கல்பாளையம், வலசுபாளையம் மற்றும் சொக்கநாதபுரம் ஆகிய சிற்றூர்கள் உள்ளன.

கொங்கு வேளாளர் மக்களே பெரும்பான்மையானவர்கள். இவர்களது முக்கிய குலதொழில் வேளாண்மை. நாடார்கள், தலித்களும் உள்ளனர். அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் அ.கொத்தனூர் இவ்வூரில் ஓர் ஆரம்பப் பள்ளி உள்ளது. புங்கந்துறையில் ஓர் ஆரம்பப் பள்ளி உள்ளது.

இந்த கிராமத்தில் சேரன் குலத்தோர்களே ஆதிகனமானவர்கள். இவர்களது குலதெய்வமாக அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டியம்மன் திருக்கோவில் உள்ளது. இது தவிர அருகாமையில் தென்னீஸ்வரர் ஆலயம் உள்ளது.

இதன் அருகில் தாராபுரம், காங்கயம், வெள்ளகோவில், பல்லடம், ஒட்டன்சத்திரம் ஆகிய நகரங்களும் உள்ளன.[2]

புங்கத்துறை கிராமத்தின் கொங்கு வேளாள சேரகுல வழிபாட்டு சிறப்புகள்:

1.புங்கந்துறை கொத்தனூர் அருள்மிகு செல்லாண்டி அம்மன் ஆலயம்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டாரம். (புங்கன் துறை) கொத்தனூர் பகுதியிலே வாழும் சேரன் கூட்டத்தார்,

கொத்தனூர் செல்லாண்டியம்மனைக் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

இவர்கள் வழிபடும் செல்லாண்டியம்மன், காவிரித் தென் கரையிலேயுள்ள மதிள்கரை செல்லாண்டியம்மனின் நகலாகும்.

2.கொத்தனூர்--அருள்மிகு. உமைய பார்வதி அம்மன் கொத்தனூர்---

கொத்தனூர் சேரன் குலத்திலே ஒரு பத்தினிப் பெண், கணவன் இறந்ததும் தீப்பாய்ந்து உயிர் நீத்தாள். அந்தப்பத்தினிப் பெண்ணின் நினைவாக, செங்கல்லை அடையாளமாக வைத்து வழிபாடு செய்வார்கள்.

செங்கல் வழிபாட்டுக்கு உரிய தெய்வமாகக் கருதப்பட்டதால், செங்கல் பொடியில் பல் துலக்கமாட்டார்கள். கருங்கல்லால் வீடு கட்டிக்கொள்வார்கள்: குடியிருக்கும் கட்டிடத்திற்குச் செங்கல்லைக் கட்டிடப் பொருளாகப் பயன்படுத்தமாட்டார்கள். இது இன்றுவரை நடைமுறையில் உள்ளது.

ஆடி மாதம் தலைஆடி அன்றும், தை முதல் நாளும் முக்கிய வழிபாட்டு நாட்கள் ஆகும். மேலும் ஒவ்வொரு அமாவாசை அன்றும் சிறப்பாக வழிபட்டு வருகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் சிவன் ராத்திரி அமாவாசை அன்று பொங்கல் வைத்து சிறப்பாக வழிபாடு செய்து வருகிறார்கள்.

தென்கரைநாட்டிலே, சிறப்பான குடிமக்களாக வாழ்ந்து வரும் சேரன் கூட்டத்தார்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புங்கந்துறை&oldid=3861300" இலிருந்து மீள்விக்கப்பட்டது